தவா சிக்கன்

தேதி: November 30, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (7 votes)

 

சிக்கன் – கால் கிலோ
எலுமிச்சை – ஒன்று
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 2
மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
தனியா தூள் – ஒரு தேக்கரண்டி
கலர்
பட்டை
கிராம்பு


 

தேவையான பொருட்களை தயார் நிலையில் வைக்கவும்.
இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுது மற்றும் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சிக்கனுடன் கலந்து வைக்கவும்.
கலந்த சிக்கன் கலவையை ஒரு பாக்ஸில் வைத்து ப்ரீசரில் ஒரு மணி நேரம் வைக்கவும்.
பிறகு தோசை கல்லை நன்கு சூடாக்கி அதில் ஒரு மணி நேரம் ஊறிய சிக்கனை மீன் வறுப்பது போல் வறுக்கவும். சிம்மில் வைத்து நன்கு வறுக்கவும்.
இப்பொழுது சுவையான தவா சிக்கன் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Easy & tastiest reciepe

ரேவதி புது புதுசா குறிப்பு கொடுத்து அசத்துறீங்க வாழ்த்துக்கள். தவா சிக்கன் ஈஸியா இருக்கு செய்து பார்க்கிறேன். சீக்கிரம் கூட்டாஞ்சோறுல இடம் பிடிச்சுடுங்க.

பேரே வித்தியாசமா இருக்கு. தோசைக்கல்லில்/தவாவில் செய்யும் எளிமையான குரிப்பு ரேவதி

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

செய்முறை நன்றாக இருக்கு. கடைசி போட்டோவில் இருக்கும் மல்லி இலையை கொஞ்சம் கம்மி பண்ணியிருந்தால் நல்ல மொரு மொறுவென்று வருபட்டிருக்கும் சிக்கன் துண்டு பார்த்து நாங்களும் ஜொள்ளு விட்டு இருப்போம்ல....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ரே தவா சிக்கன் அட அட பார்க்கவே சாப்பிட தூண்டுதே சூப்பர் வாழ்த்துக்கள்...........

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரே,எனக்கு..சிக்கன்..பிடிக்கும்னு..தெரிஞ்சே..சிக்கன்..குறிப்பு
தந்து..வெறுப்பேத்தறே..:)..தொடர்ச்சியான..குறிப்புகள்ல
கலக்கிட்டு..வர்றே..ரே..குறைவான..பொருட்களை..வைத்து
நிறைவான..சுவையில்..குறிப்பு..தந்திருக்கே..ரே..வாழ்த்துக்கள்:)
நான்..செய்து..பார்த்துட்டு..சொல்றேன்..ரே.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ரேவதி,

தவா சிக்கன் குறைந்த பொருட்களை கொண்டு செய்முறை சுலபமாகவும், அருமையாவும் இருக்கு! :) வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

முதலில் என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு என் நன்றி!

கோமதி மிக்க நன்றி

வினோ எப்படி இருக்கீங்க பேசியே ரொம்ப நாள் ஆகுது. நிச்சயமா கூட்டாஞ்சேறு பகுதியில் இடம்பிடிப்பேன். ஆனால் கொஞ்சம் நாள் ஆகும். நன்றிடா.

ஆமினா மிக்க நன்றி

லாவண்யா உங்களை பார்க்க வைத்து ஏமாற்றாக்கூடாதுன்னு தான் நான் கொத்தமல்லி அதிகமாக தூவி இருந்தேன். மிக்க நன்றி

சுவா தூண்டுவது என்ன நீ சென்னை வரும் போது ஒரு பெரிய விருந்தே ரெடி பண்ணிடலாம். வாழ்த்துக்கு மிக்க நன்றிடா.

கல்ப் உன்னை வெறுப்பேத்த இதை செய்யவில்லை. உனக்கு பிடித்த்து தானே எனக்கு பிடிக்கும் அதான் உன் சார்ப்பாக செய்து சாப்பிடுறேன். கோவப்படாதே செல்லம் நீ இங்கே வா ஒரு கட்டு கட்டலாம்.

ஸ்ரீ உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

இன்னிகி உங்க தவா சிக்கன் செய்தேன் சுவையாக இருந்தது

Love Makes Life Beautiful...
With Love,
Indira.