ஆலோசனை தேவை

எனக்கு டெலிவரி ஆகி 6 மாதங்கள் ஆகிறது.அது சிசேரியன்.இப்பொ உடனே அடுத்த குழந்தைக்கு முயர்ச்சி செய்யலாமா?

கூடாதுங்க. கர்ப்பபை ரொம்ப வீக்கா இருக்க கூடும். அது குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லதில்லைன்னு சொல்லி கேட்டிருக்கேன். போதுமான சத்தும் கிடைக்காது சில நேரம். குறைந்ததும் 1 வருடம் கேப் இருக்கட்டுமே. உங்க நல்லதுக்கு சொல்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் குறைந்தது 2 வருடம் இடைவெளி தேவை. இப்போ தான் உங்களுக்கே உடம்பு பெட்டெர் ஆ இருக்கும். உடனே இன்னொரு டெலிவரி உடம்பு தாங்காது. 2 years கழிச்சு ட்ரை பண்ணுங்க. . 2 குழந்தையும் நல்ல இருக்கும்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

Thanks for ur adveise.இதை என் கணவரிடம் சொல்கிறேன்

keep smile for goodluck.

நாச்சியால் எனக்கும் சிசெரியன் தான்.கண்டிப்பாக 2 வருடம் கர்ப்பம் தரிக்க கூடாதுன்னு,என் டாக்டர் சொன்னர்கல்,காரனம் கர்ப்பபையில் உள்ளே போட்ட தையல் ,செட் ஆக 2 வருடம் தேவை...உங்கள் டாக்டரை பார்த்து ஆலோசனை கேட்கவும் ....

*பர்வீன்*

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

பாருங்க தோழிகள் 2 வருடம் என்கிறார்கள். இதுக்குலாம் தோழிகள் சொல்வது போல் டாக்டர் ஆலோசனை பெருவது பெட்டர்ங்க. ஆண்கள் சுலபமா சொல்லிடுவாங்க, கஷ்டம் நமக்கும், பிள்ளைகளுக்கும் தான். தோழிகள் சொல்வது போல் 2 வருடம் தள்ளி போடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் கணவர் வயது கூட.ஆதனால் அவசரபடுகிறார்.பக்குவமாக சொல்கிறென்.நன்றீ.Friends.

keep smile for goodluck.

மேலும் சில பதிவுகள்