பச்சரிசி அடை

தேதி: December 7, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பச்சரிசி - 1 கப்
உளுந்து- 2 ஸ்பூன்
துவரம்பருப்பு - 1/4 கப்
கடலைபருப்பு - 1/4 கப்
வற்றல் மிளகாய் - 5
பெருங்காயம் - 1 ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2
உப்பு


 

அரிசி, பருப்பு, மிளகாயை 2 மணிநேரம் ஊறவைத்து நறநறவென்று அரைக்கவும்.
அதனுடன் உப்பு,பெருங்காயம், தேங்காய் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.
தோசைக்கல் காய்ந்ததும் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தோசைபோல வட்டமாக அடை வார்க்கவும்.
அதன் நடுவே தோசைக்கரண்டியால் சிறிது துளையிட்டு நடுவிலும் ஓரங்களிலும் சிறிது எண்ணெய் ஊற்றி இரண்டுபுறமும் திருப்பிவிட்டு வெந்ததும் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த அடை அரட்டையில பேசிட்டு இருந்த குறிப்பா. உரப்படைக்கு சேர்க்கற பொருட்கள் போலவே இருக்கு. கார்த்திகை ஸ்பெஷல் சொல்லுங்க.