எள் சாதம் சமையல் குறிப்பு - படங்களுடன் - 21431 | அறுசுவை


எள் சாதம்

வழங்கியவர் : amina mohammed
தேதி : புதன், 28/12/2011 - 17:10
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
4.25
4 votes
Your rating: None

 

 • எள் - 2 தேக்கரண்டி
 • தேங்காய் - கால் மூடி
 • கடலைபருப்பு - ஒரு தேக்கரண்டி
 • உளுந்து - ஒரு தேக்கரண்டி
 • சீரகம் - கால் தேக்கரண்டி
 • சோம்பு - கால் தேக்கரண்டி
 • பெருங்காயதூள் - கால் தேக்கரண்டி
 • மோர்மிளகாய் - 2
 • வெங்காயம் - 2
 • பூண்டு - 4 பல்
 • கறிவேப்பிலை - ஒரு கொத்து
 • பச்சைமிளகாய் - 2
 • கடுகு, உளுந்து - ஒரு தேக்கரண்டி
 • சாதம் - ஒரு கப்
 • கொத்தமல்லி - 2 கொத்து
 • உப்பு - தேவைக்கு
 • எண்ணெய் - தாளிக்க

 

ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு எள், உளுந்து, கடலைபருப்பு, தேங்காய், மோர்மிளகாய், சீரகம், சோம்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை வறுக்கவும்.

பின் ஆற வைத்து பொடியாக அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளிக்கவும். பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அதில் பொடியை சேர்த்து ஒரு சேர கிளறவும்.

பின்னர் உதிரியாய் வடித்த சாதத்தையும் கொத்தமல்லியையும் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி பரிமாறவும்.

சுவையான எள் சாதம் தயார். சிப்ஸ், கீரை மற்றும் கிரேவி வகைகளுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.அமீனா அக்கா

அடுத்தடுத்து ஒரே குறிப்பு மழையா இருக்கு வாழ்த்துக்கள் ரொம்ப நல்லா இருக்கு உங்க எள் சாதம் by Elaya.G

எள் சாதம்

எள் சாதம் அருமையா இருக்கு ஆமினா! கண்டிப்பா ட்ரை பண்ணி பார்க்கிறேன். தொடர்ந்து ஒரே குறிப்புகளா கொடுத்து அசத்தறீங்க! :) அசத்தல் தொடரட்டும்... வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ