அவியல்

தேதி: November 29, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

தயிர் - ஒரு கப்
தேங்காய் துருவல் - 3/4 கப்
காய்கறிக்கலவை - 2 1/2 கப்
(பீன்ஸ், காரட், வாழைக்காய், கத்தரிக்காய், பூசணிக்காய், முருங்கைக்காய்,
அவரைக்காய், கொத்தவரங்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, புடலங்காய்,
பட்டாணி)
பச்சை மிளகாய் - 3 (அ) 4
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 3 கொத்து


 

பட்டாணி தவிர மற்ற காய்கறிகளை ஒரே அளவான சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயையும், பச்சை மிளகாயும் சிறிது தயிர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
காய்கறிகளை தேவையான தண்ணீர், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வேக விட்டு வடிகட்டவும்.
வெந்த காய்கறிகளுடன் அரைத்த தேங்காய் விழுது, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து கேஸில் வைத்துக் கொதிக்க விடவும்.
கீழே இறக்கி அதில் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். தயிரை கீழே இறக்கிய பின்பு தான் சேர்க்க வேண்டும். கொதிக்கும் போது சேர்த்தால் நீர்த்து விடும். மேலே 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி, மேலும் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும். கறிவேப்பிலையை சேர்த்து அவியலை நன்கு கலக்கவும்.
புளியோதரை, தேங்காய் சாதம் போன்ற பிசைந்த சாத வகைகளுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

காய்கறிகளை குக்கரிலும் வேக விடலாம். வெயிட்டைப் போட்டு 2 சத்தம் விட்டால் போதும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப நல்லா இருக்கு.

http://www.arusuvai.com/tamil/node/17185

தளிகா குறிப்பும் இதே போல் தான் இருக்கும். எனக்கு ரொம்ப பிடிக்கும் அவியல். :) அழகா செய்து காட்டி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு மிகவும் பிடித்த அவியல், அழகா பண்ணி காட்டி இருக்கீங்க, வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அவியல் சூப்பர் பாரம்பரிய சமையல்னாலே தனி டேஸ்ட், லுக் இருக்குல.. அவியல பீட் பண்ண முடியாது

KEEP SMILING ALWAYS :-)

அவியல் சூப்பரா இருக்கு ஈசியாவும் இருக்கு வாழ்த்துக்கள்.

தேங்காய் எண்ணெய் சேர்க்காமல் செய்யலாமா?

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ரொம்ப நல்லா இருக்கு உங்க குறிப்பு வாழ்த்துக்கள்
வனி அக்கா நீங்க குடுத்துருக்குற லிங்க் கூட இதே நாள் ல போன வருடம் வெளியானது தான் போல நல்லா இருக்கு by Elaya.G

எங்க வீட்டு பங்ஷன்ல வெஜ் இருந்தா கண்டிப்பா இந்த அவியலும் தா இருக்கும் காய்கறிகள்ல சிலத சேர்காம செய்வோம் எனக்கு ரொம்ப பிடிச்சது அப்டியே சாப்பிடுவேன் வாழ்த்துகள் தயிர்சாதம் புளிசாதம் லெமன்சாதத்தோட சாப்பிட்ட டேஸ்டே தனிதான் வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

குமாரி அக்கா அவியலோட ஸ்பெஷாலிட்டியே தேங்காய் எண்ணெய்தான். தேங்காய் எண்ணெய் இல்லைனா அது அவியலே இல்ல. வெறும் கூட்டுதான். செய்முறை மாத்தாம செய்துபாருங்க. மறுபடியும் எப்போ செய்யலாம்னு யோசிக்க ஆரம்பிச்சுடுவீங்க. :-)

KEEP SMILING ALWAYS :-)

.குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவைக் குழுவினருக்கு நன்றி....

முதல் பதிவிட்ட வனிதா....நன்றி....உங்கள்குறிப்பும் பார்த்தேன்....நான் சீரகம் சேர்ப்பதில்லை...

சுகந்தி, நாகா, இளயா, குமாரி, ரேணு....அனைவரின் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

குமாரி.....நாகா சொன்ன மாதிரி அவியலுக்கு தேங்காய் எண்ணை சேர்த்தால்தான் டேஸ்ட்....அதுவும் பச்சை தேங்காய் எண்ணையை அப்படியே அவியலில் விடவேண்டும்....அதுதான் மணம், சுவை எல்லாமே.....ஒரு முறை செய்து பாருங்கள்...

அவியல் எனக்கு ரொம்ப பிடிக்கும்! :) உங்க செய்முறை, படங்கள் எல்லாம் அருமையா வந்திருக்கு! வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

உங்க குறிப்பு நன்றாக உள்ளது வாழ்த்துகள். எடுத்திருக்கும் விதம் அருமை.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ராதாம்மா அவியல் ப்ரமாதம் நான் இதுவரை அவியல் செஞ்சதே இல்ல கண்டிப்பா ட்ரை பன்னுறேன் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுஸ்ரீ, ரேவதி, ஸ்வர்ணா....பாராட்டுக்கு நன்றி...
ஸ்வர்ணா....செய்து பார்த்து சொல் எப்படி இருந்ததுனு...

In Tiunelveli, most of the marriage should have this AVIYAL. superb taste...
Thanks for sharing

நன்றி தீபா...தமிழில் எழுதுங்கள்...

எனக்கு அவியல் ரொம்ப புடிக்கும் , நான் செய்து பார்த்து சொல்கேரன்

ஹாய் நான் இந்த தலதிர்கு புதிது அவியல் சூபர் இதில் சில காய்கள் தவிர்து செய்யலாம என்ன காய்கள் கண்டிப்பாக சேர்க வெண்டும்

இன்னிக்கு அவியல் செய்தேன் நல்லா வந்துச்சு பட்டாணிதான் மறந்துட்டேன்

இப்படிக்கு ராணிநிக்சன்

வர்தினி, ஜாஸ்மின், ராணி....நான் இன்றுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன்....நன்றி..

ஜாஸ்மின்....அவியலுக்கு கத்தரி, முருங்கை, வாழை, வெள்ளைப் பூசணி மிக அவசியம்.

..ராணி....பின்னூட்டத்திற்கு நன்றி.