பேங்கன் கபர்த்தா

தேதி: December 26, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (6 votes)

 

கத்தரிக்காய் - 3
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
தயிர் - ஒரு கப்
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - ஒன்று
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லிதூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு, உளுந்து - ஒரு தேக்கரண்டி
பட்டை, ஏலக்காய், லவங்கம், பிரிஞ்சி - தலா ஒன்று
சீரகம் - கால் தேக்கரண்டி
கடலைபருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
வரமிளகாய் - 3
பச்சைமிளகாய் - 2


 

கத்தரிக்காயை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி பூண்டை பொடியாய் நறுக்கிக் கொள்ளவும், அல்லது துருவிக் கொள்ளவும்
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
அதன் பின் துருவிய இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின்னர் தக்காளி மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறியதும் தூள் வகைகளை சேர்த்து வதக்கவும்.
தயிர் மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
அதன் பின் கத்தரிக்காய் சேர்த்து ஒரு டம்ளர் நீருடன் வேக வைக்கவும்.
கத்தரிக்காய் வெந்ததும் கொத்தமல்லி மற்றும் மிளகுதூள் தூவி ஒரு முறை கிளறி பின்னர் இறக்கவும்.
பேங்கன் கபர்த்தா தயார். சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். சாம்பார், ரசம் போன்றவற்றுடன் அருமையாக ஜோடி சேரும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆமினாக்கா சலாம். பேரே வித்தியாசமா இருக்கே. பேங்கன் கபர்த்தா. பார்க்கவும் சூப்பரா இருக்கு.செய்யவும் தூண்டுது எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க.சூப்பர் குறீப்பு வாழ்த்துக்கள். . மேலும் பல குறீப்புகள் தர வாழ்த்துக்கள்.

bringal என்ன பண்ணலாம்னு நினைத்து கொண்டு இருந்தேன் நல்ல குறிப்பு பெயர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கு சுவையும் வித்தியாசமாக இருக்கும் என்று நினைக்கிறன் செய்து பார்க்கிறேன் புதுசு புதுசா நெறைய டிஷ் பண்ணி காட்றேங்க ரொம்ப நன்றி

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

bringal என்ன பண்ணலாம்னு நினைத்து கொண்டு இருந்தேன் நல்ல குறிப்பு பெயர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கு சுவையும் வித்தியாசமாக இருக்கும் என்று நினைக்கிறன் செய்து பார்க்கிறேன் புதுசு புதுசா நெறைய டிஷ் பண்ணி காட்றேங்க ரொம்ப நன்றி