புதினா புலாவ்

வழங்கியவர் : swarna vijayakumaar

தேதி : வெள்ளி, 06/01/2012 - 15:46

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

3.75
4 votes
Your rating: None
 

 

  • புதினா - ஒரு கட்டு
  • இஞ்சி - ஒரு துண்டு
  • பூண்டு - 7 பல்
  • பட்டை - ஒரு துண்டு
  • கிராம்பு - 2
  • மிளகு - ஒரு தேக்கரண்டி
  • தக்காளி - 2
  • பெரிய வெங்காயம் - 3
  • பச்சை பட்டாணி - ஒரு கப்
  • பச்சைமிளகாய் - 6
  • மஞ்சள்தூள் - சிறிது
  • உப்பு - தேவைக்கு
  • பாஸ்மதி அரிசி - 4 கப்
  • தாளிக்க :
  • நெய் - தேவைக்கு
  • பட்டை - 3
  • கிராம்பு - 3
  • பிரிஞ்சி இலை - ஒன்று

 

 

புதினா, மிளகு, பூண்டு, இஞ்சி, பட்டை, கிராம்பு சேர்த்து அரைக்கவும்.

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நீளமாக நறுக்கவும்.

குக்கரில் நெய் ஊற்றி தாளிக்கும் பொருட்கள் சேர்த்து தாளித்து, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதில் பட்டாணி, அரைத்த புதினா விழுது சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் அரிசியை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.

பின் ஒரு பங்கு அரிசிக்கு 1 3/4 வீதம் தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதித்ததும் வெயிட் போட்டு 8 நிமிடம் வைத்து இறக்கவும். (கொதிக்கும் போது சுவை பார்த்து காரம் தேவையென்றால் மிளகாய் தூள் சேர்க்கலாம்)

சுவையான புதினா புலாவ் தயார். ஆனியன் ரைத்தா, உருளை குருமா பொருத்தமாக இருக்கும். இதே முறையில் மல்லித்தழையிலும் செய்யலாம்

 







நானும் இப்டி தா செய்வேன் மிளகு மட்டும் சேர்க்கமாட்டேன் கொஞ்சம் புதினா அப்டியே சேர்ப்பேன் வாழ்த்துகள் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சுவர்ணா,

புதினா புலாவும், படங்களும், அழகா வந்திருக்கு! வாழ்த்துக்கள்!
கடைசியில் புதினா இலைகளை அரேன்ச் பண்ணியவிதம் அழகா இருக்கு! நடுவில் என்ன, முந்திரியா?! :)

அன்புடன்
சுஸ்ரீ

சுவா, ’புதினா புலாவ்’ வழக்கம் போல படங்கள் அழகில் போட்டி போடுகின்றன. அண்ணாவோட கைங்கர்யமா? ;) சேர்த்துள்ள பொருட்களும் வித்தியாசமான சுவையை சேர்க்கும் என்று நினைக்கிறேன். அலங்காரமும் நல்லா பண்ணியிருக்கீங்க பா. அடுத்த வாரத்தில் செய்துடறேன். வாழ்த்துக்கள் பா :)

நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)

நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்க்கு நன்றி....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரேனு முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுஸ்ரீ வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி,நடுவில் இருப்பது முநதிரி இல்லை சோளம் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கல்ப்ஸ் போட்டோ நான் எடுத்தது தான் பா :)
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப நாட்களுக்கு அப்பறம் வந்த குறிப்பு அசத்தலா இருக்கு. வழக்கம் போட்டோஸ் சூப்பர் நீங்களும் ரொம்ப அழகா போட்டோ எடுக்கறீங்க ஸ்வர். இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க என் வாழ்த்துக்கள்.

கமகமக்கும் புதினா புலாவு... எனக்கு ரொம்ப பிடிக்கும், இங்க எப்பவாது புதினா கிடைக்கும், கிடைக்கும் போது செய்யறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

புதினா புலாவ் செய்யரதுக்கு ரொம்ப ஈஸியா சொல்லி கொடுத்து இருக்கீங்க..... கண்டிப்பா செஞ்சு பாக்கிறேன்...... கடைசி படம் நல்லா இருக்கு........

ரொம்ப நல்லா இருக்கு அக்கா புதினா ரைஸ் இப்போதான் அறுசுவை ல இருந்து கத்துகிட்டு பண்ணேன் உங்க குறிப்பும் ரொம்ப அருமை இந்த வாரம் செய்து பார்த்துட்டு சொல்லுறேன் அக்கா வாழ்த்துக்கள் by Elaya.G

யாழி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா.//நீங்களும் ரொம்ப அழகா போட்டோ எடுக்கறீங்க ஸ்வர்./// நன்றி :))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி மிக்க நன்றி:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ப்ரியா நன்றி,கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இளையா வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இன்னைக்கி என் பொண்ணுக்கு உங்க புதினா புலாவ் தான், ரொம்ப நல்லா இருக்குது . நான் வேற மாதிரி செய்வேன் ,ஆனா அவளுக்கு பிடிக்காது. இது பிடிக்குனு நினைக்கிறேன் . நன்றிகள் பல, இப்படி ஒரு எளிமையான செயல்முறையுடன் உணவு வகை கொடுத்தற்கு.

கலை சாரிங்க இன்னிக்குதான் உங்க பதிவை பார்க்கிறேன்,
செய்து பார்த்தாச்சா நன்றி. உங்களுக்கு பிடிச்சதில் மிக்க மகிழ்ச்சி..:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இன்னைக்கு உங்க புதினா புலாவ் செய்தேன் பா.ரொம்ப சூப்பரா இருந்தது.ஆனியன் ரைத்தாவுடன் சாப்பிட்டோம்.என்னுடைய தோழிக்கும் கொடுத்தேன் அவரும் எப்படி செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார்.ரொம்ப தேங்க்ஸ் ஒரு நல்ல ஈஸியான ரெசிபி எங்களுக்கு சொல்லி கொடுத்ததற்கு.

Expectation lead to Disappointment

ரொம்ப லேட்டா பார்க்கிறேன் சாரி :(
நீங்க செய்து பார்த்து உங்களுக்கும்,உங்க தோழிக்கும் பிடிச்சதில் மிக்க மகிழ்ச்சி சந்தோசத்துல கால் தரையில நிக்க மாட்டேங்குது :)
மிக்க நன்றி மீனாள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.