கழுத்து வலி உதவுங்க

எனக்கு 6மாதமாக கழுத்து, சோல்டர்,இடது பக்கம் வலிக்கிறது,,தைலம் ட்தேய்தும் சரிஆகல...கம்பியூட்டரில் கொஞ்ச நேரம் உட்கார்ந்தாலே வந்து விடுகிறது..எப்படி சரி செய்வது?நேராக்த்தான் உட்கார்ரேன்...இந்த ஊரில் நிறய பேர் இப்படி சொல்கிறைகள் என்ன பயிற்சி செய்வது?

கனமான தடியானா தலையனை பயன் படுத்தாதீங்க.
குனிஞ்சா நிமிர்ந்தா, திரும்பினால் வலி ரொம்ப வலி எடுத்தால் அதிகமாக ஸ்ட்ரெயின் பண்ணாதீங்க.

கழுத்து வலி ஏற்பட்டால் கொஞ்சம் சரியாக நாள் எடுக்கும் அதே போல் நாமும் பக்குவமாக இருந்து கொண்டால் பாதி நிவாரணம் கிடைக்கும்.

தலைக்கு தண்ணீர் ஊற்றினால் உடனே ஈரமில்லாம துடைக்கனும் தண்ணி நின்றாலும் , ஈரத்தலையுடன் இருந்தாலும் கழுத்து வலி அதிகமாகும்.

இதேல்லாம் 15 வருடம் முன் எனக்கு இருந்தது ,
இப்ப மேலே சொல்லி உள்ள படி செய்ததால் இப்ப சுத்தமாக வலி இல்லை., எப்பவாவது தான் வரும்.
டாக்டரிமும் ஒரு முறை காண்பித்து கொள்ளுஙக்ள்

இப்படிக்கு உங்கள்
ஜலீலாக்கா

Jaleelakamal

பதில் சொன்ன எல்2லாருக்கும் மிக்க ந்ன்றிப்பா,,நான் நாட்களாக க/ணிணியில் உட்காரவில்லை,,வலி மூவ் ஆயின்மென்ட் தேய்தேன் சற்று தேவலை...ஆனால் ஒரு பக்கம் படுத்தால் அசயாமல் அப்படியே விழிப்பேன் எவ்வளவு நேரம் தூங்கினாலும் ஒரு பக்கமே இருப்பேன்..இதை எப்படி மாற்ற முடியும்?

தோழிகள் அனைவருக்கும் ரொம்ப நன்றி,,,நான் அதிகமா மூவ் ஆயின்ட்மென்ட் ப்யன் படுத்த்ரேன் சரியா?jaleela akka நீங்க துபயில்,தானெ இருகிறீர்கள்?எந்த டாக்டரிடம் போனீர்கள்?நானும் முயற்சி செய்கிரேன்?

நீங்கள் இங்கே டெலிவெரி பார்த்த அனுபவத்தை சொல்லுங்களேன்..ப்ளீஸ்.....என் தோழிக்கு சொல்ல வேணும் ...

அதாவது அபு தாபியிலா?நான் பார்த்த டாக்டர் தற்போது இந்த ஊரில் இல்லை ..இங்கு கார்னிஷ் ஹாஸ்பிடல்,என் எம் சி ,லைஃப்லைன்,அஹலிய ஹாஸ்பிடலில் எல்லாம் தான் நம்ப ஆட்கள் காண்பிக்கிறார்கள்,..நீங்க ஹாஸ்பிடலை கேக்கறீங்களா அனுபவத்தை கேக்கறீங்களான்னு தெரியலை..அனுபவத்தை பொறுத்தவரை இங்கு ஒரு பீதியே இருக்காது ரொம்ப அனுபவிச்சு பிரசவித்த மாதிரி இருக்கும்..சுத்து சுத்தி இருபது பேர் நின்னு வேடிக்கை பாக்க மாட்டாங்க குனிஞ்சா குத்தம் நின்னா குத்தம் அது இதுன்னு எதுவும் இல்லை காம்ப்லிகேஷன் எதுவுமில்லையென்றால் சும்மா சாப்பிடுவது தூங்குவது என்பது போல பிரசவமும் இயற்கையாக நடக்கிற ஒன்று என்பது போல இருக்கும் எளிமையா..நீங்க என்ன கேக்க வந்தீங்க தோழிக்கு எம்மாதிரியான தகவல் வேண்டும்?

உங்க கிட்ட பிடிச்சதே இதான் என் சகோதரிட்ட பேசுவது போல உணர்வு வரும்..இத நான் சிரிச்சுட்டேதான் டைப் பன்றேன்...என் தோழி இப்ப 3மாதம் என் உற்வினரும் கூட,முஸப்பாவில் இருக்காங்க,,,நானும் அங்கு பல தடவை வந்து தங்குவேன்...அதான் தகவல் வேனும்,,துபையில் ஜுலேகா ஹாஸ்பிட்டல் போயிட்டு ஊருக்கு ஓடிட்டேன்..டெலிவரிக்கு,,,அந்த கிழ்வியம்மா முகம் பார்த்த போதே பயம் வந்துவிட்டது,,,அபுதாபி எப்படி விசாரிச்சு அவன்கள்ட்ட சொல்லதான் கேட்டேன்.டெலிவெரி டைம் எப்படி நடந்துகிட்டாங்க?எத்தனை [ பேரு இருந்தாங்க?நம்ம ஊர் மாதிரி ரொம்ப கேர்லெஸ்சா திட்டுவாஙளா?அத பற்றி சொல்லுங்க?எவ்வளவு ஆனது?பேக்கேஜ் செலவு எப்படி?இங்க துபை டூமச் ரேட்?///எல்லா டீடெய்ல் வேணும்பா?

வலி வரும் பொருமயா நடந்துட்டாங்களா?இல்ல ஊசி போட்டார்களா?னைட் டைம் உங்க கூட யார்ரும் இருப்பாங்களா?நான் இப்ப தூங்க போரேன்..பதில் டீடெயிலா போடுங்க,,லேட்டா படிச்சுக்கரேன்,,

என் எம் சி யில் காமிக்க சொல்லுங்க..டாக்டர் நயனகுமாரி ரொம்ப நல்ல பாப்பாங்க..சிலருக்கு அஹலியாவில் பீனா டாக்டரை பிடிக்கும்..ஆனால் டாக்டர் நயனா கிட்ட போனால் திரும்பி வர தோனாது அப்படி ஒரு ஐஸ்வர்யமான பெண்.எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்ல பாப்பாங்க.இங்கெல்லாம் அப்படி திட்டுவதில்லை..நீங்க சொல்றது சரி தான் ஊரில் திட்டுவாங்க..
என் முதல் பொண்ணு பிரசவத்துக்கு ஊருக்கு போனபோது எனக்கு சுத்தமா ஐடியா இல்ல ஹாஸ்பிட்டல் பத்தி ஒருத்தங்க சொல்லி போய் பாத்த ஹாஸ்பிடல் போனதுமே பிடிக்கலை..னர்ஸ் கேட்ட முதல் கேள்வியே இங்க சேலை கட்டாட்டி டாக்டர் திட்டுவாங்க..டாக்டர் பொறுமையானவரா இருந்தார் .என் எம் சி யில் காமிக்க சொல்லுங்க..டாக்டர் நயனகுமாரி ரொம்ப நல்ல பாப்பாங்க..சிலருக்கு அஹலியாவில் பீனா டாக்டரை பிடிக்கும்..ஆனால் டாக்டர் நயனா கிட்ட போனால் திரும்பி வர தோனாது அப்படி ஒரு ஐஸ்வர்யமான பெண்.எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்ல பாப்பாங்க.இங்கெல்லாம் அப்படி திட்டுவதில்லை..நீங்க சொல்றது சரி தான் ஊரில் திட்டுவாங்க..
என் முதல் பொண்ணு பிரசவத்துக்கு ஊருக்கு போனபோது எனக்கு சுத்தமா ஐடியா இல்ல ஹாஸ்பிட்டல் பத்தி ஒருத்தங்க சொல்லி போய் பாத்த ஹாஸ்பிடல் போனதுமே பிடிக்கலை..னர்ஸ் கேட்ட முதல் கேள்வியே இங்க சேலை கட்டாட்டி டாக்டர் திட்டுவாங்க..டாக்டர் பொறுமையானவரா இருந்தார் ..அங்கே செகப்புக்கு போனால் ஏதோ வித்தை காட்டுற மாதிரி சுத்தி பத்து பேர்..பிறகு அங்கு எனக்கு ஏற்பட்ட அனுபவம் இங்கு விவரிக்கவில்லை..அதோட என் ஆசை போயே போச்சு.
இங்கு கடைசி வரை நானே தான் என் மகளை கூட்டிக் கொண்டு செக் அப்புக்கு தனியா போவேன் கடைசி நாள் இ அட்மிட் ஆகௌம் முன் நான் இன்னும் ரெண்டு வாரத்துக்கான சமையல் பொருட்களை லிஸ்ட் போட்டுக் கொண்டிருந்தேன் அதை பார்த்து என் அம்மாவுக்கு ஆச்சரியம் ஏன்னா ஊரில் முதல் பொண்ணுக்கு ஒரு காலில் என் செருப்பும் ஒரு காலில் என் அப்பா செருப்பும் போட்டுட்டு போனேன் அவ்வளவு பயம்.மட்டுமல்ல செக்கப்புக்கு ஒரு பச்சை கட்டில் அத பாத்தாவே எனக்கு கசாப்புக்கு கறிவெட்ட படுத்திருக்குற மாதிரி ஒரு ஃபீலிங் வந்துடும்
இங்கே போனது முதல் கடைசி வரை ஒரே ஒரு நர்ஸ் தான் இடையில் ஒருமுறை டாக்டர் வந்து பார்த்தார் அதோட சரி.பாட்டி,மாமி,நாத்தனார்,அத்தனை,பக்கத்து வீட்டுக்காராங்க என்று வலி வரும்போதே வந்து அபிப்ராயமெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க சந்தர்ப்பமில்லை.கடைசியாக டெலிவெரிக்கு மூன்று நர்ஸும் என் டாக்டரும் அதுவும் எந்த கலவரமும் இல்லை நானும் பொறுமையாக தான் இருந்தேன்.சொன்னா நம்ப மாட்டீங்க என் அம்மாவை வர கூடாது என்று சொல்லி வீட்டில் உக்கார வச்சுட்டு தான் ஹாஸ்பிடல் போணேன் பிரசவமாகும் கொஞ்சம் முன் வரை வலி வரலை சும்மா தான் படுத்திருக்கேன்னு பொஇய்யும் சொன்னேன் அவங்க பதட்டப்பட கூடாதே என்று..பிறகு பைய்யன் பிறந்தாச்சு என்றதும் என் அம்மா நம்பவே இல்லை பிறகு தான் அழைத்து வந்து பார்த்தார்.இவ்வளவு தான் விஷயம் இங்கே.நமக்கு தரும் ரூம்,உடை,கட்டில் எல்லாமே வீட்டில் இருக்கிற ஃபீலிங் தரும் நல்ல ப்ரைவசியும் இருக்கும்
பிறகு நாமளாச்சு குழந்தையாச்சு எல்லாம் நம்ப இஷ்டம் எல்லாத்திலும் அவங்க மூக்கு நுழைப்பது கிடையாது .இளம் தாய்மார்கள் முதல் குழந்தையை பிரசவைத்தவர்களுக்கு எதுவும் தெரியாது மெல்ல தான் பழகுவார்கள் அவர்களுக்கு வெளிநாடு ஒரு நல்ல பசுமையான அனுபவமாக இருக்கும்.நம்ப ஊரில் நிறைய கேட்டிருக்கேன் தேவையில்லாம திட்டுவாங்க என்று.ஆனால் மொத்த்மாக குறை சொல்ல முடியாது நம்ப ஊரிலும் நல்ல மருத்துவமனைகள் உண்டு ஆனால் மத்த சிகிச்சை போலில்லை இதுக்கு மட்டும் நாம அடுத்தவங்க எங்கே சொல்றாங்களோ அங்கு பயந்துட்டு போயிடுவோம் இனி கிழிச்சு விட்டுடுவாங்களோன்னு பயந்து
.இங்க என்கிட்ட நிஜமாவே உனக்கு வலிக்கலையா இல்ல சும்மா இருக்கியா என்று தான் கேட்டுக் கொண்டிருந்தார்கள் ஏன்னா நான் அப்படி ஒன்னும் குய்யோ முய்யோ என்று கதறவில்லை.டெலிவெரி ஆனதும் போய் மேல் கழுகிட்டு வர சொன்னாங்க எழுந்ததும் ஒரு ஆட்டம் போட்டது உடம்பு ஆனால் பயப்படாதே சரியாகிடும்நாங்க.குளிச்சேனே பிரசவமாவது டயர்டாவது ஒன்னாவதுங்கர மாதிரி ஃப்ரெஷ் ஆகிடுச்சு..என் அம்மா வுக்கு இதெல்லாம் ஒரு அதிசயம்.
செலவு பற்றி எனக்கு தெரியாது இன்ஷுரான்ஸில் கவர் ஆவதால் எவ்வளவு என்று தெரியவில்லை..நம்ப கைய்யில் இருந்து போடுவது என்றால் கார்னிஷ் தான் நல்லது.வலி வரும் முன்பு ஊசி போடுரது இப்போ பரவலா நடந்துகிட்டிருக்கு.a.எனக்கும் போட்டாங்க தான் ஆனா அப்பத்திக்கி அவங்க பேச்சை நம்பித் தான் ஆகனும்..எல்லாரும் செய்வதில்லை..கார்னிஷில் செய்யவே மாட்டார்கள்..இங்கு ரேரா தான் ஊசி போடுறாங்க.நீங்க வேண்டாம்னா மறுத்துடலாம்
நைட் கார்னிஷில் தங்க விடுவதில்லை..நான் ப்ரைவேட்டில் பார்த்ததால் கணவர் இருந்தார்.என்னை கேட்டால் யாரும் வேண்டாம்..பட்டனை தட்டினா நர்ஸ் வந்துடுவாங்க நமக்கு யார் உதவியும் தேவைப்படாது.டயப்பர், வைப்ஸ் ,டயப்பர் சேக் ,ரோம்பர்ஸ் ,ரிசீவிங் ப்லான்கெட் பக்கத்தில் இருந்தால் யார் உதவியும் வேண்டாம்.என் கணவர் இருந்தாலும் அவரும் நானும் நல்ல தூங்கினோம்

நன்றிப்பா,விளக்கமா சொல்லிவிட்டீர்கள்..அவங்கள்ட்ட சொல்கிறேன்...நல்ல அனுபவம்

kaluthu vali tips very useful thank you for you

மேலும் சில பதிவுகள்