கொள்ளு ரசம்

தேதி: July 12, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கருப்பு கொள்ளு - கால் கிலோ
புளிக்கரைச்சல் - ஒரு கப்
கய்ந்த மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 15 இலை
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

கொள்ளை சுத்தம் செய்து 6 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் வேகவைத்து எடுத்து மசித்து கொள்ளவும்.
ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம் மற்றும் காய்ந்த மிளகாயை போட்டு வருத்து கொள்ளவும்.
கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து பச்சை மிளகாய் மற்றும் புளிக்கரைச்சலை ஊற்றவும்.
4 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். மசித்து வைத்த கொள்ளை அதில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விடவும். நன்கு கொதி வந்ததும் இறக்கி வைத்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்