நவரசக் குழம்பு

தேதி: December 22, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

 

சின்ன வெங்காயம்(உரித்தது) - ஒரு கப்
முள்ளங்கி - ஒன்று
தக்காளி - 4
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள்பொடி - ஒரு தேக்கரண்டி
தனியாபொடி - 1 1/2 தேக்கரண்டி
காரப்பொடி - 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 8 தேக்கரண்டி
வதக்கி அரைக்க:
தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
பேரீச்சம்பழம் - 6
முந்திரி பருப்பு - 8
பாதாம் - 8
திராட்சை - 10
பச்சை மிளகாய் - 2
தாளிக்க:
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை
கொத்தமல்லி
உப்பு - தேவையான அளவு


 

புளியை 3 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை சிறு துண்டுகளாக்கவும்.
முள்ளங்கியை வட்டத் துண்டுகளாக நறுக்கி வேக விட்டு எடுத்து வைக்கவும்.
2 தேக்கரண்டி எண்ணெயில் வதக்கக் கொடுத்துள்ள சாமான்களை சிறிது நேரம் வதக்கவும்.
வதக்கியவற்றை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும்.
நல்லெண்ணெயை வாணலியில் ஊற்றி காய்ந்ததும் அதில் சீரகம், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, அதிலேயே உரித்த வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதில் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
தக்காளி நன்றாக வெந்து சேர்ந்து கொண்டதும் அதில் மஞ்சள் பொடி, தனியா பொடி, காரப்பொடி சேர்த்து நன்கு கிளறவும்.
எண்ணெய் பிரிந்ததும் அதில் புளிக்கரைசலை விடவும்.
வெந்த முள்ளங்கியை சேர்க்கவும். தேவையான உப்பு சேர்க்கவும். சற்று கொதித்து புளிவாசனை போனதும், அரைத்த விழுதைச் சேர்க்கவும்.
நன்கு கொதித்து குழம்பு பதம் வந்ததும் இறக்கவும். கொத்தமல்லி தழை சேர்த்து சாதத்துடன் சாப்பிடவும். வித்யாசமான சுவையில் இந்த கமகம நவரசக் குழம்பு நொடியில் காலியாகிவிடும்!!

இதில் முள்ளங்கிக்கு பதிலாக முருங்கை, உருளை, கத்தரி சேர்த்தும் செய்யலாம். முருங்கை மற்றும் கத்தரிக்காயை புளி கரைத்து விட்டபின் நேரடியாக சேர்க்கவும். முன்னால் வேகவிட வேண்டாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் திரு. பாபு மற்றும் அறுசுவைக் குழுவினருக்கு நன்றி...

அரட்டைக்கு வைக்குற மாதிரி குறிப்புகளுக்கும் புதுசு புதுசா பெயர் வைக்கறீங்க ;) பேர் சூப்பர்.... குறிப்பும் சூப்பரா தான் இருக்கும்னு பார்த்தாலே தெரியுது. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ராதாம்மா......... குழம்puக்கு தேவையான பொருளெல்லாம் வித்தியாசமான காம்பினேஷனாக இருக்கே........பெயரும் வித்தியாசமாக இருக்கு. சூப்பர். வாழ்த்துக்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஆன்ட்டி எப்படி இப்படியெல்லாம் பெயர் வச்சு அசத்துறீங்க. குழம்பும் புது விதமா இருக்கே. பேரிச்சை சேர்த்து இப்ப தான் பார்க்கிறென்.இது மாதிரி இன்னும் வித்தியாசமான குறிப்புகள் வழங்க வாழ்த்துக்கள்.

ராதாம்மா, எக்ஸலன்ட் காம்பிநேஷன்ல ரொம்ப அழகா இதுவரை கேள்விப் படாத ஒரு செய்முறையில் ரொம்ப நல்லா பண்ணியிருக்கிங்க! இன்னிக்கு நைட் எங்க வீட்ல நான் செய்யப் போறேன்.

வனிதா....என் சமையலோட சேர்த்து அரட்டை தலைப்பையும் பாராட்டியதற்கு மிக மிக நன்றி!!!
ஆனந்தி, நசீம், உத்ரா....பாராட்டுக்கு நன்றி....
உத்ரா... செய்து பார்த்து சொல்லு....எப்படி இருந்ததுனு

அசத்துறீங்க ராதாம்மா பேரு எங்க இருந்து செலக்ட் பண்றீங்க வித்தியாசமான அரைக்கும் பொருட்கள் நிச்சயம குழாம்பு சூப்பரா இருக்கும். இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்

குழம்பு செய்ய தேவையான பொருட்களை பார்த்தாலே குழம்பின் சுவை தெரிகிறது..படத்திலும் குழம்பு பார்க்க நா ஊறுது.:)

radharani

நவரசக்குழம்பு, பெயரைப்போலவே குறிப்பும் அசத்தலா இருக்கு! :) ரொம்ப புதுமையான, வித்தியாசமான காம்பினேஷனில் மசாலா அரைத்து சேர்த்து செய்து இருக்கிங்க! வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

முகில், ராதா, சுஸ்ரீ.....பாராட்டுக்கு நன்றி....

உங்க புது முயற்சியால் எனக்கு பாராட்டு...:-)
என் நன்றியும் , வாழ்த்துக்களும்

எனக்கு ஒரு சந்தேகம். எனது தங்கைக்கு முன்னாடி வலுக்கையாக உள்ளது.அவளுக்கு முடி வளர என்ன செய்வது.

divya

hi mam
tried ur kulambu today. came out very nice..

லாவண்யா, உத்ரா.....என் சமையல் குறிப்பை செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததற்கு நன்றி
திவ்யா....இது வேறு இழையில் கேட்க வேண்டிய கேள்வி....