கருணை மசியல்

தேதி: January 4, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 2 (1 vote)

 

கருணை கிழங்கு-கால் கிலோ
புளிகரைசல்- ஒரு கப்
சாம்பார் பொடி-2 ஸ்பூன்
உப்பு-சிறிதளவு

தாளிக்க
கடுகு
உளுந்து
சீரகம்
பூடு
வெங்காயம்-1
கறிவேப்பிலை-ஒரு கொத்து
வரமிளகாய்-2
எண்ணெய்- ஒரு மேசைகரண்டி


 

கருணைகிழங்கை உப்பு சேர்த்து அவித்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.

அதில் புளிதண்ணீர், சாம்பார் பொடி சேர்த்து கலக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் கிழங்கு கலவையை சேர்த்து சுருளும் வரை கிளறவும்.


பழைய கிழங்கு உபயோகபடுத்தினால் நாக்கு அரிக்காது. கிழங்கை வாங்கி 1வாரத்திற்கு மேல் வைத்திருந்து பிறகு பயன்படுத்தவும். இது சாம்பார், ரசம் போன்ற குழம்பு வகைகளுக்கு ஏற்றது

மேலும் சில குறிப்புகள்