நிலக்கடலை சாதம்

தேதி: January 5, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (6 votes)

 

நிலக்கடலை - ஒரு கைப்பிடி
சாதம் - ஒரு கப்
வெங்காயம் - 3
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 4
தாளிக்க:
கடுகு
உளுந்து
வெள்ளைபூண்டு - 8
சீரகம்
கடலைபருப்பு
வெங்காயம் - ஒன்று


 

வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை நடுத்தரமாக வெட்டி நீரில் சேர்த்து நீர் கொதிக்க விடவும்.
நீர் வற்றும் வரை வேகவிட்டு பின் ஆற வைக்கவும்.
அதற்குள் நிலக்கடலையை வெறும் சட்டியில் வறுத்து தோலுரித்துக் கொள்ளவும்.
இரண்டையும் மையாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக தாளிக்கவும்.
பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அரைத்த விழுதை கொட்டி உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பின்னர் அடுப்பை அணைத்து ஆற விடவும். உதிரியாய் வடித்த சாதத்தை ஆற வைத்து அதில் சேர்த்து கிளறவும்
நிலக்கடலை சாதம் தயார். வெள்ளைபூண்டு ஊறுகாய் மற்றும் சிப்ஸ் உடன் சாப்பிட அருமையாக இருக்கும். இந்த பேஸ்ட்டை பிரிட்ஜில் வைத்துக் கொண்டு அவ்வப்போது உடனடி சாதம் தயாரிக்கலாம். தாளிக்காமல் அப்படியே கூட சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

உங்களோட எல்லா குறிப்புமே ரொம்ப அருமையா வித்தியாசமா இருக்கு வாழ்த்துக்கள் இன்னும் நெறையா குடுத்துட்டே இருங்க By Elaya.G

உங்களோட எல்லா சாத ரெசிப்பியும் சூப்பரா இருக்குப்பா, இன்னும் நிறைய ரெசிப்பிஸ் கொடுக்க வாழ்த்துக்கள்.[ அப்புறம் நீங்க பரமக்குடியா நானும் பரமக்குடிதான்] இத இங்க கேட்டதுக்கு சாரிப்பா.

மிக்கநன்றி இளையா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அட... நீங்களும் பரமக்குடியா :-) ஒரே ஊர்க்காரங்கள பாக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்களை எப்படி தொடர்புகொள்வது? விருப்பமிருந்தால் தெரியப்படுத்துங்க.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எனக்கும் ரொம்பசந்தோஷமா இருக்குப்பா.//உங்களை எப்படி தொடர்புகொள்வது? விருப்பமிருந்தால் தெரியப்படுத்துங்க.// எனக்கு தெரியலயே நீங்களே சொல்லுங்க ஆமினா. எப்படி தொடர்பு கொள்வது என்று.

நீங்க பேஸ்புக்ல இருக்கீங்களா? :-) இருந்தால் சொல்லுங்க. ரிக்வஸ்ட் அனுப்புறேன் :-)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நான் இல்லப்பா,ஹஸ் தான் இருக்கார்.

ஆமினா,

வெரைட்டி ரைஸ்சில் ஒரு ஃபுல் ரவுண்ட் வரீங்கப்போல! :) அதுவும் புதுமையா இருக்கு இந்த ‌நிலக்கடலை சாதம்! :) ஐடியா அருமை! நெக்ஸ்ட் வீக்ல ஒரு நாள் லன்ச் பாக்ஸ்க்கு இந்த சாதம் செய்து பார்க்கிறதா முடிவு பண்ணிட்டேன்! :) எப்படி இருந்ததுன்னு வந்து சொல்றேன்.
(அப்புறம் ஒரு சின்ன டவுட்: ஏன் வெங்காயம், தக்காளியை வேகவைத்து அரைக்கனும்? எண்ணெயில் வதக்கி அரைத்தால், சுவை மாறுபடுமா?!)

அன்புடன்
சுஸ்ரீ

ஆம்ஸ், எப்படி இருக்கீங்க? வழக்கமா உங்க ரெசிப்பியை முகப்பில் பார்க்கும் போதே தெரிஞ்சிடும். பேர் வித்தியாசமா இருக்கும். இந்த முறை உள்ளே வந்து பார்த்தாதான் தெரியுது பா. வேர்க்கடலை சாதம். புதுமையான குறிப்பு. வாழ்த்துக்கள் ஆம்ஸ் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

@சங்கீதா
பரவாயில்ல பா. அருசுவையிலேயே அடிக்கடி பாத்துக்கலாம்.

@சுஶ்ரீ
மிக்க நன்றி செய்து பாருங்க. அப்படியும் செய்யலாம் சுஶ்ரீ. இப்படி வேக வைத்து எண்ணெய் தாளிப்பில்லாமல் சட்னி செய்வது ஆந்திராவில் பேமஸ். மீதமான சட்னியில் ஒருநாள் சாதம் கொட்டியதன் விளைவு உருவானதே இந்த குறிப்பு. அதனால் அப்படியே கொடுத்திருக்கேன். நீங்க வதக்கி செய்து எனக்கு சொல்லுங்கள் :-)

@கல்ப்ஸ்
நன்றி கல்ப்ஸ் :-)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா