முளைக்கீரை மசியல்

தேதி: December 2, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முளைக்கீரை--- 1 கட்டு
துவரம்பருப்பு-- 1/4 கப்
தேங்காய் எண்ணை-- 2 தேக்கரண்டி
கடுகு -- 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு-- 1 தேக்கரண்டி
உப்பு-- தேவையான அளவு
அரைக்க
----------------
தேங்காய்த் துருவல்-- 2 தேக்கரண்டி
சீரகம்-- 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்-- 1


 

1. கீரையை நன்கு அலசி ஆய்ந்து பொடியாக நறுக்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
2. துவரம்பருப்பை நன்கு வேகவிடவும்.தேங்காய், சீரகம், மிளகாய் வற்றலை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
3. கீரையை மத்தால் நன்கு கடைந்து, அத்துடன் அரைத்த விழுது, வெந்த துவரம்பருப்பு, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து கேஸில் வைத்து கொதிக்க வைக்கவும்.
4. இறக்கியதும் தேங்காய் எண்ணையை சுட வைத்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பை தாளித்துக் கொட்டவும்.
இந்த மசியல் வற்றல் குழம்பு சாதத்துக்கு தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்