வண்டிக்காரன் குழம்பு

தேதி: December 30, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

நெத்திலி கருவாடு - 150 கிராம்
சின்ன வெங்காயம் - 15 எண்ணிக்கை
பச்சை மிளகாய் - 2
வரமிளகாய் - 5
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
கத்தரிக்காய் - 2
கடுகு - கால் தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு


 

நெத்திலி கருவாடை சுத்தப்படுத்தி கழுவி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், கத்தரிக்காய், மிளகாயை நறுக்கி கொள்ளவும்.
புளியை கரைத்து அதில் மஞ்சள்தூள் போட்டு வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெந்தயம் கறிவேப்பிலை, வரமிளகாய், பச்சைமிளகாய் போட்டு தாளித்து அதனுடன் வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின்னர் அதில் நறுக்கின கத்தரிக்காய் போட்டு வதக்கவும்.
பின் கரைத்து வைத்த புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். கத்தரிக்காய் வெந்ததும் நெத்திலி கருவாடை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். ( கருவாட்டில் உப்பு இருக்கும் தேவைப்பட்டால் சேர்க்கவும்.)
சுவையான வண்டிக்காரன் குழம்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பெயரும் குறிப்பும் வித்யாசமா இருக்கே நல்லா இருக்கு வாழ்த்துக்கள் by Elaya.G

பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு.. ஏன் இதற்கு வண்டிக்காரன் குழம்புன்னு பெயர்? ;)

ஆஹா எனக்கு இந்தமாதிரி கிராமத்து சமையல்னா ரொம்ப விருப்பம் அள்ளி வைத்து சாப்பிடலாம்.நானும் அடிக்கடி கிராமத்து சமையல்தான் பண்ணுவேன்.நன்றாக செய்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

என்னமோ ஒன்னு இந்த குறிப்பை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்குது..அது பெயரா அல்லது நெத்திலிக் கருவாடா என்று தெரியல..அருமையாக இருக்கும்னு நினைக்கிறேன்