vodafone எச்சரிக்கை

அன்பு தோழிஸ்.....

vodafone நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.....

vodaphone வாடிக்கையாளர்கள் இந்த நம்பரில் இருந்து வரும் ISD missed கால்ஸ்சை தவிர்க்கும்படி கூறியுள்ளது..... +22455XXX இந்த ISD நம்பரில் இருந்து வரும் missed கால்ஸை கண்டு நீங்கள் மறுபடியும் அதே நம்பருக்கு தொடர்பு கொண்டால் உங்கள் மொபைல் பாலன்சில் இருந்து ஒரு நிமிடத்திற்கு 45 ருபாய் போய்விடும்..... இப்படி பலபேர் தங்கள் அக்கௌண்டில் உள்ள பணத்தை இழந்து vodaphone நிறுவனத்திடம் புகார் தெரிவித்து உள்ளனர்....

இரண்டு வருடங்களுக்கு முன்னாள் Airtel நிறுவனமும் +92 இந்த நம்பரில் இருந்து வரும் missed கால்ஸை தவிர்க்கும்படி எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..... இதில் முக்கியமான விஷயம் உங்கள் மொபைலில் உள்ள முக்கியமான தகவல்களும் இதன் மூலம் அவர்கள் திருடும் வாய்ப்பும் உள்ளது....

அதனால் எச்சரிக்கையாக இருங்கள்.... இந்த தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்......

தீப்ஸ், நம் தோழிகளுக்கு மிகவும் பயனுள்ள தகவலை தந்ததற்கு நன்றி. முதல்ல ஊருக்கு போட்டு அக்கா,தங்கச்சி,அம்மாவுக்கெல்லாம் சொல்லனும். எப்படியெல்லாம் கிளம்புறாங்கப்பா!!! எப்படிதான் யோசிப்பாங்களோ ;(

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தீப்ஸ் பயனுள்ள தகவல்ப்பா இந்த விசயம் தெரிஞ்சதும் எல்லோரிடமும் ஷேர் பன்னிக்கனும்னு நினைச்சதுக்கு நன்றிப்பா. எல்லோரும் உஷாரா இருந்துக்குங்கோ.......:((

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

புதுசு புதுசா களவானி தனத்தை கண்டுபிடிக்கிறாங்க...... அதுல இது லேட்டஸ்ட் போல எங்க ஆபீஸ்க்கு மெயில் மூலம் vodafone நிறுவனம் இந்த தகவலை அனுப்பினாங்க பலபேர்க்கு இதை பற்றி தெரிவதற்கு வாய்ப்பு இல்ல....
போஸ்ட் பெய்டு மொபைல் கனெக்க்ஷன்னா இருந்தா பில் வந்த பிறகு தான் இதுல தங்கள் பணத்தை இழந்த விஷயமே தெரியும்..... அதுதான் தகவலை உடனடியாக பகிர்து கொண்டேன்...... நீங்க முடிந்த அளவுக்கு இந்த தகவலை அனைவருக்கும் தெரியபடுத்தவும்......

நன்றி ஸ்வர்ணா..... எங்க ஆபீஸ்ல இந்த தகவல் வந்ததற்கு அப்பறம் தான் பலபேர் ஏமாந்த விஷயமே தெரிய வந்தது...... எங்க டீம்லேயே இந்த ISD missed கால்ஸ் ரெண்டு பேர்க்கு வந்து இருக்கு அதுவும் நள்ளிரவுக்கு மேல்...... அதில் ஒருவர் அந்த நம்பருக்கு திரும்பவும்
கால் செய்து பார்த்து இருக்காங்க..... ரிங் எதுவும் போகவில்லையாம்..... அவர் பணம் எவ்வளவு போய் இருக்கோ.....
பில் வந்த பிறகு தான் தெரியும்...... இந்த மோசடி மூன்று நாட்களுக்கு முன்னர் வடநாட்டில் ஆரம்பித்து இப்போது சென்னைக்கும் வந்து விட்டது.....
அனைவரும் உஷாராக இருங்கள்...... உங்களுக்கு தெரிந்த வருக்கும் இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்......

மேலும் சில பதிவுகள்