வெண்டைக்காய் பருப்புகறி சமையல் குறிப்பு - 21479 | அறுசுவை


வெண்டைக்காய் பருப்புகறி

food image
வழங்கியவர் : ஆமினா
தேதி : புதன், 04/01/2012 - 13:27
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :

 

 • வெண்டைக்காய்- 100கிராம்
 • பாசிபருப்பு-50கிராம்
 • தக்காளி-2
 • மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
 • சீரகத்தூள் -1/2 ஸ்பூன்
 • உப்பு-தேவைக்கு
 • பூடு-5 பல்
 • தாளிக்க:-
 • வரமிளகாய்-3
 • கறிவேப்பிலை- ஒரு கொத்து
 • வெங்காயம்-2
 • எண்ணெய்-ஒரு குழிகரண்டி

 

 • வெண்டைக்காயை ஒரு இன்ச் அளவுக்கு நறுக்கி வைக்கவும்.
 • கடாயில் எண்ணெய் ஒரு ஸ்பூன் விட்டு வெண்டைக்காயை நிறம் லேசாக மாறும் வரை வதக்கவும்.
 • பாசிபருப்பை வெறும் சட்டியில் வறுத்து பின்னர் தக்காளி, மஞ்சள் தூள், சீரகத்தூள், நசுக்கிய பூடு சேர்த்து முக்கால் பாகம் அளவுக்கு வேக வைக்கவும்.
 • கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்
 • வெங்காயம் நிறம் மாறியதும் வெண்டைக்காய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
 • வெண்டைக்காய் வெந்ததும் பருப்பு கலவையை சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.