ப‌ட்ட‌ர்மில்க் கார்ன் ப்ரட்

தேதி: December 3, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (5 votes)

 

கார்ன்மீல் ‍- ஒரு க‌ப்
மைதா (அ) ஆல் ப‌ர்ப்ப‌ஸ் மாவு ‍- 1/3 க‌ப்
பேக்கிங் சோடா - அரை தேக்க‌ர‌ண்டி
சர்க்கரை - 2 மேசைக்க‌ர‌ண்டி
முட்டை - ஒன்று
மோர்/பட்டர்மில்க் - 1 1/2 க‌ப்
எண்ணெய் - ‍ கால் க‌ப்
உப்பு - அரை தேக்க‌ர‌ண்டி


 

முத‌லில் தேவையான‌ பொருட்க‌ளை த‌யாராக‌ எடுத்து வைக்க‌வும். கார்ன் மீல், மைதா, பேக்கிங் சோடா, உப்பு, சர்க்கரை எல்லாவ‌ற்றையும் ஒன்றாக‌ கலந்து வைக்க‌வும்.
ஒரு பாத்திர‌த்தில் முட்டையை உடைத்து ஊற்றி அடித்து வைத்துக் கொள்ள‌வும்.
முட்டையுட‌ன் எண்ணெய், மோர் சேர்த்து கலந்து வைக்கவும். அடுத்து மாவுக்க‌ல‌வையை முட்டைக்க‌ல‌வையுட‌ன் சேர்த்து மென்மையாக‌ க‌ல‌க்க‌வும்.
ஒரு 8 x 8 அளவுள்ள பேக்கிங் பாத்திரத்தில் நாண்ஸ்டிக் ஸ்ப்ரே செய்து, க‌ல‌க்கி வைத்திருக்கும் மாவுக்க‌ல‌வையை அதில் ஊற்றவும்.
இந்த பேக்கிங் டிஷ்ஷை 425 டிகிரி ஃபேரன்ஹீட் முற்சூடு செய்த அவனில் வைத்து 12 -‍ 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.
ஒரு சிறிய கத்தி, அல்லது டூத்பிக் கொண்டு வெந்து விட்டதை சரிப்பார்த்துக் கொண்டு, வெளியில் எடுத்து ஆற விடவும்.
கொஞ்சம் சூடு ஆறியதும், துண்டுகள் போடவும்.
சுவையான பட்டர்மில்க் கார்ன் ப்ரட் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எளிமையான சுவையான குறிப்பு.வாழ்த்துக்கள்

ஈஸி டேஸ்ட்டி ப்ரட் சூப்பர் வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

wow super susri

வாவ்...

எவ்வளவு எளிமையா இருக்கு. அதுமட்டுமில்லாமல் பாக்க அழகாகவும் இருக்கு

வாழ்த்துக்கள் சுஶ்ரீ

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சுஸ்ரீ... சூப்பர் சூப்பர் சூப்பர். கடைல இருக்க மாதிரி இருக்கு ப்ரெட் கடைசி படத்தில். வித்தியாசமான சுலபமான சூப்பரான குறிப்பு. அவசியம் ட்ரை பண்றேன். அவன் இருக்கே... மாலேவில் தான் இருக்கேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ப்ரட் பார்க்க ஸ்பாஞ் போல் மிருதுவாக போட்டோவில் தெரிகிறது.விரைவில் செய்து பார்க்கிறேன்.:)

radharani

இத்தனை சீக்கிரமாக குறிப்பை வெளியிட்ட‌ அட்மின் குழுவினருக்கு முதலில் என் நன்றி! :)

அன்புடன்
சுஸ்ரீ

முதல் ஆளா வந்து தந்த உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி ஆனந்தி! :)

உங்க வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ரேணுதேவா!

பாராட்டிற்கு நன்றி முத்துலஷ்மி!

உங்க பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஆமினா! :)

அன்புடன்
சுஸ்ரீ

வனி,
தொட‌ரும் உங்க‌ளோட‌ பாராட்டுக‌ளுக்கு மிக்க‌ ந‌ன்றி! :)

ஓஓஒ.... மாலே போயாச்சா?! ந‌ல்லது! பிறகென்ன?, ரொம்ப நாளா காத்திருந்த அவன் குறிப்புகளை எல்லாம் செய்து அசத்திடுவிங்கதானே?! :)

பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க? செட்டில் ஆன‌தும், உங்க‌ளுக்கு முடியும்போது க‌ட்டாய‌ம் ட்ரை ப‌ண்ணிட்டு சொல்லுங்க, எப்படி இருந்ததுன்னு! :) மீண்டும் ந‌ன்றி வனி!

அன்புடன்
சுஸ்ரீ

வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ராதா!

கண்டிப்பா செய்து பாருங்க, எப்படி வந்ததுன்னும் வந்து சொல்லுங்க! :)

அன்புடன்
சுஸ்ரீ

அருமையான குறிப்பு, வாழ்த்துகள். கார்ன்மீல் என்றால் என்ன? அது cornmilk-கா? பதில் plz......

- அன்பே சிவம் -

சுலபமாக செய்ய கூடிய குறிப்பு கொடுத்தமைக்கு வாழ்த்துகள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

சுஸ்ரீ,
பட்டர்மில்க் கார்ன் ப்ரெட் பார்க்கவே சூப்பரா இருக்கு.கண்ணாடி ட்ரேயில் பார்க்க ப்ரெட் கலர் இன்னும் அசத்தலா இருக்கு.அருமையா செய்து இருக்கீங்க.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்,சுஸ்ரீ.பேக்கிங்கில் இன்னும் நிறைய குறிப்புகள் கொடுங்க.வாழ்த்துக்கள்.

corn meal-appatyna ennanu sollunga pls

bread very nice

bread super pa corn meal enral enna? vaazhththukkal

பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கோடி!

கார்ன்மீல் (Cornmeal) என்ப‌து, காய்ந்த சோள‌த்தை அரைத்த‌ மாவுதான். ஆனால் ரொம்ப மென்மையாக மாவு பதத்தில் இல்லாமல், கொஞ்ச‌ம் கொர‌கொர‌ப்பாக‌, பொடி ர‌வை ப‌க்குவ‌த்தில் இருக்கும். நன்கு நைசாக‌ அரைத்த‌ சோளமாமாவை கார்ன் ஃப்ளார் (Cornflour) என்று சொல்வார்கள்!

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ரேவதி!

அன்புடன்
சுஸ்ரீ

உங்க பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஹர்ஷா! :)
அவசியம் நேரம் கிடைக்கும்போது செய்துபார்த்து எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க. பேக்கிங், என‌க்கும்கூட‌ பிடித்த‌மான‌ ஒன்று! க‌ண்டிப்பா எனக்கு தெரிந்தவற்றை கொடுக்க‌ முய‌ச்சி செய்கிறேன். மீண்டும் நன்றி!

பாராட்டிற்கு மிக்க நன்றி ibm! :) உங்க முழு பேர் என்னவென்று தெரியவில்லை தோழி! கார்ன்மீல் பற்றி மேலே சொல்லியிருக்கேன், பாருங்க!

பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி மெர்சானா!
கார்ன்மீல் பற்றி மேலே சொல்லியிருக்கேன், பாருங்க மெர்சானா.

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ,

எளிமை..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

சுஸ்ரீ,

எளிமை..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

குறிப்பு ரொம்பவே நல்லாயிருக்கு. எனக்கு கார்ன் மப்பின் ரொம்பவே பிடிக்கும். இதுவும் அதே சுவையில் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ப்ரெசன்டேஷன் அருமை அதுவும் நீங்கள் அழகாக நேர்த்தியாக செய்து காட்டியிருப்பது செய்யும் ஆர்வதை தூண்டுகிறது. கண்டிப்பாக ட்ரை செய்வேன். செய்துவிட்டு வந்து சொல்கிறேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

susri bread romba nalla irukku. aanaa cornflour mavu vachu seiyalamanu solunga...

சத்யா

ஹாய் லாவண்யா,
எப்படி இருக்கிங்க? மீண்டும் உங்க பதிவுகளை அங்கங்கே பார்ப்பதில் ரொம்ப சந்தோஷம்! (ஒரு ஒன்றறை மாதத்திற்கு முன் உங்களை நாலைந்து பதிவுகளில் தேடி பார்த்துட்டு இருந்தேன்!)

ஹய்... சேம் பின்ச்! உங்களுக்குமா?! எனக்கும்கூட கார்ன் ப்ரட் டேஸ்ட் ரொம்ப பிடிக்கும்! :) உங்க பாராட்டுகளுக்கு மிக்க நன்றி லாவண்யா! அவசியம் நேரம் கிடைக்கும்போது செய்துபார்த்து எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க. பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க?! நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

சத்யா, உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி!

இந்த டைப் கார்ன் ப்ரட்டுக்கு முக்கியமானது கொஞ்சம் கரகரப்பா இருக்கும் அந்த டெக்ஸ்சர்தான். ஆக, கார்ன் ப்ளார் மாவு வைத்து செய்தால், எந்த அளவுக்கு நல்லா வரும்னு எனக்கு தெரியலை... சாரி. நான் அந்த மாதிரி செய்து பார்த்ததில்லை, அதனால் உறுதியா சொல்ல முடியவில்லை.

அன்புடன்
சுஸ்ரீ