வாழைக்காய் பொடி

தேதி: December 20, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (4 votes)

 

வாழைக்காய் - ஒன்று
துவரம்பருப்பு - அரை கப்
கடலைப் பருப்பு - கால் கப்
பெருங்காயம் - சிறுத்துண்டு
மிளகாய் வற்றல் - 3
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

முதலில் தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாழைக்காயை தோலுடன் இரண்டாக நறுக்கி வேக விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம், மிளகாய் வற்றல், துவரம்பருப்பு, கடலைபருப்பு ஆகியவற்றை தனித்தனியாக சிவக்க வறுக்கவும்.
வேக வைத்த வாழைக்காயை எடுத்து ஆறியதும் தோலை உரித்து உதிர்க்கவும். வறுத்தவற்றை ஆற வைக்கவும்.
வறுத்தவற்றுடன் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடி செய்யவும்.
உதிர்த்த வாழைக்காய், பருப்புப் பொடி இரண்டையும் ஒன்றாகக் கலந்து கைகளால் நன்கு கலக்கவும். நன்கு உதிர்ந்துவிடும்.
இந்தப்பொடி சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும், தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளவும் அருமையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழைக்காய் பொடி வித்தியாசமா இருக்கு. பருப்பு பொடி மட்டும் அரைத்து வைச்சு இருந்தா சீக்கிரம் செய்துடலாம் போல. வாழ்த்துக்கள்

ராதா.,
நல்ல கமகமக்கும் ருசியான பொடி தோசைக்குமேலவும் தூவி விட்டு சாப்பிடலாம்னு நினைக்கிறேன், அருமையான குறிப்புக்கு நன்றி மற்றும் மேலும் குறிப்புகள் வழங்க வாழ்த்துக்கள்;-)

Don't Worry Be Happy.

வித்தியாசமான பொடி வகை......... நிச்சயம் டிரை பண்றேன்....... இது ஒரு நாள் மட்டும் தான் தாங்குமா?

ராதாம்மா வித்தியாசமான குறிப்பு. முயற்சி செய்றேன் ராதாம்மா ரொம்ப ஈஸியாவும் தெரியுது. தொடர்ந்து கொடுங்கம்மா

விருப்ப பட்டியலில் சேர்த்துள்ளேன் :-)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

குறிப்பு வித்தியாசமாகவும் நன்றாகவும் இருக்கு. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். கைவசம் வாழைக்காய் இருக்கு :)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வித்தியாசமான பொடி குறிப்பு, எளிமையானதும்கூட! அடுத்தமுறை வாழைக்காய் வாங்கியதும் செய்து பார்த்திட வேண்டியதுதான்! வாழ்த்துக்கள்!.

அன்புடன்
சுஸ்ரீ

banana podi, very good i will try it. thank you.

arumai

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவைக் குழுவினருக்கு சற்று தாமதமான நன்றி!!

வினோஜா நன்றி...நீ சொன்னது போல பருப்புபொடி ரெடியா இருந்தா செய்வது ரொம்ப சுலபம்...

ஜெயா...பாராட்டுக்கு நன்றி....தோசையுடன் சரிவருமானு எனக்கு தெரியல....ட்ரை பண்ணி பாருங்க..

.நன்றி ப்ரியா....இதை ஃப்ரிட்ஜில் வைத்தால் 3 நாட்களுக்கு நன்றாக இருக்கும்...செய்து பார்த்து சொல்லுங்க...

முகில், ஆமினா, சுஸ்ரீ, லாவண்யா....பாராட்டுக்கு நன்றிகள்....செய்து பார்த்து பின்னூட்டம் கொடுங்க.
..
பூங்குழலி....பாராட்டுக்கு நன்றி....தமிழில் பதிவிட பழகுங்களேன்...