கரம் மறுக்கும் 1 12 வயது குழந்தை pls help me

எனது குழந்தைக்கு 11/2 வயது ஆகிறது. அவள் கரம் இல்லாத அனைத்து உணவை சாப்பிடுவாள். கரம் உணவில் எப்படி சேர்பது.pls help me

என்னமோ புது நோயை தான் சொல்லுறீங்களோன்னு நெனச்சேன்..குழந்தைக அப்படி தாங்க பாவம்..காரம் உடம்புக்கு சுத்தமா நல்லதில்லை மிளகு சேத்துக்கலாம் ஆனால் மிளகாயை சேர்த்து கொடுக்காமல் இருப்பது நல்லது.மற்றபடி நம்ப சமைக்கும் உணவிலுள்ள மிதமான காரம் என்றால் தயிர் சேர்த்து அல்லது தேங்காய் பால் சேர்த்து கொடுத்து பழக்கலாம்..அவர்கள் வளரும் வரை காரம் விரும்பவே மாட்டார்கள்

ஹஹா... நான் கூட என்னவோ ஏதோன்னு நினைச்சு உள்ள எட்டி பார்த்தேன்... காரமா... அதனால் என்னங்க... காரம் பிடிக்கலான்னா கம்மி பண்ணி கொடுங்க. எங்க வீட்டில் கூட ஒரு குட்டியம்மா இப்படி தான் பண்ணுவாங்க... கொஞ்சம் காரம் உள்ளே போனாலும் ஆ ஊன்னு கத்தி உருண்டுகிட்டு இருப்பாங்க... தண்ணி பாட்டில் பாட்டிலா உள்ளே போகும். ஆனாலும் விடாம வாயில் தடவி விட்டுடுவோம். ;) இப்போ ரசம் சாப்பிடும் அளவுக்கு 2 மாதத்தில் தேரிட்டாங்க. கொஞ்சமா ரொம்ப கொஞ்சமா காரம் சேருங்க... அது பழகட்டும், அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா உங்க வீட்டு காரத்துக்கு பழகிடுவாங்க. தண்ணி பக்கத்தில் வெச்சுகிட்டு சாப்பாடு கொடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எதற்காக குழந்தைக்கு காரம் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறீங்க??

உடல்வளர்ச்சிக்கு உதவுமா? வைட்டமின்!!
அறிவு வளருமா??

என்ன காரணத்துக்காக காரம் சாப்பிடணும்??

சுவையைத் தவிர உடம்புக்கு 'அத்தியாவசியமானது' எதுவும் அதில இருக்கிறதாத் தெரியல.

சின்னக் குழந்தை அது. காரம் பொறுக்க முடியலையோ என்னவோ. எதுக்கு கஷ்டப் படுத்தணும்! சொல்லத் தெரியாதுல்ல, பாவம் அது.

என்னால இப்பவும் காரம் சாப்பிட முடியுறது இல்லைங்க. ரசிக்க முடியாது. வேற வழி இல்லாம எங்கயாச்சும் சாப்பிட்டா கொஞ்ச நேரம் கழிச்சு வயிறெல்லாம் கபகபன்னு இருக்கும். ஜெலுசில் தேடி ஓடணும். ;(

அவங்களா ஆசைப்பட்டு சாப்பிட்டா ஓகே. இல்லாம காரம் கொடுக்கிறதால லாபம்னு ஒண்ணும் இல்லை... குழந்தைக்கு ஸ்பெஷலா சமைக்கிற நேரம் பெரியவங்களுக்கு மிச்சம் என்கிறதைத் தவிர.

பாப்பா மீதி எல்லாம் நல்லா சாப்பிடுறாங்க இல்ல! என்னைக் கேட்டா, இதை ஒரு பிரச்சினையா நினைக்க வேணாம்னு சொல்வேன். அவங்களா ஆசைப்பட்டு சாப்பிடுறப்ப எந்தளவு பொறுக்க முடியுதுன்னு தெரிஞ்சு சாப்பிடுவாங்க.
~~~~~~~~~~~~
லோகேஸ்வரி, லிங்க் தலைப்பை 'காரம் மறுக்கும்' என்று மாற்றி விடுறீங்களா? ;)

‍- இமா க்றிஸ்

இது ஒரு குறை என்று நினைத்தேன் அதற்கு கரணம் அவளுக்காக நான் தனியாக தன் சமைக்கிறேன். எங்கள் வீட்டில் உள்ளவர்கள் என்னை கோபிக்கிறாகள் அதனால் தன் கேட்டேன்
உங்கள் பதிலுக்கு நன்றி. நான் தலைப்பை மாற்றிட்டேன்

என் பிள்ளைகளும் காரம் சுத்தமாக சாப்பிட மாட்டார்கள் ஒன்றாக தான் சமைப்பேன் எதிலும் காரம் சேர்க்க மாட்டேன் அவர்களுக்கு எடுத்தபிறகு கடைசியாக 1/4 ஸ்பூன் எண்ணையில் தேவைக்கு காரம் சேர்த்து தாளித்தது போல் குழம்பில் கொட்டுவேன் அப்போ காரம் சரியாகிடும்...நம்ப ஊரில் பெரியவர்கள் திட்டுவாங்க காரம் கொடுத்து பழக்கலை என்று கண்டுக்காதீங்க தெரியாம சொல்றாங்க

மேலும் சில பதிவுகள்