பிட்டு

தேதி: December 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (2 votes)

 

அரிசிமாவு - ஒரு கப்
வெல்லம் - ஒரு கப்
நெய் - அரை கப்
ஏலக்காய் - 8
முந்திரிபருப்பு - 15
திராட்சை - 15
தேங்காய்த் துருவல் - அரை கப்


 

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
அரிசிமாவை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுக்கவும்.
அரை கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் மஞ்சள் பொடி, சிட்டிகை உப்பு சேர்த்து சூடுப்படுத்தவும்.
அந்த தண்ணீரை கை பொறுக்கும் சூட்டில் வறுத்த மாவில் சிறிது, சிறிதாக விட்டு பிசறவும். மாவு மொத்தையாகக் கூடாது. உதிராக இருக்க வேண்டும். அதை ஒரு சல்லடையில் சலித்தால் கீழே கட்டி இல்லாமல் விழும்.
இதை இட்டிலித்தட்டில் வைத்து வெயிட் போடாமல் ஆவியில் வேக வைக்கவும்.
வெந்ததும் ஒரு தட்டில் கொட்டவும். இதே போல் எல்லா மாவையும் வேக வைத்து எடுக்கவும்.
ஆறியதும் நன்கு உதிர்க்கவும். அத்துடன் துருவிய தேங்காய் சேர்த்து, ஏலக்காயைப் பொடி செய்து போட்டு கலக்கவும்.
வெல்லத்தை ஒரு கரண்டி தண்ணீர் சேர்த்து பாகு வைக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிக்கட்டி மீண்டும் பாகு வைக்கவும். நல்ல கெட்டிப்பாகு (தண்ணீரில் ஒரு தேக்கரண்டி பாகை விட்டால் உருண்டு வரும், தொய்யக்கூடாது.)
பதம் வந்ததும் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உதிர்த்த பிட்டில் விட்டு வேகமாகக் கலக்கவும். பாகு நன்கு பரவியதும் கட்டியாகாமல் கைகளால் நன்கு கலக்கவும். பிட்டு பாகுடன் சேர்ந்து கொண்டு நன்கு உதிராக வரும்.
நெய்யை சுடவைத்து அதில் முந்திரி, திராட்சை வறுத்துப் போட்டு நன்கு கலக்கவும். மணமணக்கும் பிட்டு வாயில் போட்டால் கரையும்.

*அரிசிமாவு நல்ல நைஸாக இருக்க வேண்டும்
*மாவை ப்ரௌன் நிறம் வரும் வரை வறுக்க வேண்டும். கையால் கோலம் போடும் பதமாக இருக்க வேண்டும்.
*வெந்நீர் விட்டுப் பிசையும்போதே மாவு உதிராக இருக்க வேண்டும். மொத்தையாக இருந்தால் பிட்டும் களி மாதிரி ஆகிவிடும்.
*பாகு நல்ல கெட்டிப் பாகாக இருக்க வேண்டும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ம்ம்ப நல்லா இருக்கு ஆன்ட்டி... நாளை மறுநாள் செய்துட்டு சொல்றேன் :-)

KEEP SMILING ALWAYS :-)

ஆன்ட்டி டிபரண்டா இருக்கு...புட்டு மாதிரி பண்ணி வெல்லத்துல போட்டுடிங்க... சூப்பர் எனக்கும் புட்டு ரொம்ப பிடிக்கும்.. கண்டிப்பா ஒரு நாள் செஞ்சுட்டு சொல்றேன். ஆன்ட்டி...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

பார்த்தாவே சாப்பிடணும் போல ஆசையா இருக்கு ஆன்ட்டி....... ஆனா இப்பொ இனிப்பு சாப்பிட வேண்டாம்னு டாக்டர் சொல்லி இருக்காங்க...... குழந்தை பிறந்த பின்பு கண்டிப்பா செஞ்சு சாப்பிடுவேன்........

ஆன்ட்டி சூப்பர் ரெசிபி வாழ்த்துகள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ராதாம்மா எனக்கு இந்த புட்டு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என் ப்ரண்ட் வீட்டில் சாப்பிட்டு இருக்கேன் அவங்க கூட பிராமின் தான், எங்க வீட்டுல இப்படி செய்யவே மாட்டாங்க. நிச்சயம் இது போல் சண்டே செய்து பார்த்துடுறேன், மாவு கூட இருக்கும்மா.

புட்டு மிகவும் நன்றாக இருக்கிறது.செய்முறை விளக்கமும் புரியும்படி உள்ளது

புட்டு அருமையா இருக்கு! வெல்லம் சேர்த்து கலந்து முடிப்பது புதுசா இருக்கு! வாழ்த்துக்கள்!

உடனே எனக்கும் சாப்பிட ஆசையா இருக்கு. ஆனா, என்ன பண்ண?, புட்டுக்கு வீட்டில் என்னைத்தவிர யாரும் ஃபேன்ஸ் கிடையாது!. :( ஆனாலும், இப்படி வெல்லம் சேர்த்து செய்வது புசுசா இருக்கறதால, செய்து பார்த்திட வேண்டியதுதான்.

ஒரே ஒரு சந்தேகம்: அரிசி மாவை வறுத்துதான் செய்யனுமா? என்னிடம் ஊரில் இருந்து கொண்டு வந்த இடியாப்பம்/புட்டு மாவு இருக்கு.(நான் எப்பவும் இந்த மாவில்தான் புட்டு செய்வேன்.) அதில் செய்தால் எப்படி,நன்றாக வரும்தானே?! கொஞ்சம் தெளிவு படுத்துங்க. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவைக் குழுவினருக்கு நன்றி...

நாகா, மீனு, ப்ரியா, முகில்....பாராட்டுக்கு நன்றி...செய்து பார்த்து சொல்லுங்கள் தோழிகளே....

சுஸ்ரீ....வாழ்த்துக்கு நன்றி...அரிசி மாவு நல்ல நைஸாக இருக்க வேண்டும்.அரிசிமாவை ப்ரௌன் கலராக வறுக்க வேண்டும்...நீங்கள் சொல்லும் பிட்டுமாவு குழாய்ப் பிட்டுக்கு நன்றாக இருக்கும். அது நைஸாக இருப்பதில்லை.
முன்பெல்லாம் அரிசி மாவை தண்ணீரில் ஊற வைத்து, அதை உரலில் இடித்து செய்வோம். இப்பொழுதும் மிக்ஸியில் அரைத்து செய்யலாம். நல்ல அரிசி மாவு கிடைத்தால் அதை மேற்கூறியபடி வறுத்துதான் செய்ய வேண்டும்.
அடுத்து பாகு நல்ல கெட்டிப்பாகாக இருக்க வேண்டும். மாவில் விட்டு நன்றாக, வேகமாக கலக்க வேண்டும். இல்லாவிட்டால் பாகு கட்டி கட்டியாக இருக்கும்; சேர்ந்து கொள்ளாது.
இந்தப் பிட்டு செய்வது சற்று கடினம். ஆனால் சுவையில் அருமையாக இருக்கும்.

ஆனந்தி, ரேவதி....பாராட்டுக்கு நன்றி...

வித்தியாசமான செய்முறை. நல்லா இருக்கு ராதா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனிதா...