கீரைத்தண்டு பொரியல்

தேதி: December 21, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

கீரைத்தண்டு - 1 கட்டு

வெங்காய‌ம் - 1/4 கப் (பொடியாக‌ ந‌றுக்கிய‌து)

க‌ட‌லைப் ப‌ருப்பு - 2 மேசைக்க‌ர‌ண்டி

தேங்காய்ப்பூ/துருவ‌ல் - ‍ 2 மேசைக்க‌ர‌ண்டி

ம‌ஞ்ச‌ள்தூள் - 1/4 தேக்க‌ர‌ண்டி

எண்ணெய் -‍ 1/2 தேக்க‌ர‌ண்டி

க‌டுகு - 1/2 தேக்க‌ர‌ண்டி

காய்ந்த‌‌ மிள‌காய் -‍ 2 (அ) 3

பெருங்காய‌த்தூள் - 1 சிட்டிகை

க‌றிவேப்பிலை -‍ சிறிது

உப்பு - தேவையான‌ அளவு


 

முத‌லில் கீரையை தண்ணீரில் நன்கு அலசி ஆய்ந்து எடுத்துவிட்டு, த‌ண்டை மட்டும் பொடியாக‌ ந‌றுக்கி வைத்துக்கொள்ள‌வும்.

ஒரு பாத்திர‌த்தில் சிறிது நீர் விட்டு க‌ட‌லைப்ப‌ருப்பை கழுவி போட்டு, ம‌ஞ்ச‌ள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.கடலைப்பருப்பு சிறிது வேகத்தொடங்கியதும், அரிந்து வைத்திருக்கும் கீரைத்தண்டை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வேக‌விட‌வும். இரண்டும் சேர்ந்து வெந்தபதம் வந்ததும், அடுப்பை அணைத்துவிடவும்.

வேறு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு பொரிந்ததும், மிளகாயை இரண்டாக கிள்ளிப்போட்டு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலையை சேர்த்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், வேகவைத்த கீரைத்தண்டு கடலைப்பருப்பு கலவையை போட்டு, தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து, கொஞ்ச நேரம் கலந்து வேக விடவும்.

கடைசியாக தேங்காய்ப்பூ போட்டு கிளறி இறக்கவும். மிக சுலபமான, சத்தான கீரைத்தண்டு பொரியல் தயார்!


கீரைத்த‌ண்டு, க‌ட‌லைப்ப‌ருப்பு இர‌ண்டுமே சீக்கிர‌ம் வெந்துவிடும் என்ப‌தால், நிறைய‌ நேர‌ம் விடாமல் பார்த்து எடுத்துக்கொள்ள‌வும். கீரைத்த‌ண்டு பொதுவா நிறைய‌ உப்பு தாங்காது. என‌வே, வேக‌வைக்கும்போது கொஞ்சமா உப்புபோட்டு, தேவைப்ப‌ட்டால் தாளிப்பின்போது மேலும் சேர்த்துக்கொள்ள‌லாம்.

மேலும் சில குறிப்புகள்