பனீர் சைட் டிஷ்

தேதி: July 13, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பனீர் - ஒரு கப்
தக்காளி (பெரியதாக) - ஒன்று
வெங்காயம் - ஒன்று
முந்திரிப்பருப்பு - 20
கசகசா - ஒரு ஸ்பூன்
ஸ்டார்பூ, ஏலக்காய், பட்டை, கிராம்பு - தலா ஒன்று
பால் - ஒரு கப்
மல்லிக்கீரை - பாதி கட்டு
மசாலாத்தூள் - ஒரு ஸ்பூன்
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
எண்ணெய் - 5 ஸ்பூன்
உப்பு - அரை ஸ்பூன்


 

தக்காளி, வெங்காயத்தை நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவேண்டும்.
10 முந்திரிப்பருப்பையும், கசகசாவையும் இதே போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பனீரை 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு லேசான முறுகலாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, ஸ்டார் பூ அனைத்தையும் போட்டு, லேசான வாசனை வந்ததும் 10 முந்திரி துண்டுகளை போடவேண்டும்.
உடனே அரைத்த தக்காளி, வெங்காயத்தையும் போட்டு பச்சை வாசனை மாறும்வரை லேசாக வதக்கி, அத்துடன் மசாலாத்தூள், மிளகாய்தூள், உப்பு போட்டு கிளறிவிட்டு, அரைத்த முந்திரி, கசகசாவையும் அத்துடன் சேர்க்கவேண்டும்.
பிறகு அதில் பசும்பால் ஊற்றி, வறுத்த பனீரைப் போட்டு, மல்லிக்கீரையை நைசாக நறுக்கி அதன்மேல் போட்டு கிளறிவிட்டு, 2 நிமிடம் கழித்து இறக்கிவிடவேண்டும்.
இது சப்பாத்தி, பரோட்டாவுக்கு நன்றாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்