மாங்காய் பருப்பு

தேதி: December 7, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

மாங்காய் - ஒன்று
துவரம்பருப்பு (வேகவைத்தது) - 3/4 கப்
காய்ந்த மிளகாய் - 3
சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ‍2 தேக்கரண்டி


 

முத‌லில் மாங்காயை தோலை எடுத்து விட்டு படத்தில் இருப்பதைப் போல சிறிய‌ துண்டுக‌ளாக சீவி வைத்துக் கொள்ள‌வும். காய்ந்த மிளகாயை சிறு துண்டுகளாக உடைத்து வைத்துக் கொள்ளவும். வெந்த துவரம் பருப்பை, குழைவாக மசித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரை அல்லது ஒரு தேக்க‌ரண்டி அளவிற்கு எண்ணெய் ஊற்றி, அது கொஞ்சம் சூடானதும், சீவி வைத்திருக்கும் மாங்காய் துண்டுகளை அதில் போட்டு, கூடவே மஞ்சள் தூளையும் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு மாங்காய் துண்டுகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி கலந்து விட்டு, ஒரு மூடி போட்டு நன்கு வேக விடவும். (மாங்காயின் தன்மையை பொறுத்து வேகும் நேரம் மாறுபடும்.)
மாங்காய் ஓரளவுக்கு வெந்ததும் மசித்து வைத்திருக்கும் துவரம் பருப்பு, சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து மேலும் சிறிது வேக விடவும்.
நன்கு கொதித்து சாம்பார்பொடி வாசனை அடங்கியதும், அடுப்பை சிம்மில் வைத்து விடவும்.
வேறு ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி, அது சூடானதும், கடுகு போட்டு பொரிந்ததும், பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், சீரகம் மற்றும் கறிவேப்பிலையை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு தாளித்து கொள்ளவும்.
இந்த தாளிப்பை வெந்து இருக்கும் மாங்காய் பருப்பு கலவையில் கொட்டி, கலந்து விடவும்.
சுவையான மாங்காய் பருப்பு தயார். சூடான சாதத்தில் இந்த மாங்காய் பருப்பை போட்டு, சிறிது நெய் விட்டு சாப்பிட்டால் ருசி அபாரமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பாக்கும் போதே எப்படி இருக்கும்னு தெரியுது சுஶ்ரீ

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எனக்கு மாங்காய் பருப்பு ரொம்ப பிடிக்கும். ஆனா பாசிபருப்புல செய்வேன். சூப்பர் ரெசிபி :-)

KEEP SMILING ALWAYS :-)

மாங்காய் பருப்பு பார்க்கும்போதே சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள். நாளைக்கு செய்துட வேண்டியதுதான்.

எனக்கும் ரொம்ப பிடிக்கும் பார்க்கும்போதே சாப்பிட தோணுது வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

குறிப்பை வெளியிட்ட அட்மின் & அறுசுவை குழுவிற்கு முதல் நன்றி!

ஆமினா, நாகா, வினோஜா & ரேணு,
உங்களோட பாராட்டிற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

வித்தியாசமான குறிப்புங்க. நான் இதுவரை செய்ததில்லை... அவசியம் ட்ரை பண்றேன். நல்லா இருக்கு. பார்க்கும்போதே எப்ப செய்யலாம்னு இருக்கு... அழகா செய்து காட்டி இருக்கீங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மாங்காய் பருப்பு நல்லாயிருக்கே...ஈஸியா,அழகா செஞ்சுருக்கீங்க
வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வனி,
ரொம்ப நன்றி உங்க பாராட்டுகளுக்கு... :) எனக்கு மிகவும் பிடித்த என் அம்மாவின் செய்முறை இது! அவசியம் செய்துப்பார்த்து சொல்லுங்க வனி. மீண்டும் நன்றி!

இளவரசி,
ரொம்ப நன்றிங்க உங்க பாராட்டிற்கும், வாழ்த்துகளுக்கும்!

அன்புடன்
சுஸ்ரீ

இன்னைக்கு இந்த மாங்காய் பருப்பு செய்துட்டேன் :) நிறைய மாங்காய் கிடைச்சுது ஒரு நண்பர் மூலம்... இந்த வகை செய்தாச்சு. ரொம்ப சூப்பரா இருந்தது சுஸ்ரீ. இப்ப தான் சாப்பிட்டேன். சூப்பர் சூப்பர். இனி அடிக்கடி செய்வேன். நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா