மட்டன் கிரேவி

தேதி: November 30, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (27 votes)

 

ஆட்டுக்கறி - அரைக் கிலோ
பழுத்த நாட்டு தக்காளி - 4
சின்ன வெங்காயம் - 15
இஞ்சி பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
பட்டை - 1
பிரிஞ்சி - 1
கிராம்பு - 3
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
மிளகுதூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு


 

தக்காளி, வெங்காயம் தனித்தனியாக அரைக்கவும். தக்காளியுடன் சிறிதளவு ஆரஞ்ச் கலர் சேர்த்து அரைக்கவும். இஞ்சி பூண்டு சேர்த்து அரைக்கவும்.
குக்கரில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, பிரிஞ்சி சேர்த்து வதக்கவும்.
அதன் பின் கறிவேப்பிலையும் பச்சை மிளகாயும் சேர்க்கவும்.
அதில் தக்காளி விழுது, வெங்காய விழுது ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.
பச்சை வாசனை போனதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
இப்போது மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகுதூள், உப்பு சேர்த்து கிளறவும்.
2 நிமிடங்கள் வதங்கிய பின் சுத்தம் செய்த மட்டனை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
பின் குக்கரை மூடி 6 விசில் வரும் வரை வேக விடவும். ப்ரஷர் அடங்கியதும் கொத்தமல்லி சேர்த்து நீர் வற்றும் வரை ஹை ப்ளேமில் வைத்து கிளறவும்.
சுவையான மட்டன் கிரேவி தயார். சாம்பார், ரசம் ஆகியவற்றுடன் அருமையாக இருக்கும். சப்பாத்தி பூரிக்கு தொட்டுக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

காரசாரமான குறிப்பு வாழ்த்துகள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

Parkavae sapidanum pola iruku. Very nice recipe

மட்டன் கிரேவி சூப்பர்....நானும் செய்து பார்க்கிரேன்...பார்க்கவே சூப்பரா இருக்கு...

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

மட்டன் கிரேவி பார்க்கும்போதே அமர்க்களமா இருக்கு....அதுலேயும் வேக வைக்காத பிங்க் நிறம் பார்த்தாலே ஏக்கமா இருக்கு.....எங்களுக்கு இங்கே அந்த அளவு பிரெஷா கிடைக்கவே கிடைக்காது :(

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நன்றி ரேவதி
நன்றி கௌதமி
நன்றி சங்கீதா

நன்றி லாவண்யா- ஊருக்கு வந்தா ஒரு கட்டு கட்டிடுங்க :-)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நானும் இப்டிதான் செய்வேன்.. தோசை இட்லிக்கு சூப்பரா இருக்கும் .. ம்.. யம்மி...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மிக்க நன்றி மீனு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா

தொடர்ந்து அசத்துது உங்க குறிப்புகள்!... மட்டன் கிரேவி சூப்பரா இருக்கு! கிட்டத்தட்ட என் செய்முறைபோலவே இருக்கு. படங்கள் எல்லாம் பளிச் பளிச்! :) அருமை!! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

மிக்க நன்றி சுஶ்ரீ

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா உங்க மட்டன் கிரேவி செய்தேன். ரொம்ப நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.....

அன்புடன்
மகேஸ்வரி

yummy....... mutton pidikadha enaku paathadhum sapdanum pola iruku. nalaike senju saptudren.....

very simpl and presentage very nice