வாழைத்தண்டு மோர்க்கூட்டு

தேதி: December 3, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (2 votes)

 

வாழைத் தண்டு-- 1
லேஸாக புளித்த மோர்-- 1/2 கப்
தேங்காய்-- 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய்-- 2
தேங்காய் எண்ணை-- 2 தேக்கரண்டி
கடுகு-- 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு-- 1 தேக்கரண்டி
அரிசி மாவு-- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை-- 2 கொத்து
உப்பு-- தேவையான அளவு


 

1. வாழைத்தண்டை பொடித்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.அளவான தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
2. தேங்காய், பச்சை மிளகாயை சிறிதளவு தயிர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
3. வெந்த வாழைத் தண்டை வடியவைத்து, அத்துடன் தேவையான உப்பு, தயிர், அரைத்த விழுது, அரிசி மாவு சேர்த்து கொதிக்க வைக்கவும். கூட்டு சேர்ந்து கொண்டதும் இறக்கவும்.
4. தேங்காய் எண்ணையில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலை சேர்க்கவும். இது சாம்பார் சாதத்துடன் சாப்பிட மிக அருமையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

very healthy easy dish.

Try and try again until you reach the target.

Anitha

நன்றி அனிதா...