முருங்கைக்காய் மசாலா

தேதி: December 6, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (10 votes)

 

முருங்கைக்காய் - 2
தாளிக்க:
வெங்காயம் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பச்சைமிளகாய் - 2
பூண்டு - 5 பல்
கடுகு, உளுந்து, சீரகம், கடலைபருப்பு - ஒரு தேக்கரண்டி
தக்காளி - 4
உப்பு - தேவைக்கு
சாம்பார் பொடி - 2 தேக்கண்டி
தேங்காய் பூ - 4 தேக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க


 

முருங்கைக்காயை விரல் அளவு நறுக்கி பாதியளவு வேக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சீரகம், கடலைபருப்பு தாளிக்கவும். பின்னர் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயத்தின் நிறம் மாறியதும் நான்காக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
வேக வைத்த நீருடன் முருங்கைக்காயினை கடாயில் சேர்க்கவும். அத்துடன் தேவைக்கு உப்பு மற்றும் சாம்பார் பொடியை சேர்த்து கொதிக்க விடவும்.
மசாலா சுருண்டதும் தேங்காய் துருவலை சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு உடனே இறக்கவும்.
முருங்கைக்காய் மசாலா தயார். ரசம் சாதம் மற்றும் வெரைட்டி ரைஸ்களுடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஈஸி டேஸ்டி முருங்கை மசாலா வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணுகா

வருகைக்கு மிக்க நன்றி ரேணுகா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

முருங்கை மசாலா சூப்பர் வாழ்த்துகள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

சூப்பர் மசாலா :-))

KEEP SMILING ALWAYS :-)

மிக்க நன்றி ரேவதி மற்றும் நாகா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

முருங்கக்காயில் இப்படி செய்ததேயில்ல...நல்லாயிருக்கு..கண்டிப்பா ட்ரை பண்றேன்..
வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.