தேதி: December 22, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வெந்தயக்கீரை - 2 கப்
தக்காளி - 2 கப் (நறுக்கியது)
வெங்காயம் - 1 கப் ((நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
ஏலக்காய், பட்டை - 2
கிராம்பு - 4
மிளகாய்த்தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரிசியை நன்கு கழுவி அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும்.
வாணலியில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து, அதனுடன் ஊறவைத்த அரிசியை (தண்ணீரை வடித்துவிட்டு) சேர்த்து சில நிமிடங்கள் வறுத்து எடுத்து வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில், மீதம் உள்ள 1 1/2 தேக்கரண்டி எண்ணெயை போட்டு, சோம்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
இந்த கலவை நன்கு வதங்கியதும், உப்பு, அனைத்து தூள் வகைகளையும் சேர்த்து, நறுக்கிய தக்காளியையும் சேர்த்து, தளதளவென்று கொதிக்கவிடவும்.
பின்னர் இதில், வெந்தயக்கீரையையும், வறுத்தெடுத்த அரிசியையும் சேர்த்து, அரிசிக்கு இரண்டு மடங்கு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பாத்திரத்தை இறுக மூடி, மெல்லிய தீயில் 20 நிமிடங்கள் வைக்கவும்.
சாதம் நன்றாக வெந்ததும் மெதுவாக கிளறிவிட்டு, கொத்தமல்லி தூவி கலந்து பரிமாறவும். வெங்காயப்பச்சடி (அ) தயிர், சிப்ஸ் உடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
குக்கரில் செய்வதாக இருந்தால், 2 விசில் விட்டு இறக்கிவிடலாம்.
Comments
சுஸ்ரீ
குறிப்பு படத்தோட வந்திருக்கு :) அருமையா இருக்கு. இங்க இந்த கீரை கிடைப்பதில்லை. இல்லன்னா செய்துட்டு வந்து தான் பதிசே போட்டிருப்பேன். சரி... கொள்ளு பற்றி கேட்டீங்களே... எங்க சொன்னா பார்ப்பீங்கன்னு தெரியல, இங்கையே சொல்லிடறேன்... கொள்ளு சரியான சூடு தானே... அதனால் தான் பிடிக்குதாம், அதான் வலியாம்... அம்மா சொன்னாங்க :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி வனி!
தொடரும் உங்க பாராட்டிற்கு மிக்க நன்றி வனி! :) உங்களுக்கு கீரை கிடைக்கும்போது வாங்கி செய்துபார்த்து சொல்லுங்க! இங்கேயும்கூட முன்னெல்லாம் இத்தனை வகை கீரை கிடைப்பதில்லை. இப்ப இப்பதான், இந்தியன் கடைகளில், ஸ்பினாச் இல்லாமல் இதர வகைகளும் பார்க்கமுடிகிறது! :) ஆனாலும் எனக்கு ரொம்ப பிடிச்ச முருங்கைக்கீரை எங்கே தேடியும் கிடைக்கவில்லை! :(
அப்புறம், கொள்ளு பற்றிய கேள்விக்கு பதிலை, சின்ன சின்ன சந்தேகம் இழையில் இருக்காவென்று பார்த்தேன். சரி, பிஸியா இருக்கிங்க (பட்டியில தலைமைப் பதவி வேற! :)) கொஞ்ச நாள் கழித்து கேட்கலாம் என்று இருந்தேன். மறக்காம அம்மாட்ட கேட்டு சொன்னதுக்கு ரொம்ப நன்றி வனி!
(உங்க கொள்ளுக்கஞ்சியை படிச்சிட்டு செய்ய ஆசையா இருந்தாலும், ஏற்கனவே பட்ட அவஸ்தையை நினைத்து பயந்திட்டு இருக்கேன். கொஞ்சபோல செய்து, சாப்பிட்டா ஒண்ணும் பண்ணாதுதானே?!)
அன்புடன்
சுஸ்ரீ
சுஸ்ரீ
ஒன்னும் பண்ணாது சாப்பிடுங்க... ;) எனக்கும் தொடர்ந்து தினமும் சாப்பிட்டதுல சூடு பிடிச்சுகிட்டு ஒரு நாள் முழுக்க கை தூக்க முடியாம போயிருச்சு. அப்ப தான் நீங்க கேட்டது நியாபகம் வந்து அம்மாவிடம் கேட்டேன்... சூட்டு பிடிப்பு தான், தொடர்ந்து சாப்பிட கூடாது, 2 நாள் மூனு நாள் கேப் விடனும், வாரத்தில் 2 நாள் சாப்பிட்டா போதும்னு சொன்னாங்க. உண்மையில் பொண்ணு அங்க இருக்குறதால கால் பண்ணும்போதெல்லாம் அவளை பற்றியே கேட்டுட்டு இதெல்லாம் மறந்தே போயிடும், வெச்ச பிறகு தான் இதை கேட்க நினைச்சோம், அதை கேட்க நினைச்சோம்னு நியாபகமே வரும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வெந்தயக்கீரை சாதம்
சுஸ்ரீ, இன்று வெந்தயக்கீரை சாதம் செய்தேன்... மிகவும் சுவையாக இருந்தது :)
மிக்க நன்றி :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)