வெங்காய கறி வறுவல்

தேதி: January 4, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

மட்டன் - அரைக் கிலோ
இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய்தூள் - கால் தேக்கரண்டி
சாம்பார் வெங்காயம் - 100 கிராம்
பட்டை வத்தல் - 5 எண்ணிக்கை
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு, சீரகத்தூள் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - அரை குழிக்கரண்டி
உப்பு - தேவைக்கு


 

தேவையான பொருட்களை தயாராக வைக்கவும். கறியை கழுவி வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டு, சீரகத்தை போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பட்டை, ஏலம் கிராம்பு தூள் சேர்த்து வதக்கவும்.
அதில் கறி, மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக விடவும்.
அடுப்பில் கடாயை போட்டு சிறிது எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, வத்தல், வெங்காயம் போட்டு வதக்கவும்.
அதில் வேக வைத்த கறியை போட்டு சிறு தீயில் 5 நிமிடம் வைக்கவும். தண்ணீர் வற்றி எண்ணெய் மேலே வரவும் மிளகு, சீரகத்தூள் போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கி விடவும்.
சுவையான வெங்காய கறி வறுவல் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

என்ன சொல்ல!! நாவூருது.. :)

எங்க உங்களை பார்க்கவே முடியல... நல்ல குறிப்பு, பார்க்கவே அருமையா இருக்கு. வரும் வெள்ளி ஒரு பார்ட்டி. இது மெனுவில் நிச்சயம் இருக்கும் :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Good dish

பாத்திமா ஆஹா அருமை பார்க்கவே சுவைக்க தூண்டுது கண்டிப்பா செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.