தக்காளி ரசம் சமையல் குறிப்பு - படங்களுடன் - 21467 | அறுசுவை


தக்காளி ரசம்

வழங்கியவர் : amina mohammed
தேதி : செவ்வாய், 03/01/2012 - 15:11
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
4.42857
7 votes
Your rating: None

 

  • தக்காளி - 5
  • தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • கறிவேப்பிலை - 4 இலைகள்
  • முழுபூண்டு - ஒன்று
  • பச்சை மிளகாய் - 4
  • வெங்காயம் - ஒன்று
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
  • மிளகுதூள் - ஒரு தேக்கரண்டி
  • பெருங்காய தூள் - சிறிதளவு

 

தக்காளியில் நீர் ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

கொத்தமல்லி, கறிவேப்பிலை, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒரு சுற்று மட்டும் மிக்ஸியில் அடித்து தனியாக எடுத்து வைக்கவும்

அதன் பின் தோலை நீக்கி மிக்ஸியில் அரைத்து விழுதை தனியாக வைக்கவும்

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பொன்னிறமானதும் ஒன்றிரண்டாய் அரைத்த பச்சைமசாலாவை சேர்த்து வாசம் போக வதக்கவும்.

அதன் பின்னர் தூள் வகைகளை சேர்த்து வதக்கவும்.

வாசம் போனதும் தக்காளி விழுதையும் தேவைக்கு நீர் மற்றும் உப்பு சேர்க்கவும்.

நுரை பொங்கி வரும் பக்குவத்தில் தேங்காய் துருவலை சேர்த்து கிளறவும்.

பின் மீண்டும் நுரை பொங்கி வரும் பக்குவத்தில் கீழே இறக்கவும். புளி சேர்க்காத தக்காளி ரசம் தயார்.

அடிக்கடி உணவில் புளி சேர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு இடையிடையே இது போல் ரசம் செய்து கொடுக்கலாம். எவ்வித மாற்றமும் இன்றி எப்போதும் செய்யும் புளி சேர்த்த ரசத்தின் சுவையிலேயே இருக்கும்.




இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..



ஆமினா

சூப்பர் ரசம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமினா அக்கா

ரொம்ப நல்லா இருக்கு உங்க ரசம் வாழ்த்துக்கள் by Elaya.G

ஆமினா அக்கா

ரொம்ப நல்லா இருக்கு உங்க ரசம் வாழ்த்துக்கள் by Elaya.G

ஆமினா அக்கா

நல்ல குறிப்பு நன்றி

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்