சௌமின் (பேச்சுலர்ஸ்)

தேதி: December 20, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சைனீஸ் நூடுல்ஸ்- ஒரு கப்
வெங்காயம்-2
தக்காளி-4
கறிவேப்பிலை- ஒரு கொத்து
பச்சைமிளகாய்-1
முட்டை-2
உப்பு-தேவைக்கு
எண்ணெய்-தாளிக்க

சாஸ் வகைகள்
தக்காளி சாஸ்-5 ஸ்பூன்
சோயா சாஸ்-1 ஸ்பூன்
ரெட் சில்லி சாஸ்- 2 ஸ்பூன்
க்ரீன் சில்லி சாஸ்-2 ஸ்பூன்


 

நூடுல்ஸை சுடுநீரில் போட்டு ஒரு நிமிடத்திலேயே எடுத்து குளிர்ந்த நீரில் கழுவி வடிகட்டவும். 2 ஸ்பூன் எண்ணெய்யை தூவி எல்லா இடங்களிலும் பரப்பவும்(ஒன்றோடொன்று ஒட்டாமல் வரும்)

முட்டையை உப்பு சேர்த்து வதக்கி எடுத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கியதும் வெங்காயம் உப்பு சேர்க்கவும்.

பொன்னிறமானதும் தக்காளி மற்றும் சாஸ் வகைகளை சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கவும். இது க்ரேவி பதத்தில் வரும்.

பின்னர் நூடுல்ஸூம், முட்டையும் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.


இஞ்சி பூண்டு தேவையில்லை. தக்காளி சாஸ் மற்றும் சோயா சாஸ் தான் முக்கியம். மற்ற சாஸ் வகைகள் சுவைக்காக மட்டுமே. விருப்பப்பட்டால் வெங்காயம் வதக்கும் போதே விரும்பிய காய்கறிகள் சேர்க்கலாம். முட்டை தனியாக வதக்கி கடைசியில் சேர்ப்பதால் முட்டை வாசம் வராது.

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த குறிப்பு நல்லா இருக்கு Madam .

Thanks

Rajeshwarianantharaman

Mrs.Anantharaman