www.arusuvai.com
காபேஜ் ரோல்ஸ்
முட்டை கோஸின் மேல் இருக்கும் இலைகளில் கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. இருதயம், தசை மற்றும் எலும்புகளுக்கு இது நல்லது.
தேவையானப் பொருட்கள்
- முட்டை கோஸ் இலைகள் - 8
- வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
- பனீர் - 1 கப்
- மிளகாய் பொடி - 1/2 டீஸ்பூன்
- மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- உப்பு - 1/2 டீஸ்பூன்
- எண்ணெய் - 1/2 கப்
- நூல் கண்டு - கட்டுவதற்கு
- கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
- முதலில் முட்டை கோஸ் இலைகளை சுத்தம் செய்து, சூடான நீரில் 5 - 6 நிமிடம் வேக வைக்கவும்.
- ஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பிறகு மற்ற சாமான்களை சேர்த்து (1/2 கப் எண்ணெய் தவிற) 5 - 6 நிமிடம் வதக்கி, கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.
- சுத்தம் செய்த இலைகளில் 2 ஸ்பூன் வதக்கிய கலவையை நடுவில் வைத்து, நான்கு புறமும் மடித்து நூலால் கெட்டியாக கட்டவும்.
- கலவை வெளியே வராமல் பார்த்துக் கொண்டு, இலைப் பொட்டலத்தை 1/2 கப் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- கொத்தமல்லி சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.
-