கத்தரிக்காய் துவையல்

தேதி: December 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (8 votes)

ஸ்ரீவித்யா ஐயர் அவர்களின் குறிப்புகளிலிருந்து வனிதா அவர்கள் செய்த பார்த்த துவையல் இது

 

கத்தரிக்காய் - 4
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 6
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு
புளி - சுண்டைக்காய் அளவு
எண்ணெய் - 8 தேக்கரண்டி


 

4 தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுந்தை வறுத்து எடுக்கவும்.
அதே எண்ணெயில் மிளகாய் வற்றலை வறுத்து எடுக்கவும்.
மீண்டும் 4 தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் பெருங்காயம் போட்டு நறுக்கிய கத்தரிக்காய் போட்டு வதக்கி எடுக்கவும்.
சூடு ஆறிய பின் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சுண்டைக்காய் அளவு புளி மற்றும் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். நீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
சுவையான கத்தரிக்காய் துவையல் தயார். சாதத்தோடு பிசைந்து சாப்பிட, தயிர் சாதம், கலவை சாதங்களுக்கு நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ் தயிர்சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... வெந்தய தோசைக்கு படுஅமர்க்களமான சைட்டிஷ்

KEEP SMILING ALWAYS :-)

ரொம்ப எளிமையான துவையல், சீக்கரம் பண்ண கூடிய ஒரு டிஷ்.... கடைசி படம் சூப்பர், கத்திரிக்காய் அழகா இருக்கு.பிரெஷ் ஹா கழுவி வெச்சு இருக்கீங்க போல!! மாலே கத்திரியா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஈசியா இருக்கு இந்த துவையல்.போட்டோஸ் சூப்பர்:-)

வனி,
முகப்பில் பார்த்ததுமே நீங்கதான்னு கண்டுபிடிச்சிட்டேன்! :) துவையல் சிம்ப்ளி சூப்பர்! வாழ்த்துக்கள் வனி, அழகா செய்த உங்களுக்கும், அருமையான குறிப்பு கொடுத்த ஸ்ரீவித்யாவிற்கும்.

அன்புடன்
சுஸ்ரீ

இந்த துவையல் இட்லி,தோசைக்கும் சரியான மேட்ச். வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

paakum poathu aasaiyaga iruku. very nice

காலைல பார்க்காம மிஸ் பண்ணிட்டேன். ;( கெதியா ட்ரை பண்றேன் வனி.

‍- இமா க்றிஸ்

வனி..
அழகான குறிப்பு.. கடைசி புகைப்படத்தில் இருக்கும் கத்தரிக்காய் நிஜ காயா இல்லை காயின் படம் போட்ட மேட் மீது பவுள் இருக்கிறதா? அது பார்க்க ரொம்ப அழகா இருக்கு.. :)

குறீப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி. :)

நாகா... மிக்க நன்றி. :)

சுகி... ஆமாம் மாலே கத்திரி தான் ;) கழுவி சமைக்க எடுத்தேன், சைஸ் ரொம்ப பெருசா இருந்ததால் ஒன்னோட நிருத்தி, இன்னொன்னை போட்டோக்கு போஸ் கொடுக்க வெச்சுட்டேன். மிக்க நன்றி.

ஆனந்தி... மிக்க நன்றீ. :)

சுஸ்ரீ... மிக்க நன்றி :) எப்படிய்யா எங்க போனாலும் கண்டு பிடிக்கறீங்க???

மஞ்சுளா... ஆமாம். மிக்க நன்றி :)

நவனி... சுவையும் அருமையா இருக்கும். மிக்க நன்றி. :)

இமா... ட்ரை பண்ணீங்களா?? சொல்லவே இல்லையே... செய்துட்டு சொல்லுங்க இமா. மிக்க நன்றி :)

சாந்தினி... சந்தேகமா??? உண்மையான கத்திரிக்காய் தான் :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா