கீரைக்குழம்பு

தேதி: December 12, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

ஆரஞ்சுநிற சீனிக்கிழங்கில் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் A அதிகம் உள்ளது. முருங்கைக்கீரை தினமும் உணவில் சேர்த்தால் ஆரோக்கியம். வேர்க்கடலையில் புரோட்டின் மற்றும் இதர சத்துக்களோடு இதயத்துக்கு அவசியமான கோஎன்சைம் Q10 அதிகம் உள்ளது.

 

ஆரஞ்சுவண்ண சீனிக்கிழங்கு - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 2
சாம்பார்த்தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி
வறுத்த வேர்க்கடலை - ஒரு கைப்பிடி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய்ப்பால் பவுடர் - ஒரு மேசைக்கரண்டி
அரிசி தண்ணீர் – குழம்புக்கு தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கீற்று
கறிவடகம் - 1


 

முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் சீனிக்கிழங்கை பொடியாக நறுக்கி வைக்கவும். பூண்டை உரித்து வைக்கவும். முருங்கைக்கீரையை கழுவி உருவி வைக்கவும். புளியை கரைத்து வடிக்கட்டி வைக்கவும். அரிசி கழுவிய இரண்டாம் நீரை குழம்புக்கு தேவையான அளவு எடுத்து வைக்கவும். தேங்காய் பால் பவுடரை வெந்நீரில் கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பின் கறிவடகம், வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாயை ஒன்றன்பின் ஒன்றாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் வறுத்த வேர்க்கடலை மற்றும் சாம்பார் பொடியை போட்டு வதக்கவும்.
தூள் வதங்கியதும் சீனிக்கிழங்கை போட்டு நன்கு வதக்கவும்.
பின் அரிசி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதிக்கும் போது முருங்கைக்கீரையை போடவும்.
நன்கு கொதித்ததும் புளிக்கரைசலை ஊற்றி மிதமான தீயில் வைத்து குழம்பை எண்ணெய் மிதக்கும் வரை கொதிக்க விடவும்.
ஓரளவு கெட்டிபதம் வந்ததும் தேங்காய்ப்பாலை ஊற்றி கலந்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
சுவையான சீனிக்கிழங்கு முருங்கைக்கீரை குழம்பு ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இலா, நல்ல சத்தான கீரை குழம்பு, கொடுத்து இருக்கீங்க! வாழ்த்துக்கள்ப்பா! ஒரு சின்ன டவ்ட் சீனிக்கிழங்குன்னா சர்க்கரைவல்லிக்கிழங்கா?

வித்தியாசமான குறிப்பு இளவரசி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சம குறிப்பு. ப்ரெஸெண்ட் பண்ண விதம் அழகோ அழகு. இது எல்லாத்துக்கு மேல உண்மையில் ரொம்ப ஆரோக்கியமான குறிப்பு. அதுக்காக ஸ்பெஷல் தேன்க்ஸ் & வாழ்த்துக்கள் பல. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கு மிக்க நன்றி

சங்கீதா சர்க்கரை வள்ளிக்கிழங்கும் இதேதான்..பரங்கிக்காயிலும் இதேபோல் செய்யலாம்.

ஆமினா,
நன்றிங்க..இனிப்பு,காரம்,புளிப்பு எல்லாம் சேர்ந்து சூப்பரா இருக்கும்.

வனி,பிடிச்சிருக்கா..கரெக்டா வந்து பாராட்ட உங்கள அடிச்சுக்கவே முடியாது
மாலே போயாச்சா?செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க..நன்றி :)

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வித்தியாசமான குறிப்பு வாழ்த்துகள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நல்ல சத்தான,சுவையான குறிப்பு.வாழ்த்துக்கள்

சத்தான குழம்பு தான்... கொஞ்சம் வித்தியாசமாவும் இருக்கு.
//ஆரஞ்சுவண்ண சீனிக்கிழங்கு/// சக்கரவள்ளி கிழங்கா சொல்றீங்க. நம்ம ஊருல இதுக்கு பேர் என்ன??

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ரேவதி நன்றிங்க...சுவையாவும் இருக்கும் முயற்சி பண்ணுங்க...நன்றி

ஆனந்தி..சத்தானதுதாங்க..செஞ்சுட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க நன்றி

சுகந்தி..முன்னாடி பதிலிலேயே சொல்லிட்டேங்க...சீனிகிழங்கு,சர்க்கரைவள்ளிக்கிழங்கு எல்லாம் அதே ஸ்வீட் பொட்டொட்டோதான்..:) சதைப்பகுதி வெள்ளை நிறத்திலும் இருக்கும் ஆரஞ்சுநிறத்திலும் கிடைக்கும்..வேற எதும் சந்தேகமிருந்தாலும் கேளுங்க

நன்றி சுகந்தி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி,

நல்ல சுவையான, வித்தியாசமான குறிப்பு!. ஆரோக்கியமானதும்கூட... வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ