சிம்பிள் எண்ணெய் கத்தரிக்காய்

தேதி: December 4, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (6 votes)

 

சிறிய வயலட் கத்தரிக்காய் - கால்கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2டீஸ்பூன்
கரம் மசாலா - கால்டீஸ்பூன்
மல்லி,கருவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் -2
மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன்
மல்லித்தூள் - 2டீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு உ.பருப்பு - 1டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு


 

சிறிய வயலட் கத்திரிக்காயை பாதியாக நறுக்கி வைக்கவும்.

வெங்காயம் தக்காளி,மல்லி இலை கொரகொரப்பாக மிக்ஸியில் சுற்றி எடுக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு காயவும் கடுகு,உளுத்தபருப்பு,கீறிய பச்சை மிளகாய்,கருவேப்பிலை தாளித்து கத்திரிக்காய் போட்டு வதக்கவும்.சிறிது வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா போட்டு நன்கு பிரட்டி விடவும்,அத்துடன் அரைத்த வெங்காயம் தக்காளி மல்லி இலையை சேர்க்கவும். வதக்கவும்.

அத்துடன் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,சீரகத்தூள் சேர்த்து பிரட்டவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.

குக்கரை சிம்மில் வைத்து ஒரு விசில் வரவும் அடுப்பை அணைக்கவும்.எண்ணெய் மேலெழும்பி சூப்பராக கத்திரிக்காய் வெந்து இருக்கும்,உடையாமல் பிரட்டி எடுக்கவும்.

சுவையான சிம்பிள் எண்ணெய் கத்தரிக்காய் ரெடி.


இதனை ப்லைன் சாதம் ,பிரியாணிக்கு கூட தொட்டு சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த குறிப்பை இதுவரை பலமுறை செய்துவிட்டேன்.மிகவும் எளிமையான, சுவையான குறிப்புக்கு நன்றி..

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.