ஃபோளி

தேதி: January 7, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (10 votes)

 

மைதா மாவு - ஒரு கப்
சர்க்கரை (பொடித்தது) - சுவைக்கு
பால் + நீர் (அ) பால் (அ) கண்டன்ஸ்டு மில்க் - தோசை மாவு பதத்துக்கு கரைக்க
முட்டை - ஒன்று
வெண்ணெய் - தேவைக்கு


 

மைதா மாவில் பொடித்த சர்க்கரை, கண்டன்ஸுடு மில்க் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.
ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து வைக்கவும்.
அடித்த முட்டையை மைதா கலவையில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
தோசை மாவை கல்லில் ஊற்றி மெல்லியதாக தேய்த்து மேலே பட்டர் தேய்க்கவும்.
இதை திருப்பி போட கூடாது. சிறுந்தீயில் நன்றாக வேகவிட்டு சுருட்டி எடுக்கவும்.
இப்போது சுவையான ஃபோளி தயார். செய்வது மிக சுலபம், சுவை பிரமாதம்.
மாலத்தீவு சமையலில் பல வருட அனுபவம் உள்ள திருமதி. சித்ரா அவர்கள் செய்து காட்டியது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனிக்கா சூப்பர்ப் ப்ரசண்டேஷன். அதோட குறிப்பும் ரொம்ப ஈஸியா இருக்கும் போல தெரியுது என்னை போல கத்துகுட்டிலாம் கூட செய்யலாம் போல, முயற்சிக்கிறேன் சித்ரா அவங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிச்சுடுங்க.

பூரணம், மைதா மாவு வைச்சு செய்யறது எவ்வளவு கஷ்டம். சித்ரா மேடம் இந்த போளி செய்முறை ரொம்ப ஈஸியா இருக்கு வாழ்த்துக்கள். இதை அழகா படம் பிடிச்சு எங்களுடன் பகிர்ந்து கொண்ட வனிக்கு என் நன்றி.

tamilil eppadi type seiyanum....

ஈசியான அசத்தல் குறிப்பு. வாழ்த்துக்கள். சித்ராக்கா சூப்ப்ரா இருக்கு. ப்ரசண்டேஷன் அதைவிட சூப்பர். வனிதாக்கா வாழ்த்துக்கள். நிறைய குறிப்புகள் கத்துக்கிட்டீங்க போல.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப தேன்க்ஸ் யாழ். சித்ராம்மா ஊரில் இல்லை, வந்ததும் படிக்க சொல்லி எல்லாம் காட்டிடுறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. இது போளி இல்லை ஃபோளி (folhi). இது போல நான் கோதுமையில் செய்வேன், இவங்க மைதா முட்டைன்னு புது விதமா செய்யறாங்க. ரொம்ப சுலபம். செய்து பாருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. கத்துக்குறேன்... கொஞ்சம் கொஞ்சம். :) ஈஸியா இருக்கு இந்த ஊர் சமையல்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இதே பக்கத்தில் கீழே தமிழ் எழுத்துதவி இருக்கு பாருங்க. அந்த லின்க் போனா தமிழில் தட்டலாம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்த்துக்கள் மாலினி மற்றும் வனிதாக்கா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரொம்ப எளிமையா புதுமையா இருக்கு.. இதை கண்டிப்பா செய்து பார்ப்பேன் நான்...சித்ரா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை சேர்த்து விடுங்கள் வனி.. :)

வாவ்... அசத்தலா இருக்கு ப்ரசண்டேஷன்! லவ்லி! :)

குறிப்பும் படு ஈசியா, அருமையா இருக்கு! (இங்கே Crepe-நு ஒரு டெஸர்ட் ஐய்ட்டம் செய்வாங்க, கிட்டத்தட்ட நம்ம ஃபோளிதான் அது!) கண்டிப்பா ப‌சங்களுக்கு பிடிக்கும். ட்ரை பண்ணி பார்க்கிறேன். ‌வாழ்த்துக்கள் உங்களுக்கும், சித்ரா அவர்களுக்கும். நன்றி!

பி.கு. பனீர் ப்ரட் ரோலில் பின்னூட்டம் கொடுத்திருக்கேன்.அப்புறமா பாருங்க. :)

அன்புடன்
சுஸ்ரீ

ஃபோளி பார்க்கவே சாப்டனும் போல இருக்கு கண்டிப்பா செஞ்சி பார்ப்பேன் ஆமா அதுக்கு மேலே என்ன தூவி இருக்கிங்க..

அன்புடன்,
zaina.

நெஜமாவே ரொம்ப சுலபமான குறிப்புகளா தான் இருக்கு பாண் போகிபா நேற்று செய்து பார்த்தேன் சூப்பரா இருந்தது ரொம்ப ஜாலி எல்லோரும் நல்லாருக்குன் சொன்னாங்க ரொம்ப நன்றி அக்கா.
நா உங்களுக்கு போட்டோஸ் அனுப்பி வைக்கறேன்.
இன்னும் நிறையா குறிப்பு கத்துகிட்டு எங்களுக்கும் சொல்லிகுடுங்க
வாழ்த்துக்கள்
சித்ரா அக்கா கருப்பா கலையா இருக்கீங்க உங்களோட குறிப்பு ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள் By Elaya.G

உங்க போலி பார்ததும் செய்யதோனுது.எளிமையான குறிப்பு கொடுத்ததுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

குறிப்பு நல்லா இருக்கு வனி. ட்ரை பண்ணுறேன்.

‍- இமா க்றிஸ்

ஆமினா... மிக்க நன்றி. எனக்கு வாழ்த்து சொன்னது சரி... மாலினிக்கு எதுக்கு சொன்னீங்க??? எனக்கு புரியல ;)

சாந்தினி... மிக்க நன்றி. அவசியம் சொல்றேன். சித்ராம்மா ஊரில் இல்லை, வந்ததும் சொல்லிடுறேன்.

சுஸ்ரீ... மிக்க நன்றி. இதே போல் அந்த நாட்டில் ஒரு உணவா?? குட் குட்... சித்ராம்மா ஊரிலிருந்து வந்ததும் முதல் வேலையே இதெல்லாம் படிக்கூறது தான் :)

ஸைனா... மிக்க நன்றி. மேலே பிஸ்தா பொடியா நறுக்கி தூவி இருக்கேன். :)

இளையா... மிக்க நன்றி. அவசியம் அவங்க வந்ததும் உங்க எல்லாம் பின்னூட்டமும் படிப்பாங்க. அவங்களுக்கு அவ்வளவு இண்ட்ரஸ்ட் இந்த குறிப்பேல்லாம் அறுசுவையில் வருவதில். போகிபா நல்லா வந்ததா... அப்பா... மகிழ்ச்சியா இருக்கு. படம் அனுப்புங்க காத்திருக்கேன்.

சுபா... மிக்க நன்றி. அவசியம் செய்துட்டு சொல்லுங்க. :)

இமா... மிக்க நன்றி. கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி ஈசியான ஃபோளி பார்க்கவே நல்லாருக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி. சுலபமானது சுவையானது. அவசியம் செய்து பாருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிக்கா இன்று மாலை உங்கள் போளி செய்தேன் இலகுவாகவும் நல்ல சுவையாகவுமிருந்தது.போளி ப்லேட் உடனே காலியாகிவிட்டது.

அட... உடனே செய்துட்டீங்களா... ரொம்ப குஷியா இருக்கு :) மிக்க நன்றி கீஃபா, செய்ஹ்டு பார்த்து உடனே பதிவிட்டமைக்கு. சித்ரா பார்த்தா என்னை விட அதிகமா சந்தோஷப்படுவாங்க. உங்க பதிவெல்லாம் காட்டுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

romba nalla irruku irruku pa kuripu

http://alltamilbuzz.blogspot.in/

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மேடம்,

குட்டீஸ்க்கு பிடிக்கும் விதத்தில் செய்து இருக்கீங்க...
சுஸ்ரீ சொல்வது போலே இதனுள் ஐஸ்கிரீம் மற்றும் பழங்கள் சேர்த்து இங்கே தருவாங்க..
வாழ்த்துக்களை சித்ராவிடமும் சொல்லிடுங்க..

என்றும் அன்புடன்,
கவிதா

மிக்க நன்றி. இதே போல் ஒரு இனிப்பு சீஸ் ஸ்டஃப் பண்ணி சிரியாவில் உண்டு. எல்லா நாட்டிலும் இது போல் உண்டு போலும். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா