நவதானிய அடை

தேதி: December 10, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

பச்சரிசி - ஒரு கப்
துவரம்பருப்பு - கால் கப்
கடலைப்பருப்பு - ஒரு பிடி
பயத்தம்பருப்பு - ஒரு பிடி
கொண்டைக்கடலை, உளுத்தம்பருப்பு - இரண்டும் சேர்த்து ஒரு பிடி
மசூர்தால், காராமணி, நிலக்கடலை - மூன்றும் சேர்த்து ஒரு பிடி
மிளகாய் வற்றல் - 10
பெரிய வெங்காயம் - 2
கறிவேப்பிலை - 2 கொத்து
பெருங்காயப்பொடி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயார்படுத்தி வைக்கவும்.
அரிசி, பருப்புகளை ஒன்றாக சேர்த்து, மிளகாய் வற்றலுடன் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்த அரிசி, பருப்பு கலவையை மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைக்கவும். உப்பு, பெருங்காயப்பொடி, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும்.
கனமான அடைக்கல்லை அடுப்பில் வைத்து மாவை சற்று கனமாக ஊற்றி, நடுவில் ஒரு சிறிய ஓட்டை போட்டு நல்லெண்ணெய் விடவும்.
நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு தேங்காய் எண்ணெய் விட்டு மொறுமொறுப்பானதும் எடுக்கவும்.
நவதானிய அடை ரெடி. சாம்பார், வெண்ணெய், வெல்லத்துடன் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ்... சித்தி நியாபகம் வந்தாச்சு.... நவதானிய அடையும், வெண்ணையும் சூப்பர் காம்பினேஷன்... நியாபகப்படுத்தினதுக்கு தேங்க்ஸ் ஆன்ட்டி :)

KEEP SMILING ALWAYS :-)

ரொம்ப நல்லா இருக்கு... சத்தான அடை. எனக்கு அடை ரொம்ப விருப்பம், ஆனா இவர் தொடவே மாட்டார். ஊருக்கு போய் தான் ட்ரை பண்ணனும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சரி சூப்பரான அடை கூட தேங்காய் சட்னியோட சூப்பரா போகும் வனி இவருக்கும் பிடிக்காது அதனால நானும் அத்தை மாமவும் செய்து சாப்பிடுவோம்....

இப்படிக்கு ராணிநிக்சன்

ம்ம்ம்..... பார்த்த உடனே சாப்பிடணும் போல இருக்குங்க.....சூப்பர்.... கண்டிப்பா செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்......

சூப்பர் அடை, நல்லா சத்து உள்ள அடை.

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவைக் குழுவினருக்கு நன்றி....
நாகா, வனிதா, ராணி, ப்ரியா, வர்தினி....பாராட்டிய உங்களுக்கு மிக்க நன்றி...