பிரெட் வடை

தேதி: July 12, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

வெறும் பிரட்டாக சாப்பிட சலிப்பாக இருந்தால், இந்த முறையில் வடைகளாகச் சுட்டு சாப்பிடலாம். மாலை நேரத்திற்கு ஏற்ற சிற்றுண்டி.

 

பிரெட் - ஒரு பாக்கெட்
வெங்காயம் - 2
அரிசி மாவு - 3/4 கப்
தயிர் - 1 1/2 கப்
பச்சை மிளகாய் - 6
துருவிய கேரட் - ஒரு கப்
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு கப்
சமையல் சோடா - கால் தேக்கரண்டி
புதினா - ஒரு கொத்து


 

10 பிரட் துண்டங்களை எடுத்து துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
வெங்காயத்தையும் மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கேரட்டை துருவி ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவைக் கொட்டி அதில் துருவின காரட்டையும் சேர்க்கவும்.
அத்துடன் பொடியாக நறுக்கின வெங்காயம், தயிர், புதினா, சோடா உப்பு, உப்பு அனைத்தையும் சேர்க்கவும்.
எல்லாவற்றையும் ஒன்றாய் சேர்த்து நன்றாகப் பிசையவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து பிசையவும்.
பிசைந்த மாவை அப்படியே சுமார் 10 நிமிடம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை எடுத்து இலேசாக எண்ணெய் தடவின உள்ளங்கையில் வைத்து, அதிக தடிமன் இல்லாமல் தட்டி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சட்டியின் அளவைப் பொறுத்து ஒரு முறைக்கு நான்கு அல்லது ஐந்து போட்டு வேக வைத்து எடுக்கவும். இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவிடவும்.
வடை நன்கு வெந்தபிறகு எடுத்து, ஒரு பேப்பரில் இட்டு எண்ணெய் வடியவிடவும்.
இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் செல்வி. பத்மினி அவர்கள். சிறு வயது முதலே சமைக்க ஆரம்பித்துவிட்ட இவர்,ஒரு சாரசரி இல்லத்தரசி தெரிந்து வைத்திருக்கும் அனைத்து உணவுகளையும் மிகவும் சுவையாகத் தயாரிக்கத் தெரிந்தவர்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

hi padmini,
i did this vadai yesterday, in burger bun. it came out well.instead of கடலை பருப்பு vadai(creates gastric problem also), we can do this.without wasting the bun,i did this.thanks for ur recipie.
viji

nalla senjurukkange nanum try panni pakkare.

ஐடியா சூப்பரா இருக்கு. ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்.
பத்மினி... ரொம்ப குட்டிப் பொண்ணா தெரியுறாங்க. அழகா சமைச்சுக் காட்டி இருக்காங்க. :-)

‍- இமா க்றிஸ்