மேக்ரோனி இன் ஸ்பினாச் சாஸ்

தேதி: December 24, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

மேக்ரோனி - 1 க‌ப்

பூண்டு - 2 (அ) 3 ப‌ல்

ஸ்பினாச் கீரை - 1 க‌ப் (ப்ளான்ச்* ப‌ண்ணிய‌து)

துருவிய‌ சீஸ் -‍ 3 மேசைக்க‌ர‌ண்டி

வெண்ணெய் - 1 1/2 மேசைக்க‌ர‌ண்டி

ஆலிவ் எண்ணெய் - 1 தேக்க‌ர‌ண்டி

மைதா மாவு - 2 தேக்க‌ர‌ண்டி

பால் - 1/2 (அ) 3/4 க‌ப்

மிள‌குத்தூள் - சுவைக்கேற்ப

உப்பு - தேவையான‌ அளவு‌


 

முத‌லில் மேக்ரோனியை உப்பு கலந்த‌‌ கொதிக்கும் நீரீல் போட்டு நன்கு வேக‌வைத்து, த‌ண்ணீரை வ‌டித்துவிட்டு, மேக்ரோனியின்மீது ஆலிவ் எண்ணெயை விட்டு லேசாக கலந்து எடுத்து வைக்கவும்.

ப்ளான்ச் பண்ணிய கீரையை, நன்கு தண்ணீரை பிழிந்துவிட்டு, பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பூண்டு பல்லையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில், வெண்ணெயை போட்டு சூடாக்கி, அதில் நறுக்கிய பூண்டு துண்டுகளைப்போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். இத‌னுட‌ன் மைதாவை போட்டு, அடுப்பு அனலை குறைவாக வைத்துக்கொண்டு, 2 - 3 நிமிடங்கள் வறுக்கவும்.

அடுத்து பாலை சிறிது சிறிதாக‌ விட்டு, க‌ட்டியில்லாம‌ல் க‌ல‌க்க‌வும். பால், மைதா எல்லாம் கலந்து கெட்டியான சாஸ் போல வரும்.

இப்போது, நறுக்கி வைத்திருக்கும் கீரையை போட்டு ஒருமுறை கலந்துவிட்டு, ஒரு கொதி வந்ததும், 2 மேசைக்கரண்டி துருவிய சீஸ், மற்றும் வேகவைத்திருக்கும் மேக்ரோனியையும் போட்டு நன்கு கலந்து விடவும். கூடவே அவரவர் சுவைக்கேற்ப மிளகுத்தூள், உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

இத‌னை ப‌ரிமாறும் பாத்திரத்தில் மாற்றி, மீத‌ம் உள்ள‌ சீஸை மேலே தூவி அல‌ங்க‌ரித்து ப‌ரிமாற‌வும்.

குழந்தைக‌‌ளுக்கு பிடித்த‌மான‌ மேக்ரோனி சீஸ், இப்போது சத்தான ஸ்பினாச் சாஸுடன் த‌யார்!


ப்ளான்சிங் என்ப‌து, கீரையை வெகு நேர‌ம் த‌ண்ணீரில் போட்டு வேகவைக்காமல் (ச‌த்து வீணாகிவிடும்), கொதிக்கும் த‌ண்ணீரில் போட்டு ஒரு சில நொடிகளே விட்டு எடுத்துவிடும் முறையாகும்.

இந்த‌‌ குறிப்பில் ஏற்கனவே ப்ளான்சிங் செய்து எடுத்த‌ கீரையை சேர்ப்பதால், கீரை வேகமாக‌ வெந்து விடும். நீண்ட நேரம் சாஸ் கொதிக்கவேண்டிய தேவை இருக்காது. ப்ளான்சிங் செய்வதால் கீரையின் கலரும் பச்சையாவே இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்