இடித்த ரசம்

தேதி: January 7, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

 

புளி - நெல்லிக்காய் அளவு
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 2
கொத்தமல்லி - 2 கொத்து
பூண்டு - 1
கறிவேப்பிலை - ஒரு கொத்து
வெங்காயம் - ஒன்று
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகுதூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்புதூள் - தேவைக்கு


 

புளியை சுடுநீரில் ஊற வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
தக்காளி, பூண்டு, பச்சைமிளகாய், கொத்தமல்லி ஆகிவற்றை அம்மியில் இடித்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, வெங்காயம் தாளிக்கவும்.
பின் இடித்த விழுதை சேர்க்கவும்.
வதங்கியதும் தூள் வகைகளை சேர்த்து நன்கு கிளறவும்.
பின் கரைத்த புளிக்கரைசலை சேர்த்து நுரை பொங்கும் போது அணைத்து விடவும்.
இடித்த ரசம் தயார். மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரசம் செய்முறை நல்லா இருக்கு ஆமி. கொடுத்திருக்கும் அளவு பொருளுக்கு எத்தனை டம்ளர் தண்ணீர் சேர்க்கனும்.

ஆமினாக்கா ரசம் அப்படியே குடிக்கனும் போல இருக்கு. . ஒரு நாள் செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்கா. வாழ்த்துக்கள்.மிக்சியில அரைக்கலாமா ?

2 கப் நீர் சேர்க்கலாம் (அரை லிட்டர்)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அம்மியில்/குழவியில் இடித்துக்கொள்ளும் போது பாதியாக இடிக்க முடியும். கிரண்டரில் அரைத்தால் (தக்காளீ இருப்பதால் ) நைசாகிவிடும். அதுக்காக தான். ஒரு கப்பில் இவைகளை போட்டு மத்து உதவி கொண்டு இடித்து செய்து பாருங்க நஜீம்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

என் கிட்ட சின்ன உரல் மாதிரி இருக்கு. பூண்டு நைக்கிறது அதில செய்யலாமா?

உரல்ல தான் குழவின்னு சொல்லிட்டேனோ :-) தாராளமா அதுலையே செய்யுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நல்லா இருக்கு இந்த வகை. நான் இடிச்சு ரசம் வைப்பேன், ஆனா அது வேறு விதம், பொருட்கள் இது வேறு. கண்டிப்பா செய்து பார்க்கிறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முழு நேர வேலையா சமைக்குரதுல இறங்கிடின்களா ரொம்ப நல்ல இருக்கு எனக்கு ரசம் ரொம்ப பிடிக்கும் எங்க வீட்டுல நா செய்ற ஒரே சமையல் ரசம் மட்டும் தான் அதான் தெரியும் எனக்கு இந்த மாதிரியும் செய்து பார்கிறேன் மிக்க நன்றி by Elaya.G

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினாக்கா இன்னைக்கு உங்க ரசம் தான் வச்சேன். சாப்பிட்டு பதிவு போடுறேண். சூப்பரா இருந்துச்சு. இது முறை கொஞ்சம் புதுசா இருக்கு. ஆனா டேஸ்ட் சூப்பர். வாழ்த்துக்கள். நல்ல புதுசு புதுசா யோசிக்கிறீங்க. தொடரட்டும் உங்கள் பணி.

ஆமி,
ரசம் வாசமா இருக்கு..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா