கத்தரிக்காய் குழம்பு

தேதி: December 23, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.2 (5 votes)

 

1. கத்தரிக்காய் - 1/4 கிலோ
2. சின்ன வெங்காயம் - 15
3. பூண்டு - 15 பல்
4. தக்காளி - 2
5. புளி - 1 சின்ன எலுமிச்சை அளவு
6. சாம்பார் பொடி - 4 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - சிறிது
8. கறிவேப்பிலை
9. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
10. தேங்காய் துருவல் - 1/4 கப்
11. முந்திரி - 10
12. உப்பு
13. கடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்பு - தாளிக்க


 

கத்தரிக்காயை நீளவாட்டில் வெட்டி வைக்கவும். வெங்காய, பூண்டு நறுக்கி வைக்கவும். தக்காளியை அரைத்து வைக்கவும்.
முந்திரியை ஊற வைத்து தேங்காயுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
புளியை 1/2 கப் நீர் விட்டு கரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
பாதி வதங்கியதும் கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
கத்தரிக்காய் நன்றாக வதங்கியதும் அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.
இதில் மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி சிறிது நீர் விட்டு மூடி தூள் வாசம் போக கொதிக்க விடவும்.
பின் புளி கரைசல் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய் முந்திரி கலவை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.


பார்க்க சற்று கெட்டியாக இருக்கும், நீர்க்க இருக்காது. மிகவும் சாஃப்ட்டான க்ரேவி கிடைக்கும். சாப்பிட நல்ல ரிச்சான சுவையோடு இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

How to make Sambar Powder.. or v'll use the readymade powder?

http://www.arusuvai.com/tamil/node/16543

நான் கொடுத்திருக்கும் சாம்பார் பொடி இது தான். அறுசுவையில் இன்னும் நிறைய சாம்பார் பொடி குறிப்பும் இருக்கு. நீங்க மேலே தேடுகவில் “சாம்பார் பொடி” என தட்டி பாருங்க. பிடிச்ச முறையில் செய்து வெச்சுக்கங்க. கடையில் வாங்குவதை விட இப்படி நாம் செய்து வைப்பது நல்லா இருக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா