ஹோட்டல் சாம்பார்

தேதி: January 6, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (30 votes)

 

பெரிய வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
சின்ன உருளைக்கிழங்கு - 6
துவரம்பருப்பு - கால் கப்
புளி - ஒரு சிறு எலுமிச்சை அளவு
மஞ்சள்பொடி - சிறிது
வறுத்து அரைக்க:
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
தேங்காய்த் துருவல் - கால் கப்
பெரிய வெங்காயம் - சிறியது ஒன்று
தக்காளி - பாதி
தாளிக்க
கடுகு - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி


 

சாம்பார் செய்யத் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும். புளியைத் தண்ணீர் சேர்த்து 2 கப் வரும்படி கரைத்துக் கொள்ளவும். துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
இரண்டு தேக்கரண்டி எண்ணெயில் வறுக்கக் கொடுத்துள்ள சாமான்களை வரிசையாக வறுக்கவும்.
தக்காளி, வெங்காயத்தை தனியாக வதக்கவும். அரைக்க தேவைப்படும் தேங்காய் போக மீதியுள்ள தேங்காய் துருவலை 2 தேக்கரண்டி நெய்யில் சற்று சிவப்பாக வறுத்து வைக்கவும்.
வறுத்த பொருட்களுடன் வெங்காயம் தக்காளி மற்றும் 4 தேக்கரண்டி தேங்காய் துருவல் சேர்த்து நைசாக அரைக்கவும்.
இரண்டு தேக்கரண்டி எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய் தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம், பாதி தக்காளி, தோல் நீக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து சற்று வதக்கவும். புளி கரைத்த நீரை விடவும். மஞ்சள்பொடி சேர்க்கவும்.
தேவையான உப்பு போட்டு கொதிக்க விடவும். நன்கு கொதித்து உருளைக்கிழங்கு வெந்ததும் அரைத்த கலவையையும், வெந்த துவரம்பருப்பும் சேர்த்து கொதிக்க விடவும். வறுத்த தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும். சேர்ந்து கொதித்ததும் இறக்கி கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இட்லி, தோசை, பொங்கல், வடையுடன் பரிமாறவும்.
இந்த சாம்பாருக்கு பெரிய வெங்காயம் போட்டு செய்தால் நன்றாக இருக்கும். விருப்பப்பட்டால் சின்ன வெங்காயம் சேர்த்து செய்யலாம். சாம்பார் கொஞ்சம் நீர்க்க இருந்தால்தான் இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும். ஹோட்டல் சாம்பாரைவிட இது இன்னும் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல குறிப்பு ஆன்ட்டி. என் கணவருக்கு மிகவும் பிடித்த அயிட்டம் சாம்பார்.இட்லி, தோசைக்கு சூப்பர் காம்பினெஷன்.பார்க்கும் போதே சுவை தெரிகிறது.உங்கள் வீட்டு குட்டி பாப்பா நல்ல cute.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கும், அறுசுவைக் குழுவினருக்கும் மிக்க நன்றி...
வாழ்த்துக்களுக்கு நன்றி சுமி...

double wow wow......unga sambar super...atha vida unga papa super.....

All is well...

வாழ்த்துக்கள்.ஆன்ட்டி சாம்பார் சூப்பரா இருக்கு. பார்க்கவே அப்படியே எடுத்து சாப்பிடணும் போல இருக்கு. குட்டி பாப்பாவும் சம் க்யூட்டா இருக்காங்க.

அசத்தல் சாம்பார் செய்து காண்பித்திருக்கிங்க. அருமை!
நான் வீட்டில் செய்யும் அரைத்துவிட்ட சாம்பார் ரெசிப்பி கிட்டத்தட்ட (மிகச்சிறிய மாற்றங்களுடன்) இதேபோலத்தான் இருக்கும். நல்ல குறிப்பு, வாழ்த்துக்கள்!

உங்க பேத்தி செம க்யூட்டா இருங்காங்க! :)

அன்புடன்
சுஸ்ரீ

ராதாம்மா, ஹோட்டல் சாம்பார் குறிப்பு அருமை. செய்முறை விளக்கங்கள் மற்றும் படங்கள் நன்றாக உள்ளன. போட்டோவில் உள்ள குட்டி சாம்பாரை டேஸ்ட் பண்ணி, எவ்ளோ சந்தோஷமா சிரிக்குது. அப்ப கண்டிப்பா நல்லாவே இருக்கும் போல :) குட்டியும் சூப்பர்.வாழ்த்துக்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹோட்டல் சாம்பார் சாதாரண சாம்பாரை விட அரைத்து செய்த சாம்பார் டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும். நீங்க தேங்காய் எல்லாம் நெய்யில் வறுத்து சேர்த்து இருக்கீங்க சுவை பற்றி சொல்ல தேவையில்லை ரொம்ப நல்லா இருக்கும் நினைக்கிறேன். உங்க பேத்தி சம க்யூட். நாளை எப்படியும் வீட்டுல சாம்பார்தான் உங்க முறைப்படி செய்துபார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

ஷோனு, நசீம், சுஸ்ரீ, கல்பனா, வினோஜா....அனைவருக்கும் நன்றி என் குறிப்பையும், அதைவிட என் பேத்தியையும் பாராட்டியதற்கு!!!
வினோஜா....செய்து பார்த்து சொல்....

வனக்கம் ராதாம்மா............ நான் அருசுவைல புதுசு....உங்க ஹோட்டல் சாம்பார பார்தேன்,நான் இன்னிக்கி சாம்பார் தான் வைக்க்லாமுனு இருக்கேன்.இன்னிக்கு உங்க சாம்பார் தான் எங்க வீட்டுல.........அந்த பாப்பா உங்க பேத்தி ஆ என் பொன்னுமாதிரிஎய் இருக்கா........பேத்தி பெயர் என்ன....பாப்பாவும் சூப்பர் சாம்பாரும் சூப்பர் ராதாம்மா....................................

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

நன்றி கவிதா....என் பேத்தி பேரு ப்ரீத்தி....அவசியம் இன்னிக்கு சாம்பார் செய்து பார்த்துட்டு சொல்லும்மா...உன் பொண்ணு பேர் என்ன?

ராதாம்மா என் பெயர் கவிதா. எனக்கு 2 பசங்க.1 பையன், 1பொன்னு. நான் சௌதில இருக்கேன் மா,இல்லதரசி தாம்மா...........இன்னிக்கு சாம்பார் வச்சுட்டு நாலைக்கு கன்டிப்பா சொல்ரேன் மா..............உங்க பேத்தி அ கேட்டதாக சொல்லுங்கமா..........

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

பொன்னு பெயர் ரியாஷினி ,பையன் பெயர் அஜய் ஷாகர் மா.............

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

ராதாம்மா சாம்பார் புதுவிதமா இருக்குதுங்கம்மா வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சூப்பரா இருக்குமா பார்க்கவே, நிச்சயம் சுவையும் நல்ல இருக்கும்னு தான் நினைக்கிறேன் நாளைக்கு செய்துட்டு சொல்றேன் ராதாம்மா. ப்ரீத்தி அழகா சிரிக்கிறாம்மா. soooooooo cute

நல்ல வாசமான சாம்பார்ன்னு பார்த்தாலே தெரியுது :) செய்துடுவோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனக்கம் ராதாம்மா,,,,,,,,,,,,,,, நேத்து நைட் எங்க வீட்டுல உங்க சாம்பார் தான்..........ட்ரை பன்னிபார்த்தேன் ரொம்ப அருமையா இருந்தது.....இட்லிக்கு சூப்பரா இருந்துச்சுமா,,,,,,,,,,,,,,,,,,,,,,

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

ராதாம்மா நேற்று உங்க சாம்பார் செய்தேன். ரொம்ப நன்றாக இருந்தது. உங்க பேத்தி ரொம்ப அழகு.

அன்புடன்
மகேஸ்வரி

அருமையான சாம்பார் ஆன்ட்டி நேரம் கிடைக்குரப்போ செய்து பார்த்துவிட்டு சொல்லுறேன் வாழ்த்துக்கள் by Elaya.G

ஸ்வர்ணா....நலமா?எங்க உன்னை ரொம்ப நாளா காணும்? வாழ்த்துக்கு நன்றி...

முகில்....உன் பாராட்டை ப்ரீத்திட்ட சொல்லிட்டேன்! சாம்பார் செய்தியா? நன்றாக இருந்ததா?

வனிதா....நான் சமையலில் உங்க அளவுக்கெல்லாம் எக்ஸ்பர்ட் இல்ல....ஏதோ கொஞ்சம் செய்வேன்....உங்க பாராட்டுக்கு நன்றி...

கவிதா, மஹேஸ்வரி....செய்து பார்த்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி...
மஹேஸ்வரி....என் பேத்தி என்னோட ஜாடையாக்கும்!

இளயா....அவசியம் செய்து பார்த்து விட்டு சொல்லு...

I tried it.It came out very well.Thanks for sharing

வாழ்த்துக்கும்,உங்கள் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சுஜாதா...

உங்க ஹோட்டல் சாம்பார் நேற்று செய்தேன்.சூப்பர் சுவை.என் கணவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.இனி கண்டிப்பா உங்களுடைய இந்த குறிப்பு எங்க வீட்டு மெனுவில் இடம்பெறும்.நன்றி.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.