பொட்டுக்கடலை முறுக்கு

தேதி: December 27, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

 

அரிசி மாவு - ஒரு படி
பொட்டுக்கடலை மாவு - கால் படி
வெள்ளை எள்ளு - 2 மேசைக்கரண்டி
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
டால்டா - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு கப்


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு படி அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
மாவை ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு கொதிக்க வைத்த தண்ணீரை அதில் ஊற்றி கரண்டியின் பின்புறத்தை வைத்து கிளறி விடவும்.
நன்கு ஒன்றாக கலந்ததும் அதனுடன் டால்டா, பொட்டுக்கடலை மாவு, எள்ளு, உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
எல்லாவற்றையும் சேர்த்ததும் மாவை நன்கு மிருதுவாகும் வரை பிசையவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய விடவும். முறுக்கு உரலில் மூன்று கண் உள்ள அச்சை போட்டு உரல் கொள்ளும் அளவு மாவை வைத்து மூடி ஒரு பேப்பர் அல்லது ப்ளாஸ்டிக் கவரில் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
எண்ணெய் காய்ந்ததும் அதில் முறுக்கை போட்டு திருப்பி போட்டு ஒரு நிமிடம் கழித்து எண்ணெயில் வரும் நுரை அடங்கியதும் எடுத்து விடவும்.
சுவையான பொட்டுக்கடலை முறுக்கு தயார்.
இந்த முறுக்கு செய்முறையை திருமதி. மங்கம்மா அவர்கள் நமக்காக இங்கே விளக்கியுள்ளார். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த இவரின் அனைத்து தயாரிப்புகளும் மிகவும் சுவையாய் இருக்கும். இதற்கு முன்பு வெளியான இவரது பல்வேறு குறிப்புகள் அறுசுவை நேயர்களின் மனமார்ந்த பாராட்டைப் பெற்றுள்ளது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப சுலபமான செய்முறையா இருக்கு... நல்லா இருக்குங்க. நானும் ட்ரை பண்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

super. new year ku seyya poren

"எல்லாம் நன்மைக்கே"

முறுக்கு செய்முறை ரொம்ப எளிமையா, விரைவில் செய்துவிடக்கூடியதாய், நல்லா இருக்கு!

அன்புடன்
சுஸ்ரீ