காபேஜ் ரோல்ஸ்

தேதி: July 13, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை கோஸ் இலைகள் - 8
வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
பனீர் - 1 கப்
மிளகாய் பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 கப்
நூல் கண்டு - கட்டுவதற்கு
கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன்


 

முதலில் முட்டை கோஸ் இலைகளை சுத்தம் செய்து, சூடான நீரில் 5 - 6 நிமிடம் வேக வைக்கவும்.
ஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிறகு மற்ற சாமான்களை சேர்த்து (1/2 கப் எண்ணெய் தவிர) 5 - 6 நிமிடம் வதக்கி, கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.
சுத்தம் செய்த இலைகளில் 2 ஸ்பூன் வதக்கிய கலவையை நடுவில் வைத்து, நான்கு புறமும் மடித்து நூலால் கெட்டியாக கட்டவும்.
கலவை வெளியே வராமல் பார்த்துக் கொண்டு, இலைப் பொட்டலத்தை 1/2 கப் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
கொத்தமல்லி சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்