சிக்கன் சாப்பீஸ் (வேறு முறை)

தேதி: July 8, 2006

பரிமாறும் அளவு: 3 அல்லது 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

கோழி - அரை கிலோ
வெங்காயம் - அரை கிலோ
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 5 அல்லது 6
மல்லிக்கீரை - ஒரு கட்டு
எலுமிச்சைப்பழம் - பாதி
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
எண்ணெய் - 100 மில்லி
உப்பு - ஒரு டீஸ்பூன்


 

முதலில் கோழிக்கறியில் மிளகாய்தூள், மசாலாத்தூள், மஞ்சள் தூள், பாதி இஞ்சி பூண்டு விழுது, பாதி உப்பு அனைத்தையும் போட்டு நன்றாக பிரட்டி அரை மணி நேரம் ஊற விடவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக்கொண்டு, தக்காளி, பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கி அத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் பாதி எண்ணெய் விட்டு, மசாலாவில் ஊறிய கோழியை சற்று முறுகலாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மீதி எண்ணெயை இன்னொரு வாணலியில் விட்டு, மீதி இஞ்சி பூண்டு விழுதை போட்டு முறுக ஆரம்பிக்கும்போது நறுக்கி வைத்துள்ளவற்றை போட்டு லேசாக 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு பொரித்துவைத்துள்ள கோழியை அதில் போட்டு புரட்டி, மீதி உப்பை சேர்த்து கிளறி, அதன் மேல் மல்லிக்கீரயை நைசாக நறுக்கிப் போட்டு மீண்டும் பிரட்டி, இறக்கும் முன் எலுமிச்சைப்பழத்தை பிழிந்து பிரட்டிவிட்டு எடுத்து விட வேண்டும்.


வெங்காயம் அரைவேக்காடாக இருப்பதுதான் சாப்பீஸுக்கு நல்ல மணம் கொடுக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த சிக்கன் சாப்பீஸ் ஏற்கனவே படங்களுடன் யாரும் சமைக்கலாமில் இடம் பெற்றுள்ளது. மீண்டும் அதே குறிப்பினைக் கொடுப்பதற்கு காரணம் என்ன?

Dear Aanisha!
முதலில் நீங்கள் ஒன்றை கவனிக்கவேண்டும். ஒருமுறை வெளியான குறிப்பை மற்றொரு முறை வெளியிடக்கூடாது என்ற எந்த விதிமுறையும் இல்லை. இதே அறுசுவை.காமில் எத்தனையோ இதுபோன்று ஒரே குறிப்பு வித்தியாசமான செய்முறையில் வெளியாகியுள்ளது, அதையெல்லாம் நீங்கள் கவனிக்கவில்லையா?

ஒரு குறிப்பை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு முறையை கையாளுவர். இதில் நான் கொடுத்துள்ளது எங்கள் வீட்டில் செய்யும் முறை. இரண்டு குறிப்புகளையும் நன்றாக படித்து பாருங்கள், உங்களுக்கு முடியும்போது இரண்டு முறையிலும் செய்து வேண்டுமானாலும் பாருங்கள்!வித்தியாசம் தெரியும். ஒவ்வொன்றும் ஒரு டேஸ்ட் கொடுக்கும்! பண்ணி பார்த்து இதற்கு பதில் சொல்லுங்கள்!

இன்னொரு விஷயம், இந்த குறிப்பை கொடுக்கும்போது "யாரும் சமைக்கலாம்" பகுதியில் இதே title-ல் ஒரு குறிப்பு வெளியானதே எனக்கு ஞாபகமில்லை என்பது உண்மை!

DEAR ASMA
Msalavil Mix saitha
chicken oil_li fry saiyya solli erukereengal.

Chicken Oli_la fry pannum Pothe nangu cook saiyyanumaa .

sajuna

sajuna
Unga Chicken Recipe nan saithen Rombha Suvaiyaaga Erunthathu.

sajuna

என்னுடைய chicken recipe செய்து பார்த்து பாராட்டியதற்கு மகிழ்ச்சி, நன்றி!