வாழைக்காய் கோப்தா

தேதி: July 13, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைக்காய் - 1
பச்சை மிளகாய் - 1 (நன்கு அரிந்தது)
கொத்தமல்லி - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
மைதா - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1/4 கப்


 

வாழைக்காயை நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில், வெங்காயம், மிளகாய், உப்பு, மைதா, கொத்தமல்லி மற்றும் மசித்த வாழைக்காயை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
இந்த கலவையை வடை போல் தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
புளி சட்னியுடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்