காலிஃப்ளவர் சப்ஜி

தேதி: December 15, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

காலிஃப்ளவர்--- 1(சிறியது)
உரித்த பட்டாணி---- 1/4 கப்
உருளைக்கிழங்கு--- 1
மஞ்சள்பொடி--- 1/2 தேக்கரண்டி
காரப்பொடி--- 1 தேக்கரண்டி
கரம் மசாலா-- 1/2 தேக்கரண்டி
சீரகம்-- 1 தேக்கரண்டி
இஞ்சி-- சிறுதுண்டு
பச்சை மிளகாய்-- 2
எண்ணை-- 2தேக்கரண்டி
வனஸ்பதி-- 1 தேக்கரண்டி
உப்பு-- தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி


 

1. காலிஃப்ளவர், உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கவும்.

2. எண்ணை, வனஸ்பதியை வாணலியில் விட்டு சீரகம் தாளிக்கவும். அதில் பச்சைமிளகாய், இஞ்சி போட்டு சற்று வதக்கவும்.

3. அதிலேயே உருளைக்கிழங்கு போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும். அத்துடன் காலிஃப்ளவர், பட்டாணி சேர்த்து சற்று வெந்ததும், மஞ்சள்பொடி, காரப்பொடி, கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். அடிக்கடி கிளறி விடவும்.

4. நன்கு வெந்து எல்லாம் சேர்ந்து கொண்டதும் மேலே கொத்தமல்லி தழை தூவி சப்பாத்தியுடன் பரிமாறவும்.பிடித்தவர்கள் எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த குறிப்பு நல்லா இருக்கு ஆன்ட்டி.. :-)

KEEP SMILING ALWAYS :-)

நன்றி நாகா...