ஹென்னா டிசைன் - 16

தேதி: December 30, 2011

5
Average: 4.4 (19 votes)

 

ஹென்னா கோன் - 1

 

மணிகட்டில் இரண்டு பூக்களையும் இலையையும் வரைந்து கொள்ளவும்.
அதன் கீழே அதே போல் பூக்கள் சற்று இடைவெளி விட்டு வரையவும்.
பூக்கள் நடுவே வருவது போல் கோடுகள் வரைந்து கொள்ளவும்.
கோடுகளின் நடுவே உங்கள் விருப்பம் போல் நிரப்பவும்.
இப்போது மணிகட்டின் மேலே மாங்காய் வடிவம் வரைந்து அதையும் நிரப்பவும்.
மாங்காய் வடிவை ஒட்டி வருவது போல் படத்தில் உள்ள டிசைனை வரைந்து அதையும் நிரப்பவும்.
விரல்களிலும் கீழே வரைந்த டிசைனையே சிறிதாக வரைந்து முடிக்கவும்.
சுலபமாக போடக்கூடிய டிசைன் இது. எத்தனை பெரிய டிசைனாக வேண்டுமானாலும் வரையலாம். சிறிதாக போட விரும்பினால் மணிகட்டின் கீழே பூ வரையாமல் முடிக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப அருமையான டிசைன் விரல் டிசைன் ரொம்ப நல்லா இருக்கு இன்னும் நிறைய டிசைன் கொடுங்க வாழ்த்துக்கள் by Elaya.G

இந்த டிசைன் புத்தாண்டு ஸ்பெஷலா ரொம்ப ரொம்ப அருமை. மணிக்கட்டுக்கு மேல வரைந்த டிசைன் நல்ல க்ராண்ட்டாவும், ஈஸியாவும் இருக்கு வாழ்த்துக்கள்.

வனி ரொம்ப அழகா இருக்கு... கலக்குறிங்க...

அன்புடன்,
லலிதா

டிசைன் சுப்பர்ப் வனி.

‍- இமா க்றிஸ்

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

முதல் பதிவை தட்டிய தங்கை இளையாவுக்கு ரொம்ப நன்றி :) உங்களுக்காகவாது நான் நிறைய டிசைன் கொடுக்க முயற்சிக்கிறேன்.

வினோ... ரொம்ப நன்றி. நான் போட்டு அது என் கைகளில் இருந்து காணாமலே போயிருச்சு... இப்ப தான் குறிப்பு வந்திருக்கு, அதனால் அறுசுவையில் இது நியூ இயர் ஸ்பெஷல். :) நியூ இயர் சமயம் குறிப்பு வந்ததே பெரிய மகிழ்ச்சியா இருக்கு.

லலிதா... மிக்க நன்றி :)

இமா... மிக்க நன்றி :) ஆண்டி நலமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிக்கா...... உங்க கையும் ரொம்ப அழகு....... டிசைனும் அழகோ அழகு..... அதை விட போட்டோஸ் தான் கொள்ளை அழகு... இந்த டிசைன் போடுறதுக்கு ரொம்ப ஈஸி தான்.... ஆனா உங்க கை அளவுக்கு அழகா வருமானு தான் தெரியல.... கருப்பு சிகப்பு காம்பினேஷன் போடுற மாதிரி டிசைன் அனுப்புங்களேன்.... என் தங்கச்சிகளுக்கு அது போடணும்னு ஆசை.

மிக்க நன்றி :) என் கையை விட உங்க கையில் அழகா இருக்கும், என்னை ஓட்ட கூடாது இப்படிலாம். சரியா? கருப்பு சிவப்புக்குன்னு தனியா டிசைன் தேவையே இல்லை ப்ரியா... எதில் வேணும்னாலும் அப்படி போடலாம். இதே டிசைனில் பூக்கள் சிவப்பு, கோடுகளில் உள்ள டிசைன் கருப்பு என போடலாம். மேலே மாங்காய் வடிவம் ஒரு நிறம், அதன் மேல் வரும் விசிரி போன்ற டிசைன் ஒரு நிரம்னு போடலாம். ட்ரை பண்ணி பாருங்க... அழகா வரும். உங்க தங்கைகளுக்கு போட்டு என்க்கு ஒரு படம் அனுப்பிடுங்க, ஏன்னா எனக்கும் என் தங்கைக்கு போட ஆசை... ஆனா அவ ஊரில் இருக்காளே... அங்கையே இருந்தாலும் அவ ஹஸ்பண்டுக்கு பிடிக்காதுன்னு போட்டுக்க மாட்டா. :( அவ கை ரொம்ப சூப்பரா இருக்கும் மருதாணி போட.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கொள்ளை அழகு... உங்க கையும் சேர்த்து தான்....

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

wow unga kai romba alaga iruku .................. SUPERB
mehandi designum romba nalla iruku

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி.... ரொம்பவே அசத்தலா இருக்குப்பா இந்த டிசைன்.....
அதுவும் உங்க கையில் இந்த டிசைன் கொள்ளை அழகு போங்க.... :)
ரொம்ப ஈஸியா புரியும் படியா சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள்......

மிக்க நன்றி. அவசியம் போட்டு பாருங்க... அப்போ இன்னும் சந்தோசப்படுவேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல அருமையான டிசைன்!!!

Eat healthy

மிக்க நன்றி ரசியா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

very nice

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா