doing household works with baby

hi
i have a 10 months baby. he is not allowing me to do any work.i mostly finish works while he is sleeping.but he is expecting me to be his side all the time.not allowing me to do even a small work or to say even to go to bathroom etc. and also cries the minute i get up from him.but plays well when iam beside him. how to manage my baby, how to change him or is this normal...pls clear my doubts.

Hi Lavanya,
If you are the only one to take care of your child,then definitely it is normal for him to expect you around when he is awake.At this stage,they want someone to talk and play.Get him lot of toys and try to engage him in that.i dont know where u r living.I am in US and i bought this 'Bright Starts'-around we go toy.That was my life saver.There may be more other toys that could be helpful but i tried only this one.If u have to use the bathroom,keep the toy in a place where u can see from bathroom and put the baby in that and go ahead.Basically, you have to build a trust in baby like, say that u will be back in 1 minute when u have some work and try to be in a minute.Keep doing this couple of times.So that he will start understanding that mommy will be back soon.He will not cry after that.I started doing this to my son since he was born.When i change the diaper,i used to tell him that i will be back in 1 minute.From that stage itself he knew that if i say like that, i will be back soon.So try that with ur son.Good Luck.

வீட்டுக்கு வீடு வாசப்படி தான். தனியாக குழந்தையை பார்த்துக் கொள்ளும் எல்லா தாய்மார்களும் கண்டிப்பாக (முதலாம் குழந்தையுடன்) இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். முதல் குழந்தை என்பதால் நாமும் அவர்களை விட்டு எங்கு சென்றிருக்கவே மாட்டோம். அவர்களுடனே விளையாடுவது அவர்களை பக்கத்திலே வைத்துக் கொண்டு எல்லா வேலையும் செய்வது என்று செய்வோம். அதனால் குழந்தைகள் மனதில் ஒரு விதமான சார்ந்திருத்தல் வளர்ந்திருக்கும். அது தவறே இல்லை. இப்பொழுது குழந்தை உங்களை அதிகமாக கவனிக்கிறார் அதுவும் இல்லாமல் தனிமை புதியவர் இவர்களை அடையாளம் தெரிந்துக் கொள்ள ஆரம்பிக்கிற கட்டம் இது. அதனால் அவர் விளையாடும் ஒரு பொம்மை அவர் கண்ணை விட்டு சென்றாலோ நீங்களோ அப்பவோ அவர் கண் முன்னே இருந்து சென்றாலோ கோவம் வரும். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு ஒழிந்து விளையாடுவது ரொம்பவே பிடிக்கும். நீங்கள் அவர்களிடம் பீக்கபூ விளையாடலாம். இப்பொழுதிலிருந்து குழந்தையிடம் நிறைய பேசுங்கள். நீங்கள் என்ன செய்றீங்க ஏன் செய்றீங்க என்று சொல்லுங்க. அவர்களுக்கு புரியாது என்று மட்டும் நினைக்க வேண்டாம். ஒருவேளை நீங்கள் பாத்ரூம் சென்றால் அம்மா அங்கே சென்று வருகிறேன் இரண்டு நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லி செல்லுங்கள். அதே போல் உள்ளே இருந்து அவர்களுக்கு இன்னமும் சற்று நேரத்தில் வந்து விடுவதாக உறுதி சொல்லுங்கள். அவர்கள் நம்முடைய அட்டென்ஷன் எதிர்பார்த்திருக்கிறார்கள். அதனால் தான் இதெல்லாம். அவர்களுக்கு போதிய அளவு அட்டென்ஷன் இருந்தால் கண்டிப்பாக நம்மை சீண்டவே மாட்டார்கள். அவர்களை ஒரு ரூமில் விட்டு அதில் நிறைய விளையாட்டு சாமானை போட்டு விளையாட விட்டு நீங்க வாசலில் இருங்கள். இதோ வருகிறேன் என்று சொல்லி ஒழிந்துக் கொண்டு என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். ஓரிரு நிமிடத்தில் வந்து விடுங்கள். இதனால் அவர்களுக்கு தான் தனியாக விளையாட முடியும் என்பதையும் விளக்க முடியும்.

தமிழில் எழுத எழுத்துதவி பயன்படுத்தவும். அப்போ தான் மற்ற தோழிகளும் வந்து பதில் சொல்லுவார்கள்.

லலித்தா நீங்கள் முத்து முத்தாக கருத்துகளை சொல்லியிருக்கீங்க. இதை தமிழில் சொல்லியிருந்தால் எல்லோருக்கும் படிக்க வசதியா இருந்திருக்கும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா ரொம்ப சாரி.இனிமேல் தமிழ்லையே பதிவு செய்கிறேன்.நீங்களும் ரொம்ப விளக்கமா சொல்லி இருக்கீங்க.நன்றி.
உங்கள் அறிமுகம் கிடைச்சது ரொம்ப சந்தோசம்.

நானும் இதே கேள்விதான் கேட்டேன் தமிழில்,ஒருவரை தவிர யாரும் பதில் சொல்லலே,ஆனால் இந்த பதில்கள் பயனுள்ளவை .

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

கொஞ்சம் கஷ்டம் தாங்க.
லாவண்யா சொல்லுகிற ஒளிந்து விளையாடும் விளையாட்டை நானும் செய்வேன்.
கொஞ்சம் நாம plan செய்து வீட்டு வேலை செய்தால் நல்லது.
கொஞ்சம் சிரமம் பார்க்காமல் காலையில் எழுந்து,சமையல் உட்பட எல்லா வேலையும் கணவரிடம் விட்டுட்டு செய்ய பாருங்க.
வேலையே ஷேர் செய்து கொள்ளுங்க.
நீங்க சமையல் செய்யும் போதே,கிளீனிங் முடித்து விடுங்க.
வீக் எண்டில் காய்கறி வெட்டி ஜிப்லோக்கில் போட்டுடுங்க தேங்காய்,சட்னி,மாவு,தொக்கு இதெல்லாம் அப்பப்ப செய்து வைத்து விடுங்க.அப்புறம் குழந்தை அப்படியே வந்தாலும் அதனை கீழே விட்டுட்டு சமையல் சொல்லி கொடுங்க..
குழந்தைங்க தான் இந்த உலகத்திலேயே சிறந்த survivors !!!அவங்களே அட்ஜஸ்ட் பண்ணிப்பாங்க..கவலையே படாதீங்க
நம்ம பசங்களை நாம தான் பார்த்துக்கணும்..

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்