குழந்தைகளுக்கு வாங்கும் பொருட்களில் சந்தேகம் தோழிகள் உதவி தேவை...

தோழிகளுக்கு வணக்கம்...
எனக்கு இருக்கும் ஒரே வெளிநாட்டு தோழிகள் நீங்கள் தான்... ஏன்ன US ல எனக்கு ஒரு frnd கூட இல்ல :-( அதனால் நீங்கள் தான் சந்தேகத்தை தீர்த்து வைக்க முடியும்
நான் 28 வாரம் கற்பம்... அதனால் இப்போதே பொருட்கள் வாங்க ஆரம்பித்து விட்டேன்...
1.car seat new born பேபி க்கு நு இருக்குமா... கடைகளில் ஏகப்பட்ட கார் செஅட் இருக்கு... எது புது குழந்தைக்கு வசதியா இருக்கும்... அப்படி வாங்கினாலும் குழந்தை வளர வளர பெரிய கார் செஅட் வாங்கனுமா... இல்ல இப்ப வாங்கும்போதே பெருசா வாங்கனுமா?
2. என் தோழி ஒருவர் feeding pillow வாங்குனா பால் கொடுப்பதற்கு வசதியா இருக்கும் நு சொன்னங்க... ஆனால் feeding pillow ந நெறைய இருக்கு எது வாங்கணும் எது வாங்குனா குழந்தைக்கு பால் குடிக்க வசதியா இருக்கும்... இல்ல இந்த pillow இல்லாமையே பால் குடுக்கலாமா அதாவது பேபி க்கு நம்ம மடியில் படுக்க வசதியா இருக்குமா...?
3. குழந்தை தூங்க வைக்க தொட்டில் வாங்கனுமா... நம்ம ஊரு ல தொட்டில் ல தான தூங்க வைப்போம்... இங்க எந்த மாதிரி தொட்டில் வாங்குறது... தொட்டில் இல்லாம கட்டில் ல தூங்கவச்சு பழக்கபடுதுணா போதுமா...
இப்பதிக்கு இவ்ளோ தான் சந்தேகம் மிச்சத்தை அப்பறம்
கேக்குறேன்....

பிறந்த குழந்தை முதல் ஒரு வயது அல்லது இருபது பவுண்ட் வரையில் உள்ள குழந்தைகளுக்கு ரியர் பேசிங் (rear facing) சீட் தான் உபயோகிக்கனும். இதில் பல பிராண்ட்கள் இருக்கு...நான் Graco, Safety first உபயோகித்திருக்கிறேன். பிறகு குழந்தைக்கு ஒரு வயது அல்லது இருபது பவுண்ட் ஆனவுடன் front facing சீட் மாற்ற வேண்டும். பிறகு குழந்தைக்கு நாப்பது அல்லது நான்கு வயதானவுடன் booster seat மாற்றவும். ஆறு வயது அல்லது அறுபது பவுண்ட் ஆனவுடன் booster இல்லாமல் பயணிக்கலாம். எல்லாமே பின் சீட்டில் தான். முன் சீட் கூடவே கூடாது.

பீடிங் பில்லோ எல்லாம் அவர் அவர் வசதியை பொருத்தது. சாதாரண தலையணை வைத்தும் இல்லாமலும் கூட கொடுக்கலாம். அப்படி வாங்கும் போது சி வடிவில் உள்ளதை வாங்கவும். குழந்தைக்கான பொருட்களை Babies r Us இல் வாங்கவும். அங்கே உள்ள எல்லா பிராண்டும் தரமானதாக தான் இருக்கும். குழந்தை பிறந்தவுடன் எப்பொழுதுமே நமக்கு பொசிஷன் கிடைக்கும் வரையில் பால் கொடுக்க கொஞ்சம் அசௌகரியமாக தான் இருக்கும். போக போக பழகி விடும். முதலில் குழந்தையை எப்பொழுதுமே கையில் வைத்து அனைத்துக் கொண்டு தான் தர வேண்டும். அதனால் என்னை கேட்டால் இந்த பில்லோ எல்லாம் வேண்டாம் என்பேன். வீட்டில் உள்ள பில்லாவே போதுமானது.

இங்கு தொட்டில் எல்லாம் இல்லை. குழந்தையை கண்டிப்பாக கிரிப்பில் "" தான் படுக்க வைக்க வேண்டும். நாம் படுக்கும் மெத்தை ரொம்பவே மிருதுவாக இருக்கும். அதனால் குழந்தை தெரியாமல் கவுந்து படுக்கும்போது அவர்களின் மூக்கு நசுங்க வாய்ப்புள்ளது. அதுவும் இல்லாமல் அவர்கள் படுக்கும் படுக்கை வளைந்து கொடுக்காமல் இருப்பது அவசியம். குழந்தையை தூங்க வைக்க இங்கே ராக்கர் (Rocker), பாசிநெட் (Bassinet) என்று விற்கும். இதில் ராக்கர் இரண்டு வயது வரையில் யூஸ் பண்ணுவது போல் இருக்கிறது. ஆனால் பாசிநெட் வெறும் நான்கு மாதம் வரையில் தான். இல்லையென்றால் நீங்கள் ஒரு ராக்கிங் ஷேர் மற்றும் ஸ்டூல் (Rocking chair & Stool/ottoman) வாங்கி கொள்ளலாம். பால் கொடுக்க குழந்தையை தூங்க வைக்க என்று எல்லாத்துக்கும் பயன் படும்.

இப்பொழுது வலி எப்படி இருக்கு? புட்டு செய்து சாப்ட்டீங்களா?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ரொம்ப நன்றி பா... நல்ல விளக்கமா பதில் தந்ததுக்கு...
புட்டு செஞ்சு சாப்டேன் சூப்பரா இருந்துச்சு... ஆனா அரிசி மாவு செஞ்சதுனால ஆறுனதும் சாப்ட நல்லவே இல்ல... ரொம்ப வர வரணு போய்டுச்சு... எப்டி soft ah செய்றது?
வயிறு வழி சரி ஆய்டுச்சு... முட்டை சாப்டது சேரல.... அதான் பிரச்சன்னை இப்ப நல்லார்கேன்,... ரொம்ப நன்றி... இன்னும் கொஞ்சம் சந்தேகம் வந்து கேட்டா சொலுங்க pls...

அன்புடன் அபி

1. புதிதாக பிறந்த குழந்தைக்கு டைபர் போடலாமா கூடாதா? போட்டா சூடு பிடிக்குமா... எந்த brand வாங்குனா நல்லது...
2. இங்க feb ல எவ்ளோ குளிர் இருக்கும்... விண்டேர் டிரஸ் நிறைய வாங்கவா?
3.அப்றம் எவ்ளோ நாள் குழந்தை என் பக்கதுல தூங்கும் அதாவது எப்போ இருந்து தனியா crib ல போடலாம்...
4. பேபி mattress நு விக்குது ல அது எப்ப வாங்கணும் வாங்கனுமா இல்ல நம்ம பெட் ல தூங்க வச்சுக்கலாமா crib வாங்கனுமா?
5. பேபி பாத் tub வாங்கனுமா நெறைய vareity இருக்கு எது வாங்கணும் இன்பான்ட் பேபி பாத் tub வாங்குனா குழந்தை வளரும்போது அது பத்துமா? இல்ல நம்ம குளிக்கிற tub லையே அட்ஜஸ்ட் பண்ணிரலாமா
6. quick dry mat எங்க கெடைக்கும் ஏனா வீடு கார்பெட் பேபி கீழ படுக்க வைக்கும்போது (urine) ஈரம் ஆய்டும் ல அல்லது பெட் ல படுக்க வச்சாலும் அந்த பிரச்சனை இருக்கும்
நான் இங்க kmart ல பாத்தேன் quick dry mat இல்லவே இல்ல , அதான் பெயரா இல்ல வேற பெயரா?

நிறைய கேள்வி கேக்றேன் நு கோவிச்சுகாதீங்க எனக்கு எதுமே இங்க தெரியல பா... அவர் கூட வேலை பார்க்கிற இந்தியன் பிரண்ட்ஸ் யாருக்குமே இன்னும் குழந்தை இல்ல சோ எனக்கு பிரண்ட்ஸ் நீங்க மட்டும் தான் சிரமத்திற்கு மன்னிக்கவும்...

அன்புடன் அபி

இங்கு குழந்தை பிறந்தால் கண்டிப்பாக டயப்பர் இல்லாமல் முடியாது. அதுவும் விண்டர் பேபி என்றால் மிகவும் சிரமும். சம்மர் என்றால் ஊரிலிருந்து வரும்போது துணி நாப்பி எடுத்து வர சொல்லலாம். துணி நாப்பி என்றாலும் நன்றாக அலசி வெயிலில் உலர்த்தினால் தான் நல்லது. அதிகம் வெயில் படாத இடத்தில் உலர்த்தினால் குழந்தைக்கு இன்பெக்ஷன் கூட ஆகலாம். எந்த பிராண்டாக இருந்தாலும் காட்டனாக இருந்தால் மிகவும் நல்லது. என் நண்பர் ஒருவர் டார்கெட்டில் விற்கும் பிராண்ட் நன்றாக உள்ளது என்று சொன்னார். சிலர் லவ்ஸ் நல்லது என்று சொனார்கள். அதனால் நீங்கள் உங்களின் குழந்தை மருத்துவரிடம் ஒரு சஜெஷன் கேட்பது நல்லது.

பிப்ரவரியில் கண்டிப்பாக குழந்தைக்கு குளிராக தான் இருக்கும். பிறந்த குழந்தைக்கு ஜூன் ஜூலை மாதமுமே குளிராக தான் இருக்கும். அவர்களுக்கு வயிற்றில் இன்குபேட்டர் உள்ளே இருப்பது போல் இருக்கும். அதனால் தாராளமாக வாங்கலாம்.

குழந்தையை தனியாக முதல் நாளிலிருந்தும் படுக்க வைக்கலாம். குழந்தையை உங்கள் பக்கத்தில் படுக்க வைப்பது அல்லது க்ரிப்பில் படுக்க வைப்பது எல்லாமே அம்மக்களை (அதாவது உங்களை) பொருத்தது.பகலில் தூங்க வைக்கும் போது கரிப் தேவைப்படும். இரவில் கூட கரிப்பை உங்கள் ரூமிலே வைத்து அதில் படுக்க வைக்கவும். இங்கு வளரும் குழந்தைகள் சில காலத்திற்கு பின் எனக்கு தனி ரூம் வேண்டும் என்று கண்டிப்பாக கேட்ப்பார்கள். என்னை பொறுத்தவரையில் அப்பொழுது அவர்களை தனியாக படுக்க வைக்கலாம். நம்முடைய மெத்தை கொஞ்சம் சாப்ட்டாக இருக்கும். அது குழந்தைகள் திரும்பி (தூக்கத்தில் தெரியாமல்) படுக்கும் போது மூக்கு நசுங்க வாய்ப்பிருக்கிறது அதனால் தான் அவர்களை அவர்களுக்குரிய மெத்தையில் படுக்க வைக்க சொல்கிறார்கள்.

உங்களுக்கு உள்ளே பாத் டப்பில் காலை நீட்டி குளிக்க வைக்க முடியுமென்றால் வாங்க வேண்டாம். இல்லை கஷ்டம் என்றால் வாங்கவும். வாங்கும் போது கண்டிப்பாக இன்பான்ட் டு டாட்லர் என்று இருக்கும் அதை வாங்கவும். இங்கே உள்ள உட்கார்ந்து குழந்தையை குளிக்க வைப்பது கொஞ்சம் சிரமம் தான் அதனால் நான் பாத் டப் ரெகமன்ட் செய்வேன்.

நீங்கள் டயப்பர் போட்டு வைப்பதானால் அந்த மாட் தேவையே இல்லை. பறந்த குழந்தைகளுக்கு அடிக்கடி மாற்றனும். அதாவது அவர்கள் ஒரு முறை அல்லது இருமுறை சிறுநீர் கழித்தவுடன் மாற்றனும். கொஞ்சம் வளர்ந்தபின் இரண்டு மணிக்கொரு முறை பிறகு மூன்று அல்லது நான்கு மணிகொருமுறை மாற்றினால் போதும். ஒவ்வொரு முறை மாற்றும் போதும் தண்ணீர் வைத்து சுத்தம் செய்து மாற்றவும். அதிகம் வைப்ஸ் உபயோகிக்க வேண்டாம். அதனால் சில குழந்தைகளுக்கு ராஷஸ் கூட வரும். அடிக்கடி மாற்றாவிட்டாலும் ராஷஸ் வரும். குழந்தை மலம் கழித்த பின்னர் கொஞ்சம் நேரம் டயப்பர் இல்லாமல் காற்றோட்டமாக விடலாம்.

இந்த கேள்வியால் யாருக்கும் எந்த சிரமமும் இல்லை. தெரிந்தால் சொல்லப்போகிறார்கள் இல்லையென்றால் பதில் வராது. இந்த மன்றத்தில் எவ்வளவோ வேண்டாத கேள்விகள் கேட்டகூடாத கேள்விகள் எல்லாம் வருது. அதுக்கே பதில் வரும்போது இது அவசியமானது இதற்க்கு வராதா?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நன்றி பா... என் கேள்விகளுக்கு பதில் குடுததுக்கு ரொம்ப நன்றி...

அன்புடன் அபி

மிக்க நன்றி லாவண்யா உங்களுடைய மிக தெளிவான விளக்கங்களுக்கு. உங்கள் பதில் எனக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நாங்களும் பெப்ரவரி இல் எங்கள் முதல் குழந்தை எதிர்பார்கிறோம். இந்தியாவில் இருந்து பேபி essentials எதாவது கொண்டு வருவது பயனுள்ளதா? எனது parents வருகிறார்கள். இயன்றால் பதில் அளிக்கவும்.

car seat வாங்கும் பொது base சேர்த்து வாங்கனுமா இல்ல car seat மட்டும் வாங்குன போதுமா.... பேஸ் தனியா வாங்கனுமா இல்ல சேர்த்து தா விற்பர்களா
எங்கட்ட கார் இல்ல பா... கால் டாக்ஸி தா புக் பண்ண போறோம்... car seat மட்டும் வாங்குனா கார் ல பிட் பண்ண முடியுமா எல்லா கால் டாசியிலும் base இருக்கும? car seat இல்லாம எல்லா கால் டக்ஸ்யிலும் பிட் பண்ண முடியுமா?
நன்றி

அன்புடன் அபி

இங்கே எல்லா பொருட்களும் கிடைக்கும். குழந்தைகளுக்கேன்றால் இங்கே நல்லதாகவும் கிடைக்கும். அதனால் அம்மா வரும்போது குழந்தையை கொஞ்ச தயாராக வர சொல்லுங்க. வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள். தெரிந்தால் சொல்கிறேன். உங்களின் கேள்வியை இப்பொழுது தான் பார்த்தேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நீங்கள் கார் வாங்க போறதா இருந்தா மட்டும் கார் சீட் மற்றும் பேஸ் வாங்குங்க. இல்லையென்றால் வெறும் கார் சீட் மட்டுமே வைத்தே எந்த காரிலும் பிக்ஸ் பண்ணலாம். என்ன நீங்க பக்கத்தில் இருக்க வேண்டும். பின் சீட்டில் சீட்டை வைத்து குழந்தை வைத்து ஸ்ட்ராப் பண்ணியபின் பாசஞ்சர் அணியும் பெல்ட்டை சீட்டின் மேல் புறமாக உள்ள வளைவில் விட்டு போட வேண்டும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நன்றி லாவண்யா. அம்மாவை இலகுவாக பறக்க சொல்கிறேன் :-)

மேலும் சில பதிவுகள்