ப்ராக்கலி (Broccoli) மசாலா

தேதி: January 4, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (11 votes)

 

ப்ராக்கலி - 2 கப் (சிறிய பூக்களாக நறுக்கியது)
தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/8 தேக்கரண்டி
பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
மசாலா தயாரிக்க:
கடலை மாவு (பேசன்) - அரை கப்
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
ஆம்சூர் (மாவற்றல்) பொடி - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
தனியாதூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - கால் தேக்கரண்டி (அ) சுவைக்கேற்ப
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

முதலில் சிறிய பூக்களாக நறுக்கிய ப்ராக்கலியை தண்ணீரில் அலசி நன்கு சுத்தமா தண்ணீரை வடித்து விடவும்.
ஒரு வாணலியில், ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடானதும் சீரகம், பெருங்காயத்தூள் போட்டு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டு, பச்சைமிளகாயை போட்டு சில நொடிகள் வதக்கவும்.
அடுத்து ப்ராக்கலியை போட்டு, தாளித்த‌ எண்ணெய் எல்லா பூக்களிலும் படுமாறு பிரட்டிவிட்டு, ஒரு மூடிபோட்டு 2 அல்லது 3 நிமிடங்கள் வேகவிடவும். அடுப்பை குறைந்த அனலில் வைக்கவும்.
3 நிமிடங்களுக்குப் பிறகு மூடியை திறந்து, சிறிது உப்பு தூவி கலந்துவிட்டு மேலும் ஒரு 2 நிமிடங்களுக்கு மூடி வேகவிடவும்.
வேறு ஒரு பாத்திரத்தில், மசாலா தயாரிக்க கொடுத்துள்ள பொடிகளை எல்லாம் ஒன்றாகப்போட்டு, உப்பும் சேர்த்து (ஏற்கனவே ப்ராக்கலி துண்டுகளில் உப்பு சேர்த்து இருப்பதால், குறைத்து வேண்டிய அளவு உப்பு சேர்க்கவும்) கலந்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு மேசைக்கரண்டி எண்ணெயை இதில் விட்டு, மாவுக்கலவையை கையால் கலந்துவிட்டு, எண்ணெய் நன்கு மாவுக்கலவையில் சேருமாறு கொஞ்சம் பிசறி விடவும்.
அடுத்து, மூடியை திறந்து கலந்து வைத்திருக்கும் மசாலாக் கலவையை எல்லா ப்ராக்கலி துண்டுகளின் மீதும் படுமாறு பரவலாக தூவி, மறுபடியும் வாணலியை மூடிவிடவும். (இப்போது கலந்து விடக்கூடாது.)
இப்படியே ஒரு 5 நிமிடம் வெந்ததும், மூடியைத் திறந்து லேசாக தண்ணீர் தெளித்து, மாவுக்கலவை எல்லா பூக்களின் மீதும் படுமாறு பிரட்டி விடவும். மீண்டும் மூடியிட்டு, 3 நிமிடங்கள் வேகவிடவும்.
எல்லாம் சேர்ந்து வெந்து காய் முறுவலாக தெரியும் பக்குவத்தில், விருப்பப்பட்டால், சிறிது எலுமிச்சை சாற்றை பிழிந்து விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
இப்போது, சுவையான பேசன் ப்ராக்கலி மசாலா தயார்! இதை வெறும் பருப்பு/ரசம் சாதத்துடன் சாப்பிடலாம். சப்பாத்திக்கும் வித்தியாசமானதொரு நல்ல சைட் டிஷ்ஷாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

-

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அப்ப‌டியா?!! அடடா..., நான் இதை இப்பதான் இந்த வின்டர் ப்ரேக் பார்ட்டிகள் ஒன்றில் சுவைத்து நன்றாக இருந்ததால், அதை செய்த தோழியிடன் ரெசிப்பி கேட்டு வாங்கி, எங்க வீட்டில் செய்து பார்த்தேன். சரி, ப்ராக்கலி வைத்து புசுசா, வித்தியாசமா ட்ரை பண்ணி இருப்பதா இருக்கேன்னு தோழிகளுடன் பகிர்ந்து கொண்டேன்! :( என் ப்ரண்ட்கிட்ட கேட்டா தெரியும், அவங்க எங்க இருந்து தெரிஞ்சிக்கிட்டாங்கன்னு! :) தகவலுக்கு மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

முன்பு சந்தேகம் கேட்டுலாம் தமிழில் பதிவு போட்டீங்க தானே... இப்போலாம் ஆங்கிலத்தில் மட்டுமே பதிவு போடுறீங்க. :)

சரி அதெல்லாம் போகட்டும்... எந்த தளத்தில் இருந்த குறிப்பையும் யாரும் இங்கே அங்கே உள்ள படத்தோடு அப்படியே காபி செய்து போடுவதில்லை. அதை அவர்கள் செய்து பார்த்தே போடுகிறார்கள். சமையல் என்பது அளவில்லாமல் எங்கிருந்தாவது நாம் கற்றுகொள்வது தான். எல்லாரும் தானே புதுசு புதுசா கண்டு பிடிச்சு தான் போடனும்னா இன்னைக்கு சாம்பார், குழம்பு, பொரியல் எல்லாம் ஒரே மாதிரி சமைப்பது எப்படி??? எங்கையுமே இல்லாத சமையல் தான் வரனும்னு அறுசுவையில் ஏதும் சட்டம் இல்லையே. எங்க இருந்து எந்த குறிப்பை கொடுத்தாலும் அதை நீங்க ஒரு முறை செய்து பார்த்து கொடுங்கன்னு தானே சொல்லிருக்கு. அப்பறம் என்ன??? சுஸ்ரீ செய்து தானே காட்டி இருக்காங்க. கூடவே இந்த குறிப்பை சுஸ்ரீ அந்த தளத்தில் கொடுக்கலயே... அப்படின்னா அறுசுவை விதிகள் மீறல.

அதென்னங்க.. //same xerox copy// - உங்களுக்கு எதையும் நல்ல விதமா சொல்ல தெரியாதா, இல்ல சொல்ல விரும்பலயா?? உங்களூக்கு அறுசுவையில் ஏதும் பிடிக்கலன்னா விடுங்க... அங்க அங்க எல்லாரையும் ஹர்ட் பண்ணும் விதமா பதிவு போடாதீங்க ப்ளீஸ். நான் இதுவரை அறுசுவையில் யாரையும் இது போல் பேசியதில்லை... அது அறுசுவை மக்களுக்கும் தெரியும், அண்ணாக்கும் தெரியும்... உங்களை பேச காரணம் உங்களூக்கே புரிஞ்சிருக்கும்.

சுஸ்ரீ... உங்க குறிப்பில் இப்படி ஒரு பதிவை போடுறதுக்காக முதல்ல என்னை மன்னிச்சுடுங்க. அண்ணா நீங்களும் என்னை மன்னிச்சுடுங்க. தளத்தில் இருக்க எல்லாரும் கோச்சுகிட்டு போக வேண்டியது தான் இப்படியே பதிவு வந்தா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்காக தக்க சமயத்தில் வந்து குரல் கொடுத்து பதிவிட்டதற்கு மிக்க நன்றி வனி! என் குறிப்பில் பதிவிட்டதற்கு மன்னிக்கறதா?! உங்க நியாய‌மான எண்ணங்களை, மிகத்தெளிவாக, அறுசுவை விதிமுறைகளையும் எடுத்துக்காட்டி, முன் வைத்ததற்க்காக என்னுடைய அன்பு கலந்த நன்றிகள் வனி! காலையிலேயே முதல் கமண்டை பார்த்ததும் மனதுக்குள் கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது. ஆனால், இப்ப இல்லை! அதற்கு காரணமான உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள் வனி!

அன்புடன்
சுஸ்ரீ

நான் இதுவரை ப்ராக்கலி வாங்கியதே இல்லை. (எப்படி சமைக்கனும்னு தெரியாது). இன்று உங்க Receipe பார்த்ததும் வாங்கி செய்யனும்னு ஆசையே வந்து விட்டது. கட்டயாமா செய்து பார்த்து என் கருத்துகளை சொல்றேன்.

அன்புடன்
ரேகா சுரேஷ்

மிகவும் அறுமையான குறிப்பு. இன்றைக்கு டின்னர் டிஷ் உங்க ரெசிபி தான்.

-

//Who are you for me to tell like that... Susri itself replied in decent way.. Who are you? Mind your work... Did I tell anything about you.. Or did I comment on your recipe..// - இந்த கேள்விய அன்று சீதா பிரெச்சனையில் நீங்க நுழைந்த போது யோசிச்சிருக்கனும், இல்ல நாங்க கேட்டிருக்கனும். இப்போ கேட்கும் உரிமை உங்களூக்கு இல்லை.

உங்களுக்கும் அடுத்தவரை காயப்படுத்தும் உரிமை இல்லை. சுஸ்ரீ உங்க பதிவை பார்த்து வருத்தப்படலன்னு சொல்லியிருந்தா உங்க பதிவு சரி... ஆனா அப்படி சொல்லல. டீசண்ட்டா பேச எனக்கு தெரியும். எனக்கு தெரியுமா தெரியாதான்னும் மற்றவருக்கு தெரியும். மற்றவருக்கு நான் எப்படி பதிவு போடனும்னும் எனக்கு தெரியும். நீங்க போட்ட கடைசி பதிவாவே இருக்கட்டும். வருத்தமில்லை. Goodbye.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுஸ்ரீ, பார்க்க ரொம்ப அழகா இருக்கு. எனக்கு அதோட ஸ்மெல் தான் கொஞ்சம் பிடிக்காது. இப்படி சமைத்தால் அதன் வாசம் வராமல் இருக்கா? என் மகனுக்கு ரொம்ப பிடிக்கும் ப்ரோக்கலி ஆனா நான் தான் சமைக்கிறதே இல்ல. உங்க குறிப்பு நல்லா இருக்கு முயற்சி செய்றேன்.

குறிப்பு உண்மையில் ரொம்ப அருமை... இதை தான் வந்ததும் சொல்ல நினைச்சேன், எங்கோ போயிருச்சு. பரவாயில்லை... இங்கெ சில கடைகளில் தான் எப்பவாது கிடைக்கும். கிடைக்கும்போது அவசியம் ட்ரை பண்ணிடறேன். பார்ட்டிக்கு செய்து வைக்க நல்லா இருக்கும் கலர்ஃபுல்லா. குறிப்புக்கு மிக்க நன்றி சுஸ்ரீ. :) (என் பதிவால் உங்க மனசுக்கு வருத்தமில்லைன்னு சொன்னதுக்கும் சேர்த்து தான்.)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுஸ்ரீ ப்ராக்கலி மசாலா, சூப்பரா செய்து இருக்கிறீர்கள். தெளிவாக புரியும் படி இருக்கிறது.விருப்ப பட்டியலில் சேர்த்து விட்டேன்.வாழ்த்துக்கள்.

ஹாய் சுஸ்ரீ உங்க ப்ராக்கலி மசாலா.சூப்பர். என் ஹுஸ் வாங்கிட்டு வந்து எதாவது செஞ்சு தான்னு சொன்னா ஒன்னும் புரியாது. இதை வச்சு என்ன பண்ணுற்துனு ஒரே குழப்பம். நேத்து உங்க மசலா சப்பாத்திக்கு செஞ்சேன். ரியலி சூப்பர். விருப்ப பட்டியலில் சேர்த்துட்டேன். இனிமேல் இந்த டிஷ் தான் சப்பாத்திக்கு. தாங்க்ஸ், வாழ்த்துக்கள். அருமையான குறீப்பு கொடுத்ததற்கு.

சுஸ்ரீ ப்ராக்கலி மசாலா ரொம்ப அருமையா இருக்குங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் ப்ராக்கலி கண்டிப்பா செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரேகா சுரேஷ்,

வருகைக்கும், பதிவிற்கும் நன்றி!. இந்த ரெசிப்பி பார்த்ததும் உங்களுக்கு ப்ராக்கலி சமைக்க ஆசை வந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்! கட்டாயம் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க, அப்புறம் அடிக்கடி செய்வீங்க! :) செய்து பார்த்து எப்படி இருந்ததுன்னும் மறக்காம வந்து சொல்லுங்க. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

நிதி_நிமல், உங்க‌ பெய‌ர் அழ‌கா இருக்கு!
வ‌ருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க‌ ந‌ன்றி! அப்புற‌ம் டின்ன‌ருக்கு செய்தீங்க‌ளா?! பிடித்து இருந்த‌‌தா?!

அன்புடன்
சுஸ்ரீ

உமா,
எப்ப‌டி இருக்கிங்க‌? குட்டி என்ன‌ சொல்றார்?! உங்க பையனுக்கு ப்ராக்கலி பிடிக்குமா? ரொம்ப நல்லது உமா, கட்டாயம் எப்படி பிடிக்குமோ அந்த‌ மாதிரி செய்து கொடுங்க. இதில் நிறைய சத்துக்கள் இருக்கு,‍ உங்களுக்கே தெரியும்! :)

எங்க‌ வீட்டில் ப்ராக்கலி என்றால், எல்லோருமே 'எஸ்'தான்! :) என்ன?, என் ப‌ச‌ங்க‌ளுக்கு, அப்ப‌டியே ஸ்டீம் குக் ப‌ண்ணி, உப்பு, மிள‌குத்தூள் தூவி கொடுக்க‌னும். (இந்த ஊரு ஸ்டைலில்!). இந்த‌‌ மாதிரி, ந‌ம்ம‌ ஊரு 'ட‌ச்'சில் செய்வ‌து எங்களுக்காக! :) இந்த‌‌ மெத்த‌ட்டில் செய்த‌போது ப‌ச‌ங்களும் இர‌ண்டு பீஸ் எடுத்துகிட்டாங்க! (என் பையனுக்கு இதுவே காரம்! :)) நீங்க‌ ட்ரை ப‌ண்ணி பாருங்க‌ உமா, கார‌ம் ம‌ட்டும் கொஞ்ச‌ம் வேணா க‌ம்மி ப‌ண்ணிக்கோங்க, உங்க பையனோட காரம் அளவுக்கு தகுந்தமாதிரி. செய்து பார்த்து, பிடிச்சுதான்னு சொல்லுங்க‌. பாராட்டிற்கு ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

வ‌னி,
வாங்க, ஆமாம் வனி, ஒரு ம‌ழை அடித்து ஓய்ந்த‌‌ மாதிரி இருக்கு என‌க்கு! :) என்ன‌வோ புதுசா இருக்கே, கொடுக்கலாம்னு செய்ய‌ப்போய், என்ன‌டா இது வ‌ம்பென்று திகைத்துவிட்டேன்! மீண்டும் ஒருமுறை நன்றி! :)

குறிப்பு பிடிச்சிருக்கா? ரொம்ப சந்தோஷம் வனி! க‌ண்டிப்பா உங்க‌ளுக்கு அங்கே கிடைக்கும்போது செய்துபாருங்க, டேஸ்ட்டும் பிடிக்கும்! :)
அப்புற‌ம் உங்க‌ கோவில் புளியோத‌ரை செய்து பார்த்தேன், சூப்பர்! பின்னூட்டம் அங்கேயும் கொடுக்க‌றேன். ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ஆனந்தி,
உங்க வாழ்த்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி! விருப்பட்டியலில் சேர்த்திட்டிங்களா?! முடியும்போது செய்து பாருங்க. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ந‌சீம்,
உங்க வாழ்த்துக்களுக்கும், பாராட்டிற்கும் மிக்க‌ ந‌ன்றி! நீங்க உண்மையிலேயே ரொம்ப ஃபாஸ்ட்ங்க‌! அத‌ற்குள் செய்து பார்த்தே சொல்லிட்டிங்க!! :) நீங்க 'ரியலி சூப்பர்' என்றதும், எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ந‌சீம். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

சுவ‌ர்ணா,
உங்க வாழ்த்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி! உங்க‌ளுக்கும் ப்ராக்க‌லி பிடிக்குமா? அப்ப‌, க‌ண்டிப்பா முடியும்போது செய்துபாருங்க‌. ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ, நானும் நேத்திலருந்து உங்க குறிப்புக்கு பதிவு போடனும்னு பார்க்கறேன். இப்ப டைம் கிடைச்சது. சாதாரணமாவே காலிபிளவர்,பிரக்கோலி ஐயிட்டம்னாலே எங்க வீட்ல எல்லாருக்கும் ப்ரியம். உங்களோட குறிப்பு அந்த பிரியத்தை இன்னும் அதிகமாக்கிருச்சு. நல்லா ப்ரெசெண்ட் பண்ணியிருக்கீங்க. பார்க்கும் போதே சாப்ட்ட பீலிங் வந்தாச்சு. இனி வீட்ல ஒருமுறை செய்து பார்த்துடறேன். வாழ்த்துக்கள் சுஸ்ரீ :) தொடர்ந்து குறிப்புகளை தந்துட்டே இருங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஸ்ரீ....சூப்பர் ரெசிபி....செய்து பார்க்கிறேன்....பார்த்தாலே சாப்பிடணும் போலருக்கு!!வாழ்த்துக்கள் சுஸ்ரீ

அட, இப்பதான் நான் உங்களுக்கு அங்கே ஒரு பதிவு போட்டுட்டு வரேன், நீங்க இங்கே இருக்கிங்களா கல்பனா?! :)
குறிப்பு, ப்ரண்ட்டேஷன் எல்லாம் பிடிச்சி இருக்கா? ரொம்ப சந்தோஷம்! பார்க்கும்போதே சாப்பிட்ட ஃபீலிங் வந்தாச்சுன்னு சொல்லி என்னை ரொம்பவே குஷிப்படுத்திட்டிங்க, தேங்க்யூ! கட்டாயம் செய்து பாருங்க, அப்புறம் அடிக்கடி செய்வீங்க. மீண்டும் நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ராதாம்மா,
ரொம்ப சந்தோஷம் உங்க வாழ்த்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும்!. கண்டிப்பா முடியும்போது செய்துபாருங்க. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் சுஸ்ரீ,

நேற்று உங்கள் ப்ரோகோலி மசாலா ட்ரை பண்ணினேன்.. சுவை நல்லா இருந்தது..ஆனா க்ரிஸ்பியா வரல...நீங்க சொல்லியிருக்கற மாதிரிதான் செய்தேன்.. Me and My husband tried Broccoli for the first time and the taste is lingering in my toungh till today... :-))

உங்க ரெசிபி ட்ரை பண்றதுக்குனே ப்ரோகோலி வாங்கினேன்.. சூப்பரா இருந்தது.. ஆனா முறுகலா வந்திருந்தா இன்னம் டேஸ்ட் ஆ இருந்துருக்குமோ?

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சுஸ்ரீ புரோக்லி மசாலா ரொம்ப நல்லா இருந்தது. ஆதே மசாலா வைத்து காலிபிளவரும் டிரை பண்ணினேன் பா சூப்பரா இருந்தது. சப்பாத்திக்கு வித்தியாசமான காம்பினெஷனா நல்லா இருந்தது வாழ்த்துக்கள் பா

பொன்னி

முதலில் தாமதமான என் பதிலுக்கு வெரி சாரி. நீங்க போன வாரமே பதிவு போட்டு இருக்கிங்க, நான் இன்னைக்குதான் பார்க்கிறேன்.

//Me and My husband tried Broccoli for the first time and the taste is lingering in my toungh till today... :-))
//
இந்த ரெசிப்பிக்காகவே ப்ராக்கலி வாங்கி ட்ரை பண்ணி பார்த்து, உங்களுக்கும், உங்க ஹஸ்க்கும் ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லி என்னை ரொம்ப குஷி படுத்திட்டிங்க சங்கீதா! ரொம்ப ரொம்ப நன்றி! :)

க்ரிஸ்ப்பினெஸ் பார்த்திங்கன்னா, மேலே நாம தூவி இருக்கும் அந்த கடலைமாவுக்கலவை எண்ணெயில் வறுபட்டு முறுகலா வருவதில் உள்ள க்ரிஸ்ப்பினெஸ்தான் கிடைக்கும் சங்கீதா. மத்தப்படி காய் மொத்தமும் ரொம்ப முறுகலா இருக்காது, ஏன்னா நாம டீப் ஃப்ரை பண்ணலையே. வெறும் ஷாலோ ஃப்ரையில் கிடைக்கும் அந்த க்ரிஸ்ப்பினஸ் மட்டுமே. அது சரியா வந்துது இல்லையா?! இல்லைன்னா, கடைசியா, மூடியை திறந்து வைத்து வறுக்கும் நேரம், சில நிமிஷங்கள் கூட வைத்து பாருங்க சங்கீதா.

செய்து பார்த்து பதிவிட்ட உங்கள் பின்னூட்ட கருத்துகளுக்கு மீண்டும் மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ப்ராக்கலி ரெசிப்பி செய்து பார்த்து உங்களுக்கு பிடித்து இருந்ததில் மிக்க மகிழ்ச்சி & நன்றி பொன்னி. காலிஃப்ளவரிலும் பண்ணிங்களா?! சூப்பர்..., பாருங்க இப்ப நீங்க இன்னொரு ஐடியாவும் சேர்த்து கொடுத்திருக்கிங்க! :) மீண்டும் நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ,
நேற்று இரவு உங்க ப்ராக்கலி மசாலாதான் சப்பாத்திக்கு.மிகவும் அருமை.இவ்வளவு நாள் செய்யாமல் மிஸ் பண்ணிட்டேன்.சாம்பார் சாதத்துக்கும் நல்லா இருந்தது. நல்ல குறிப்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுஸ்ரீ.

அன்பு சுஸ்ரீ,

அங்கே மகன் வீட்டுக்கு வந்திருந்தப்ப, ப்ராக்கலி அடிக்கடி பொரியல், சூப் செய்வேன். எங்க வீட்டு சாருக்கும் ரொம்பப் பிடிக்கும்.

இங்கே எல்லாக் கடைகளிலும் இது கிடைப்பதில்லை. இந்தக் குறிப்பு செய்யணும்னு நினைச்சிட்டே இருந்தேன். பொன்னி சொல்லியிருந்ததைப் பார்த்து, காலிஃப்ளவரில் இன்று ட்ரை பண்ணினேன். சூப்பராக இருந்தது.

ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் சுஸ்ரீ. இனி அடிக்கடி இந்தப் பொரியல் செய்வேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

சுபஸ்ரீ, என் கணவருக்கு பிரொக்கோலி பிடிக்கவே பிடிக்காது.

நானும் முடிஞ்ச வரைக்கும் காளி-பிளவர் சேர்க்கற சாக்குல இதையும் சேர்த்துடுவேன்.

உங்க குறிப்பு ரொம்ப வித்தியாசமா இருக்கு.. இது கண்டிப்பா செஞ்சு குடுக்க போறேன்.

ஹாய் சுஸ்ரீ,
நலமா,இன்று லன்ச்க்கு உங்க ப்ராக்கலி மசாலா செஞ்சு இருக்கேன்...சுப்பரா இருக்கு...எனக்கும் ப்ராக்கலி ரொம்ப ஃபேவரிட் :)

சுஸ்ரீ,
இன்று சப்பாத்திக்கு உங்கள் ப்ராக்கலி மசாலா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.

ரொம்பவே வித்தியாசமாகவும் இருந்தது :)

மிக்க நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)